Monday, February 28, 2011

கனிமொழி எஸ்டேட் : ஜெ., அறிக்கை

சென்னை : "கோத்தகிரியில் உள்ள விண்ட்சர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள், "கனிமொழி எஸ்டேட்' என்று தான் அழைக்கின்றனர்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராடியா டேப் விவகாரம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.அதில், சமீபத்தில் கோத்தகிரியின், "விண்ட்சர் எஸ்டேட்'டை "கனிமொழி எஸ்டேட்' என உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் அன்று வெறும் 2 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. விண்ட்சர் எஸ்டேட்டின் ஆவணத்தில் சென்னை தி.நகர், 12, சவுத் வெஸ்ட் போக் ரோடு என்ற முகவரியில் வசிக்கும் சேஷாத்ரியின் மகன் சீனிவாச ரத்னம் என்பவர் சாட்சிக் கையெழுத்து போட்டிருக்கிறார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

பெண்களுக்கு 50 சதவீதம்: சரத் பவார் வலியுறுத்தல்

மும்பை : உள்ளாட்சி நிர்வாகங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று மத்திய விவசாயத்துறை அமைச்சரும், தேசிய வாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவார் கூறியுள்ளார். தேசிய வாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய, மாநில அமைச்சர்களின் கூட்டம் நேற்று அக்கட்சித் தலைவர் சரத்பவார் தலைமையில் நடந்தது.


அப்போது, வரும் 8ம் தேதி, சர்வதேச பெண்கள் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மகாராஷ்டிராவில், உள்ளாட்சி நிர்வாகங்களில், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 33 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் பிரிதிவிராஜ் சவானிடம் வலியுறுத்த வேண்டும் என்று சரத்பவார் தெரிவித்தார். இந்த கூட்டத்தில், 27 ஜில்லா பரிஷத் மற்றும் 10 நகராட்சிகளில் நடக்க உள்ள, தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜெயலலிதாவிடம் கட்சி வளர்ச்சி நிதி

சென்னை : புதுச்சேரி, மதுரை மற்றும் காஞ்சிபுரம் அ.தி.மு.க., நிர்வாகிகள் சார்பில், கட்சி வளர்ச்சி நிதி நேற்று அளிக்கப்பட்டது. அ.தி.மு.க., தலைமை கழக செய்திக்குறிப்பு: புதுச்சேரி மாநில அ.தி.மு.க., செயலர் அன்பழகன், மதுரை மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலர் டேவிட் அண்ணாதுரை மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலர் கந்தன் ஆகியோர், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர். அப்போது, கட்சியின் வளர்ச்சி நிதியாக முறையே 51 லட்சம், 8 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் 10 லட்சத்து எட்டாயிரம் ரூபாயை ஜெயலலிதாவிடம் வழங்கினர்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: விஜயகாந்த் புது யோசனை

சென்னை : "ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை குறுக்கீடு இல்லாமல், முறையாக நடக்க வேண்டுமெனில், முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி விலக வேண்டும். அவர் பதவி விலக மறுத்தால், மத்திய அரசு தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்து, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்' என்று தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், சி.பி.ஐ., நடத்தும் குற்றப் புலனாய்வை சுப்ரீம் கோர்ட் நேரடியாக கண்காணிக்கிறது. கடந்த 10ம் தேதி, குற்றப் புலனாய்வு குறித்து, சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்த போது, "இந்த ஊழல் பணத்தில் பலன் அடைந்தவர்களை தேடிப் பிடிக்க வேண்டும். எவ்வளவு பெரிய முக்கியஸ்தர்களாக இருந்தாலும், அவர்களை விட்டு விடக்கூடாது' என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் கலைஞர், "டிவி'க்கு முதலீடாக வந்துள்ளது என்பதும், பின்னர் கலைஞர், "டிவி' அந்த பணத்தை கடனாகக் கருதி திருப்பி தந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த ஊழல் வழக்கில் தொடர்புடைய எஸ்டெல் நிறுவனத்தின் பணமும், "கலைஞர் டிவி'க்கு வந்துள்ளதாக தெரிகிறது. முதல்வர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் இந்த ஊழல் பணத்தின் மூலம் பலன் அடைந்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் சி.பி.ஐ., விசாரணை குறுக்கீடு இல்லாமல், முறையாக நடக்க வேண்டுமெனில் முதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி விலக வேண்டும்.

அவர் பதவி விலக மறுத்தால், மத்திய அரசு தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்து, தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசும் இந்த ஊழலுக்கு உடந்தை என்றே மக்கள் கருதுவர். தி.மு.க., அரசை டிஸ்மிஸ் செய்வதன் மூலம், தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை ஏற்படும். ஏற்கனவே உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் தி.மு.க., கடை பிடித்த போக்கை அறிந்துள்ள மக்களும் இதை வரவேற்பர். இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் பங்கு கொடுத்தால் தான் வெறுப்பை மறந்து தேர்தல் பணி : இளங்கோவன்

திருவாரூர்:""ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் வெறுப்பை மறந்து தேர்தல் பணியில் ஈடுபடுவர்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசினார்.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டம் நடந்தது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பங்கேற்று பேசியதாவது:காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி என்று தொண்டர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, தி.மு.க.,வுடன் தான் கூட்டணி என, மேலிடத்தின் கசப்பான முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.தொகுதி பேச்சுவார்த்தையின் போது நிருபர்களிடம், "காங்கிரஸ் 234 தொகுதியையும் கேட்கிறது' என, கருணாநிதி கூறியுள்ளார். மூத்த அரசியல்வாதி; அவர் கூறியதை கேலி, கிண்டலாக ஏற்றுக் கொள்ள முடியாது. உண்மையைத்தான் அவர் கூறியுள்ளார். அவர் கூறுவதுபோல, எங்களுக்கு 234 தொகுதியும் வேண்டும்; பாதி கொடுத்தாலும் போதும். கண்டிப்பாக ஆட்சியில் 50 சதவீதம் அல்லது மூன்றில் ஒரு பங்கு அமைச்சர் பதவி வேண்டும்.

