Thursday, October 20, 2011

திருச்சி மேற்கு இடைத்தேர்தல்: அ.தி.மு.க., வெற்றி

திருச்சி: திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றுள்ளது. திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., மரியம் பிச்சை மறைவையடுத்து அங்கு கடந்த 13ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில் பரஞ்சோதியும், தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவும் போட்டியிட்டனர். இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று காலை திருச்சி சாரநாதன் இன்ஜினியரிங் கல்லூரியில் எண்ணப்பட்டன. மொத்தம் 18 சுற்றுகள் எண்ணப்பட்ட நிலையில், 11வது சுற்று தவிர மற்ற அனைத்து சுற்றிலும் அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதியே முன்னிலை வகித்தார். 11வது சுற்றில் கே.என். நேரு 219 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். ஓட்டு எண்ணிக்கையின் முடிவில், அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்சோதி 68 ஆயிரத்து 804 ஓட்டுகளும், தி.மு.க., வேட்பாளர் கே.என். நேரு 54 ஆயிரத்து 196 ஓட்டுகளும் பெற்றுள்ளார். இதையடுத்து 14 ஆயிரத்து 608 ஓட்டுகள் அதிகம் பெற்று பரஞ்சோதி வெற்றி பெற்றார். அ.தி.மு.க., வேட்பாளரின் வெற்றியை தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

print