துணை முதல்வர், முதல்வர் பதவி கேட்கவில்லை. அமைச்சர்களை மட்டும் தான் கேட்கிறோம். கூட்டணி அமைத்து போட்டியிடும்போது, ஓட்டளிக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இதுவரையில் எந்தவித உதவியையும் செய்ய முடியவில்லை. குறிப்பாக ஒரு அங்கன்வாடி பணியாளர் நியமனத்துக்குக்கூட பரிந்துரை செய்ய முடியவில்லை. "கொடுப்பதை கொடுத்து விட்டு, தர வேண்டியதை பெறு' என, தொண்டர்களைப் பார்த்து நாங்கள் கூறும் வகையில் உள்ளோம்.

டில்லியில் ஒரு நீதி, தமிழகத்தில் ஒரு நீதியாக இருந்து வருகிறது. மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் சுயாட்சி என்ற பேசியே பழகியவர்கள் தமிழகத்தில் உள்ளனர். எனவே, வரும் சட்டசபைத் தேர்தலுக்குப்பின், கண்டிப்பாக ஆட்சியில் பங்கு பெற்று, அதன் மூலம் காங்கிரஸ் தொண்டர்களுக்கு செய்ய வேண்டியதை செய்வோம்.ஆட்சியில் பங்கு கொடுத்தால் மட்டுமே காங்கிரஸ் தொண்டர்கள் வெறுப்பை மறந்து தேர்தல் பணியில் ஈடுபடுவர். கடந்த ஐந்தாண்டுகளில் மெஜாரிட்டி இல்லாவிட்டாலும் காங்கிரஸ் துணையுடன் ஆட்சி செய்து வந்த தி.மு.க.,வால், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எந்த ஒரு ஏழையும், எந்த ஒரு பயனையும் அடையவில்லை. எனவே, வரும் தேர்தலுக்குப்பின், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைவர் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்டத்தலைவர் துரைவேலன், விவசாய பிரிவு செயலாளர் ராஜதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.

Sunday, February 27, 2011

DMK, Congress ‘agree' on power-sharing

Although the talks between the Congress and the DMK got stuck on the issue of the number of seats, leaders of both parties reported “forward movement” on the issue of power-sharing.
A senior Congress leader involved in the talks said the DMK had “informally” agreed to the proposal for power-sharing.
However, while the DMK does not want a pre-election formal agreement on the issue, the Congress is adamant that a firm commitment on a coalition government be made right now.
“We want them to declare this (power-sharing) openly,” another Congress member said.
The toughening of the Congress position on seat-sharing for the Assembly election was made possible by the full backing of AICC president Sonia Gandhi, and party general secretary Rahul Gandhi, it is learnt.
On Friday, when leaders of the DMK and the Congress came to the negotiation table, the Congress team, led by Union Home Minister P. Chidambaram, made it clear that his party would not settle for anything less than 90 seats.
The DMK leaders were not prepared for the “substantial increase” as they claimed to have only 53 seats to offer.
The Congress leaders expressed their inability to accept the offer and left Anna Arivalayam without meeting Chief Minister M. Karunanidhi.
“We have been asked by Sonia Gandhi not to climb down from any of our demands. She, in fact, shot down the proposal of one of the five leaders of the committee for a more pragmatic approach during talks,” one of the members of the Congress seat-sharing committee said.
Another member said the high command was upset that the DMK leadership sealed the pact with PMK before finalising seat-sharing with the Congress.
When the issue was raised during the talks, one of the DMK leaders argued that they wanted to pre-empt the PMK from switching over to the AIADMK alliance. Mr Chidambaram reacted strongly to this explanation. “Do you take us for granted because we will not switch camps,” he is reported to have asked.
Though the Congress has taken a strident line, party leaders feel that the alliance with the DMK was unlikely to take a turn for worse. “We cannot leave the alliance now.
This is not the time for experiment. If we were really interested in a third front we should have made preparations at least six months ago,” a leader said.
The committee members would brief Ghulam Nabi Azad, in-charge of party affairs in Tamil Nadu.

How not to tackle the black economy in India ?

Technically, we know how to check the black economy but the problem is political. More studies or committees and treaties with foreign governments are only to stall action.
Another Joint Parliamentary Committee has been announced. The government has been trying to create an impression of being proactive with regard to tackling the black economy. The President's address and the speech by Sonia Gandhi in January mentioned the need to curb it. The Prime Minister at various fora, while expressing helplessness, has emphasised action. The Supreme Court has been applying pressure to tackle black savings spirited out of the country and for unearthing wrongdoings in cases of corruption like the 2G spectrum allocation case. Home Minister P. Chidambaram admitted in Davos that in road construction, 50 per cent of the funds are misappropriated. He has stated that there is deficit in governance and ethical functioning of government and the Prime Minister has endorsed this. Finance Minister Pranab Mukherjee has announced studies into different aspects of the black economy and a Group of Ministers has been set up to tackle the problem. Talks are on for Double Taxation Avoidance Agreements (DTAA) with various countries — supposedly to unearth wealth kept abroad by Indians.
Is the government finally serious about bringing back the black funds stashed away abroad, variously estimated to be between $ 462 billion and several trillions of dollars? These figures seem credible when one considers the scale of the current scams (tens of billions of dollars) and the case of Hasan Ali where the tax demand runs into billions of dollars. The CD containing names of Indians with bank accounts in the LTG bank which the Indian government accepted in March 2009, a year-and-a-half after it was offered by the German government, has added to the pressure on the government. There are 77 tax havens where illegal funds are stashed away; Switzerland is only the biggest and best known.
The government's actions seem to be in direct proportion to the public pressure on it as exposes come in thick and fast. The problem is not new, so what explains the earlier inaction? Consider Bofors or the 2G spectrum case. Initially there has been denial and then minimal action, allowing the culprits time to escape (as in Hasan Ali's case where the money has disappeared). Rs.35 lakh crore in black income is generated annually and about 10 per cent of it goes abroad. The capital lost through this route is greater than annual net foreign investment, yet action is minimal.
The government pleads that tax havens do not reveal names unless criminality is established and that the Swiss government does not treat tax evasion as a crime. The moot point is why did the Swiss government announce the immediate freezing of Hosni Mubarak's assets without the Egyptian government giving any evidence of criminality? Further, why did UBS agree first to give the names of 250 U.S. citizens and then another 4,500 names to the U.S. tax authorities in 2007-08 without any criminality being individually established? In the Hasan Ali case, the Swiss government has said that it has not been given the information required. Similarly, in Ottavio Quattrocchi's case, the Indian government has twice lost in foreign courts because the case has not been properly established. In 1992, Madhavsinh Solanki, then Minister of External Affairs, passed on a chit to a Swiss Minister apparently to slow down the Bofors case but the Narasimha Rao government quietly buried the embarrassment by accepting his resignation. The few cases of corruption initiated against the high and mighty are apparently spoilt or not pursued.
Given this history, will there be seriousness this time or will the government wait out the storm? In the last 60 years, dozens of committees have studied various aspects of the black economy and given thousands of suggestions. Hundreds of these suggestions have been implemented but the size of the black economy has grown exponentially. The Wanchoo Committee report bulges with suggestions. Since 1971, when the highest tax rate was 97.5 per cent, tax rates have fallen but the black economy has grown from 7 per cent to 50 per cent of GDP. Controls and regulations have been drastically eliminated after 1991 but the size of black economy continues to rise. The causes of black income generation lie elsewhere. The recent rise in corporate tax collection is a reflection of rising disparity and not better compliance.
Plugging loopholes has only made the laws more complex, as in the case of taxation. The ingenuity of the corrupt thwarts the enforcement agencies by either devising newer ways of circumventing the law or simply bribing the officials. In India, laws on paper and in practice differ because of the ‘Triad' of the corrupt business class, the political class, and the executive (see the article “Honesty is indivisible,” The Hindu, January 29, 2011) who bend rules to their advantage. The philosophy is: if I am in power, I can bend rules for the favoured.
In brief, technically we know what needs to be done to check the black economy — but the problem is political. The top echelons of the leadership are the prime drivers of the black economy. They do not wish to forgo the massive illegal profits they generate. So how can the political will be generated?
A voluntary disclosure scheme to bring back black savings stashed away abroad for ‘development' is being considered. Wasn't the Mauritius route created to allow round tripping of funds? It has accelerated black income generation by facilitating it. A National Security Adviser alerted the nation to terror funds entering the stock markets to destabilise the financial markets. The Wanchoo Committee argued that this kind of scheme makes honest people dishonest. A report of the Comptroller and Auditor General of India on the 1997 voluntary disclosure scheme pointed out that the same people who declared their black incomes earlier took advantage of the 1997 scheme — becoming habitual tax offenders.
Some argue that elections underlie black income generation and corruption. Presently, when a Lok Sabha constituency sees the expenditure of crores of rupees per serious candidate, state funding will make little difference. At best, it can be to the tune of the allowed election expenditure of Rs.25 lakh — just a few per cent of the actual expenditure by most candidates. Further, what is spent on the national elections officially and unofficially is not even 1 per cent of GDP for that year; so this cannot be the cause of black incomes. It is the black economy that works to subvert the elections. Our present day legislators are largely the representatives of the monied and the powerful and not of the people; so they need to keep the public confused to win elections. They resort to vote bank politics and bribing voters and that is what makes elections costly. Genuine democracy would not be expensive. Today, we have formal democracy with weak content.
In this background, it is clear that the government's actions against corruption will be in proportion to the public outrage and that too the minimum necessary. It is likely that there will be pretence while the real culprits go scot-free. Setting up a committee is to buy time and to stall questions on the subject since the government can claim it is waiting for the report. Later, it can buy time by pretending to look into the recommendations or bury an inconvenient report (like the Vora Committee report).
The Supreme Court is going after the names of those spiriting away money abroad but not after the generation of the funds. The black incomes generated in the country are ten times the size of what is siphoned out. In the liberalised environment, those with black money stashed away abroad can turn into non-residents overnight and escape prosecution in India. This is perhaps the reason the Indian government is unable to proceed against the eight entities named in the Liechtenstein disc. For the rest, little money may be left in their accounts, given the inordinate delays. Taxation treaties being entered into by the government with other governments are all about legal incomes traceable to known individuals. But black incomes are typically parked via shell companies and in benami accounts.
What is needed is serious investigation and prosecution in the country that will also expose the money siphoned off abroad. The government functionaries generating black incomes personally indulge in various illegalities such as using hawala. So, in principle, there is private knowledge but not public information to stop these activities. The help of foreign governments is hardly needed in this matter. Intelligence agencies provide the leadership with information through tapping and so on, which can be mined instead of being used for political blackmail. The prosecution agencies deliberately spoil cases for political reasons. If prosecution is not possible in India, how can the case be made in foreign lands for booking the culprits?
In brief, the policy pronouncements are delaying and diversionary tactics to allow those generating black incomes to escape via shell companies and benami accounts. There were limited gains from earlier JPCs but will this time be different? It will be only if there is political will and action — and not more studies or treaties with foreign governments.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!

தலைப்பு என்னவோ உண்மை தான். ஆனால், அதை எல்லாம் தாண்டி அசாதாரணமானது, தி.மு.க., - பா.ம.க., உறவு. "துரோகம்... துரோகம்... பச்சைத் துரோகம்' என, தி.மு.க., தலைவரை விமர்சித்த அதே வாய், இன்று, "மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆறாவது முறை தமிழக முதல்வராக வருவார் கருணாநிதி' என்கிறது. இரு தரப்பு விமர்சனங்கள் ஏராளம். அவற்றில், நினைவில் நின்றவை மட்டும் இங்கே.



* ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார். - ராமதாஸ், 25.3.2009



* இலங்கைத் தமிழர் பிரச்னையில் முதல்வர் கருணாநிதி மாற்றி மாற்றி பேசுகிறார். இருப்பது ஓர் உயிர். அது, இலங்கைத் தமிழர்களுக்காகப் போகட்டும் என்றார். பின்னர், "மத்திய அரசு நினைத்தால், இலங்கைத் தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றலாம். இல்லையென்றால், இங்குள்ள தமிழர்களும் சாக வேண்டியது தான்' என்றார். அதிலிருந்தும் பல்டியடித்து, "இலங்கைத் தமிழர் பிரச்னையில் இதை விட அதிகமாக செய்வதற்கு எதுவும் இல்லை' என்கிறார். - ராமதாஸ், 11.4.2009



* இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறும் ராமதாஸ், மத்திய அமைச்சரவையில் தன் மகனை இன்னும் நீடிக்கச் செய்வது ஏன்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு இதையெல்லாம் பேசியிருந்தால், ராமதாஸ் நேர்மையானவர் என கருதலாம். - கருணாநிதி, 16.4.2009



* தமிழக முதல்வர் கருணாநிதி டில்லி சென்று, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் முன் அமர்ந்து, இலங்கைப் போரை நிறுத்தும்படி வலியுறுத்தியிருக்க வேண்டும். மாறாக, பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுப்பதெல்லாம் கண் துடைப்பு வேலை. - அன்புமணி, 22.4.2009



* லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 40க்கு, 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். தேர்தல் முடிந்ததும், தமிழக அரசியலிலும், தி.மு.க., ஆட்சியிலும் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். - ராமதாஸ், 27.4.2009



* பஸ் கட்டணக் குறைப்பு என்பது, இதற்கு முன் கேள்விப்பட்டிராதது. லோக்சபா தேர்தலை ஒட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ள முதல்வர் கருணாநிதியும், போக்குவரத்து அமைச்சர் நேருவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். - ராமதாஸ், 3.5.2009



* லோக்சபா தேர்தல் வருவதால், இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக மக்களை ராமதாஸ் ஏமாற்றுகிறார். அவருக்கு இந்தத் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். - ஸ்டாலின், 7.5.2009



* டாஸ்மாக் நிறுவனம், 12,300 கோடி ரூபாய் லாபத்தில் இயங்குவதாக, தி.மு.க., அரசு சொல்கிறது. அது, ஏழைகளிடம் இருந்து சுரண்டப்பட்ட பணம். - ராமதாஸ், 9.1.2010



* குடிசை மாற்று வாரியம் என்பது, குடிசைகளை ஒழித்து, அவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்காக, 1967ம் ஆண்டு தி.மு.க., அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், சென்னை இன்னமும் குடிசைகளின் நகரமாகத் தான் இருக்கிறது. - ராமதாஸ், 9.1.2010



* தி.மு.க., - அ.தி.மு.க., என எந்தக் கட்சியும் கூட்டணி வைக்கத் தயாராக இல்லாததால், விரைவில் பா.ம.க., என்ற கட்சியே காணாமல் போய்விடும். - ஸ்டாலின், 19.1.2010



* வாக்காளர்களுக்கு இலவச வேட்டி, சேலை வினியோகிக்கும்போது தி.மு.க.,வினர் கையும், களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர். அப்படியும் அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். - ராமதாஸ், 27.2.2010



* தி.மு.க.,வுடனான கூட்டணியில் மீண்டும் இணைய நாங்கள் விரும்புகிறோம்; ராஜ்யசபா சீட் ஒன்றை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். - ராமதாஸ், கடிதம்



* வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பிறகு தான் ராஜ்யசபா தேர்தலில் சீட் ஒதுக்குவது பற்றி பரிசீலிக்கப்படும். - தி.மு.க., தீர்மானம், 30.5.2010



* தன்னைத் தானே சமூக நீதி போராளி என அழைத்துக்கொள்ளும் கருணாநிதி, ஜாதிவாரி கணக்கெடுப்புக்குத் தயாராக இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. - ராமதாஸ், 26.8.2010



* புராணங்களில் குரு என்றழைக்கப்பட்ட சுக்கிராச்சாரியார், நல்லவற்றை நடக்கவிடாமல் தடுத்து வந்தார். (காடுவெட்டி ) குரு என்றால் அது தான் அர்த்தம். - கருணாநிதி, 5.9.2010



* இந்தியாவிலேயே அதிகம் இளம் விதவைகள் இருப்பது தமிழகத்தில் தான். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் வரை இந்நிலை தான் தொடரும். - ராமதாஸ், 8.1.2011



* காங்கிரஸ், பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எங்கள் கூட்டணியில் உள்ளன. - கருணாநிதி, 30.1.2011



* கூட்டணி குறித்து பா.ம.க., இன்னும் முடிவு செய்யவில்லை. எங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து அழைப்பு வருகிறது. - ராமதாஸ், 30.1.2011



* பா.ம.க., இருக்கிறது என்று நாங்கள் சொன்னபோது, அவர் மறுத்தார். இனி, கூட்டணி பற்றிய கேள்விக்கே இடமில்லை. - கருணாநிதி, 1.2.2011



* பா.ம.க.,வை கூட்டணியில் சேர்க்க சோனியா விரும்பவில்லை. டில்லியில் அவர் என்னிடம், "எதிரிகளைக் கூட மன்னித்துவிடலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது' என்றார். - கருணாநிதி, 3.2.2011



* தி.மு.க., - பா.ம.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும். - ராமதாஸ், 17.2.2011



- நமது சிறப்பு நிருபர் -

கோரிக்கையை கிண்டல் செய்ததால் தி.மு.க.,விடம் பேச்சுவார்த்தை நடத்திய காங்., குழு அதிருப்தி

சென்னை: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் கோரிக்கையை தி.மு.க., தரப்பில் கிண்டல் செய்ததால், காங்கிரஸ் ஐவர் குழு, கடும் அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், இரு கட்சிகளிடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.



தி.மு.க., - காங்கிரஸ் ஐவர் குழு இடையே, 20ம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என, காங்., தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதை தி.மு.க., ஏற்காததால், அன்றைய பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதையடுத்து இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நிலவரம் குறித்து, காங்., தலைவர் சோனியாவிடம் தெரிவித்தனர். தி.மு.க.,வின் தொகுதிப் பங்கீடு திட்டத்தை ஏற்காத சோனியா, புதிய மாற்றுத் திட்டத்தை அளிக்குமாறு தி.மு.க.,வை கேட்டுக் கொண்டார். கால தாமதமின்றி பேச்சுவார்த்தையை நடத்துமாறு, தி.மு.க.,வினர், சோனியாவை வலியுறுத்தியதை தொடர்ந்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை 25ம் தேதி இரவு 8.30 மணிக்கு அறிவாலயத்தில் துவங்கியது. அடுத்த 25 நிமிடங்களுக்குப் பின், முதல்வர் கருணா நிதி அறிவாலயம் வந்தார். அதனால், பேச்சுவார்த்தை முடிந்து, இரு கட்சித் தலைவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாக தகவல் பரவியது.



பேச்சுவார்த்தைக்கிடையே, துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோர் முதல்வர் இருக்கும் அறைக்கு சென்றனர். ஐந்து நிமிடங்களில் தொகுதி பங்கீடு பேச்சு நடக்கும் அறைக்கு திரும்பினர். இதனால், இன்னும் சில நிமிடங்களில் உடன்பாடு எட்டப்படும் என்று அனைவரும் தயாராக இருந்தனர். ஆனால், பேச்சுவார்த்தை அரங்கிலிருந்து அமைச்சர்கள் சிதம்பரம்,வாசன் ஆகியோர் வேகமாக வெளியேறினர். முதல்வர் இருக்கும் அறைக்கு இவர்கள் செல்கிறார்களோ என எதிர்பார்த்து காத்திருந்த போது, அவர்கள் கார்களில் ஏறி அறிவாலயத்திலிருந்து வெளியில் சென்றதைப் பார்த்து, இரு கட்சி தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர். சிதம்பரம், வாசனை தொடர்ந்து வெளியில் வந்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, "பேச்சுவார்த்தை திருப்தியளிப்பதாக இருந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடக்கும்' என கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பினார்.



நடந்தது என்ன? பேச்சுவார்த்தையில் பங்கேற்ற, கிண்டல் பேச்சுக்கு பெயர் பெற்ற தி.மு.க., மூத்த அமைச்சர் ஒருவர் செய்த கிண்டல் தான், உடன்பாடு ஏற்படாமல், காங்., தலைவர்கள் வெளியேறியதற்கு காரணம் என கூறப்படுகிறது. எப்போதும் நகைச்சுவை, கேலி, கிண்டலாக பேசக்கூடிய அந்த அமைச்சர், காங்கிரஸ் குழுவினரிடம், "உங்களிடமும் உளவுத்துறை உள்ளது; எங்களிடமும் உளவுத்துறை உள்ளது. இரு கட்சிகளின் பலத்தையும், இருவரும் அறிவோம். வேண்டுமானால், கூட்டணிக்கு நீங்கள் தலைமை ஏற்றுக் கொள்ளுங்கள். அதில், நாங்கள் சேர்ந்து கொள்கிறோம். லோக்சபா தேர்தலில், நாங்கள் 200 இடங்கள் கேட்டால், நீங்கள் தந்து விடுவீர்களா? சும்மா மிரட்டாதீர்கள்' என கிண்டலாக கூறியுள்ளார். இதனால், காங்., குழுவினர் வருத்தம் அடைந்து, பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறியதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அமைச்சர் அடித்த கிண்டலால், காங்., குழுவினர் தி.மு.க., மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால், பேச்சுவார்த்தை நடத்துவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. மேலும், மற்றொரு தரப்பினர் கூறும் போது, "பேச்சுவார்த்தை தொடக்கத்திலேயே 53 இடங்கள் தான் தரப்படும்; மேலிடத்தில் கேட்டு விட்டு வாருங்கள் என, தி.மு.க.,வினர் கூறியதால், பேச்சுவார்த்தையை தொடர முடியாமல் காங்., குழுவினர் சென்றனர்' என்றும் தெரிவித்தனர்.

மக்கள் ஆதரவுடன் தி.மு.க., ஆட்சியும் தொடரும்; நானும் இருப்பேன்

சென்னை: ""மக்கள் ஆதரவுடன் தி.மு.க., ஆட்சியும் தொடரும்; நானும் இருப்பேன். திட்டப்பணிகளும் தொடரும். ஆறு ஆண்டுகளில் தமிழகம் குடிசைகள் இல்லாத முதல் மாநிலமாக மாறும் ,'' என முதல்வர் கருணாநிதி பேசினார்.



சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., சேகர்பாபு ஆதரவாளர்கள் தி.மு.க.,வில் இணையும் விழா தண்டையார்பேட்டையில் நேற்று மாலை நடந்தது. இணைந்தவர்களை வரவேற்று முதல்வர் கருணாநிதி பேசியதாவது: வடசென்னை பகுதி தி.மு.க., துவங்கிய இடம். அன்று பலரால் இட்ட விதை இன்று மரமாகி அதன் நிழலில் நாம் உள்ளோம். எம்.ஜி.ஆர்., துவக்கிய அ.தி.மு.க., கப்பல் திசை மாறி செல்கிறது. திசை மாறும் கப்பலில் இருக்க வேண்டாம். என சேகர்பாபு வந்துவிட்டார். எம்.ஜி.ஆர்., முதல்வராக இருக்க தகுதியில்லை; அவரை நீக்கி விட்டு என்னை முதல்வராக்குங்கள் என சொன்னவர் தான் இந்த அம்மையார்.



தமிழகத்தில் எத்தனையோ பிரச்னை இருந்தாலும், தேர்தலுக்கான நேரம் வந்துவிட்டது. யாருக்கு எத்தனை இடங்கள்; எந்தெந்த தொகுதிகள் என கட்சித்தலைவர்கள் பேசி முடிவெடுத்து, தொகுதியை அடையாளம் காட்டி, பேசும் காலமாக உள்ளது. மக்களாட்சி தத்துவத்தை உணர்ந்து மக்களுக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, குறைந்தவிலைக்கு சமையல் பொருட்கள் கொடுத்து ஏழைகளின் வயிற்றுப்பசியை தீர்க்கும் ஆட்சியை நடத்துகிறோம். தமிழகத்தில் குடிசை இல்லா மாநிலமாக்க குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் ஆறு ஆண்டுகளில் குடிசை இல்லா மாநிலமாக மாறும். அதுவரை நான் இருப்பேனா என்பீர்கள். நீங்கள் இருக்கும்போது நானும் இருப்பேன்; ஆட்சியும் இருக்கும். துவக்கிய எல்லா திட்டங்களும் தொடரும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

1964ல் 250 ரூபாய்; 2011ல் 50 ஆயிரம் ரூபாய்: "மக்கள் பணி'க்கு வழங்கும் சம்பளம் "கிடுகிடு'

கடந்த 2006ம் ஆண்டு வரை, 16 ஆயிரம் ரூபாயாக இருந்து வந்த எம்.எல்.ஏ.,க்கள் சம்பளம், இந்த ஆட்சியில் மூன்று மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டு, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.



தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.,க்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனாலும், "மக்கள் சேவை' புரிய தங்களுக்கு இது போதுமானதாக இல்லை, என்று சட்டசபையில் அவர்கள் குரல் கொடுப்பதுண்டு. இதனால், அவ்வப்போது எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் மற்றும் இதர படிகள் உயர்த்தப்பட்டு வந்துள்ளது. கடந்த 1964ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் 250 ரூபாயாக மட்டுமே இருந்து வந்தது. இடையில், 1971ல் ஈட்டுப்படியாக 100 ரூபாயும், 1974ல் ஈட்டுப்படி 200 ரூபாயாகவும், 1978ல் இது 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. அதே போல, தொலைபேசி படி என்று 150 ரூபாய் 1978 முதல் வழங்கப்பட்டது. இந்த தொலைபேசி படி, 1980ல் 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால், 1980ம் ஆண்டு, மொத்தமாக 800 ரூபாய் எம்.எல்.ஏ.,க்கள் பெற்று வந்தனர். கடந்த 1981ல், ஈட்டுப்படி 400 ரூபாயாகவும், தொலைபேசி படி 300 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1982ல், சம்பளம் 300 ரூபாயாவும், தொலைபேசி படி 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1984ல் சம்பளம் 500 ரூபாயாக உயர்த்தப்பட்டது. 1985ம் ஆண்டில், சம்பளம் 600 ரூபாயாவும், ஈட்டுப்படி 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. கடந்த 1987ல், தொலைபேசி படி 450 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்பின், 1989ல், ஈட்டுப்படி 700 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 1,750 ரூபாயாக இருந்தது.



இந்நிலையில், 1990ல் சம்பளம் 1,000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 800 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 700 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 1991ல், புதிதாக தொகுதிப்படி என்று உருவாக்கப்பட்டு, 250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்டது. கடந்த 1992ல், தொலைபேசி படி 800 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 1993ல், சம்பளம் 1,250 ரூபாயாக உயர்த்தப்பட்டு, புதிதாக தபால் படி என்று 250 ரூபாய் சேர்த்து வழங்கப்பட்டது. இதன்பின், 1994ல், சம்பளம் 1,500 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 300 ரூபாயாகவும், தபால் படி 350 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 3,950 ஆக உயர்ந்தது. பின்னர், 1995ல் சம்பளம், 1,700 ரூபாயாகவும், தொகுதிப்படி 400 ரூபாயாகவும், தபால் படி 450 ரூபாயாகவும், தொலைபேசி படி 900 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதன்பின், 1996ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், சம்பளம் 2000 ரூபாயாகவும், ஈட்டுப்படி 1,500 ரூபாயாகவும், தொகுதிப்படி 525 ரூபாயாகவும், தபால் படி 625 ரூபாயாகவும், தொலைபேசிப் படி 1,250 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 6,000 ரூபாயை தொட்டது. இதன்பின், 1997ல் ஈட்டுப்படி, 3,500 ரூபாயாகவும், தொகுதிப்படி 625 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. தொடர்ந்து, 1998ல் தொகுதிப்படி 875 ரூபாயாகவும், தபால் படி 875 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 1,750 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதுவே, 1999ல் தொலைபேசிப்படி மட்டும் 2,750 ரூபாயாக உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 10 ஆயிரம் ரூபாயானது.



கடந்த 2000ம் ஆண்டில், புதிதாக தொகுப்புப்படி என்று உருவாக்கப்பட்டு, 2,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர், 2001ல், ஈட்டுப்படி 4,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 2,000 ரூபாயாகவும், தபால் படி 1,500 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 4,000 ரூபாயாகவும், தொகுப்புப்படி 2,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 16 ஆயிரம் ரூபாயானது. அதன்பின், அ.தி.மு.க., ஆட்சி முடியும் வரை, எம்.எல்.ஏ.,க்களின் சம்பளம் உயர்த்தப்படவில்லை. இந்நிலையில், 2006ல் தி.மு.க., ஆட்சி அமைந்த பின், செப்டம்பர் முதல் தேதியன்று, ஈட்டுப்படி 6,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 4,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு, மொத்த சம்பளம் 20 ஆயிரம் ரூபாயானது. கடந்த 2007 ஏப்ரலில் புதிதாக வாகனப்படி என்று ஒன்று உருவாக்கப்பட்டு, 5,000 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2008ல், 12 ஆண்டுகளுக்குப் பின், சம்பளம் 3,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அத்துடன், ஈட்டுப்படி 7,000 ரூபாயாகவும், தொகுதிப்படி 5,000 ரூபாயாகவும், தபால் படி 2,500 ரூபாயாகவும், தொலைபேசிப்படி 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டு மொத்த சம்பளம் 30 ஆயிரம் ரூபாயானது. இதன்பின், வாகனப்படி 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு முதல், எம்.எல்.ஏ.,க்களின் மொத்த சம்பளம் 50 ஆயிரம் ரூபாயானது. அதாவது, 2006ல் ஆட்சி அமைந்த போது, மொத்த சம்பளமாக 16 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த எம்.எல்.ஏ.,க்கள், ஆட்சி முடியும் நிலையில், மூன்று மடங்குக்கு மேல் சம்பள உயர்வு பெற்று 50 ஆயிரம் ரூபாய் பெறுகின்றனர்.



இதுமட்டுமன்றி, எம்.எல்.ஏ.,க்களின் தினப்படியாக 500 ரூபாய், பயணப் படியாக ஏ.சி., இரண்டடுக்கு ரயில் பயணம், அதுவும் ஆண்டுக்கு இரண்டு தவணைகளாக 20 ஆயிரம் ரூபாய்க்கு ரயில் பயணம், ஒரு உதவியாளர் உட்பட இருவருக்கு இலவச பஸ் பாஸ், விடுதியில் ஒரு தொலைபேசி இணைப்பு, வீட்டுக்கு ஒரு தொலைபேசி இணைப்பு ஆகியவற்றுக்கான பில் கட்டணம், இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளுக்கு ஆகும் செலவை ஈடு கட்டுதல், போன்ற பல்வேறு சலுகைகளும் எம்.எல்.ஏ.,க்களுக்கு உண்டு.



எம்.எல்.ஏ.,க்களின் நிறைவேறாத ஆசை: தமிழகத்தின் 13வது சட்டசபை அமைந்தது முதல், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பாக ஞானசேகரன், எம்.எல்.ஏ.,க்களுக்கு சென்னை ஐ.டி., காரிடர் சாலையில் வீடு கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்பது தான். இதற்கு முதல்வர் தரப்பில் பதில் இல்லாமல் இருந்தது. கம்யூனிஸ்ட்கள் மட்டும் இந்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு முதல்வர் பேசும் போது, பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள் கோரிக்கை வைத்தால், அதுபற்றி பரிசீலிக்கப்படும் என்றார். இதையடுத்து, ஞானசேகரன் எம்.எல்.ஏ., மற்ற காங்கிரஸ், பா.ம.க., மற்றும் தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களிடம், நிலம் பெறுவதற்கு ஆதரவாக கையெழுத்து வேட்டை நடத்தினார். பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்களின் கையெழுத்தை பெற்று முதல்வரிடம் ஒப்படைத்தார். இதன்பின், "எம்.எல்.ஏ.,க்களுக்கு சோழிங்கநல்லூரில் நிலம் ஒதுக்கப்படும்' என்று முதல்வர் அறிவித்தார். ஆனால், ஆட்சி முடியும் வரை, இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. மிகவும் வறுமை நிலையில், சொந்த வீடு கூட இல்லாமல் இருக்கும் எம்.எல்.ஏ.,க்களின், இந்த ஆசை கடைசிவரை நிறைவேறாமலேயே போனது.

Friday, February 25, 2011

Mamata presents no-hike-in-fares budget

56 new trains, concessions for senior citizens, jobs for ex-servicemen, incentives for States and more in the Railway budget
For the third successive year, the Railway Budget for 2011-12 spared the passengers of any increase in fares and proposed no hike in freight rates while introducing 56 new trains, including nine non-stop Duronto trains and three Shatabdis.
Presenting her third budget in UPA-II in the Lok Sabha, Railway Minister Mamata Banerjee announced a slew of concessions including reducing the eligibility age of senior women citizens from 60 to 58 years and the fare concession for men above 60 from 30 to 40 per cent.
More services to West Bengal
Apparently with an eye on the coming assembly polls in West Bengal, where she is projected as the Chief Minister candidate of Congress-Trinamool combine, she came out with a number of projects for the State, including a metro coach factory in Singur, Rail Industrial Park in Jelligham, an integrated suburban network for Kolkata and 34 new services for the Kolkata metro.
Her announcements for the State evoked protests from members including those from Bihar, Uttar Pradesh and Kerala, but she appealed to them to be patient for her other announcements.
Soaps for armed forces
The Minister also extended the concession for physically-challenged persons and Kirti and Shaurya Chakra awardees to travel in Rajdhani and Shatabdi trains, besides extending facility of card passes to parents of unmarried posthumous Paramvir Chakra and Ashok Chakra gallantry award winners.
She also proposed to induct 16,000 ex-servicemen in the Railways by March.
Projection
The budget proposes the highest-ever plan outlay of Rs 57,630 crore for 2011-12. The gross budgetary support has been projected at Rs 20,000 crore, diesel cess Rs 1,041 crore, internal resources Rs 14,219 crore and market borrowing at Rs 20,954 crore.
The budget estimates for 2011-12 projects a freight loading of 993 million tonnes and a passenger growth of 6.4 per cent.
Gross traffic receipts has been estimated at Rs 1,06,239 crore, exceeding the Rs one lakh crore mark for the first time, despite pressure on finances on account of Pay Commission payout.
Ordinary working expenses have been assessed at Rs 73,650 crore and appropriation to depreciation reserve fund pegged at Rs 7,000 crore.
Provision of Rs 6,735 crore has been made for dividend payment and the excess for Railways for the new fiscal has been projected at Rs 5,258 crore, with an operating ratio of 98.1 per cent.
On the financial performance for the current year, the budget disclosed that disruption of train movement resulted in a loss of Rs 1,500 crore and Rs 2,000 crore due to the ban on export of iron ore.
Loading target was reduced by 20 million tonnes (MT) to 924 MT.
Gross traffic receipts have been fixed at Rs 94,840 crore, which is higher by Rs 75 crore over budget estimates.
The ordinary working expenses has been fixed at Rs 67,000 crore, an increase of Rs 2,000 crore over BE and the current dividend liability to be fully discharged.
The next year’s budget provides Rs 9,583 crore for new lines. A target of 1,300 kms of new lines, 867 kms of doubling of lines and 1,017 kms of guage conversion has been targeted in the new fiscal.
New trains
The new Duronto expresses will run between Allahabad-Mumbai, Pune-Ahmedabad, Sealdah-Puri, Secunderabad-Visakhapatnam, Madurai-Chennai, Chennai-Thiruvananthapuram, Mumbai Central-New Delhi, Nizamuddin-Ajmer and Shalimar-Patna.
Air-conditioned double-decker services are proposed to be introduced on Jaipur-Delhi and Ahmedabad-Mumbai routes.
The three new Shatabdi services will run between Pune-Secunderabad, Jaipur-Agra and Ludhiana-Delhi.
Passenger amenities
The Minister announced the introduction on pilot basis of a pan-India, multi-purpose ‘Go India’ smart card, which would be a single-window package for passengers for seamless payment for tickets for long distances, suburban, metro journeys.
The card can be used at booking counters and on internet.
In a bid to provide improved comfort and features and more exclusivity, the Rail budget proposes to introduce a new super AC class of travel. Provision of internet access on Howrah Rajdhani Express is being introduced as a pilot project.
A new portal for internet booking is being launched shortly and tickets booked through this would be cheaper with a charge of Rs 10 for AC classes and Rs 5 for others.
The Budget provides for upgrading 236 more stations as ’Adarsh’ (model). 47 additional suburban services in Mumbai and 50 new suburban services have been proposed for Kolkata.
Two new passenger terminals in Kerala and one each in Uttar Pradesh and West Bengal have been proposed.
A feasibility study to raise the speed of passenger trains to 160-200 kms per hour is proposed to be undertaken.
As an incentive to States maintaining normal movement of trains, Ms. Banerjee announced a special package of two new trains and two projects.
As a measure of safety, Railways have sanctioned deployment of anti-collision devices in eight zones while fog-safe device will be deployed on the basis of GPS.
All unmanned level crossing up to 3000 in number will be eliminated.
To promote tourism, special trains called ‘Janambhoomi Gaurav’ will be introduced on four routes while 10 ‘Rajya Rani’ Express trains connecting state capitals with important cities in respective states will be introduced.
13 new passenger services, 22 Diesel Electrical Multiple Units (DEMU), 8 Multiple Electrical Units services are to be introduced while the run of 33 trains will be extended and frequency of 17 trains will be increased.
A scheme for socially-desirable projects named ‘Pradhan Mantri Rail Vikas Project’ with non-lapsable fund has been proposed.
10,000 shelter units have been proposed for track side dwellers in Mumbai, Sealdah, Siliguri and Tiruchirapalli on a pilot basis.

தேர்தல் கால சலுகைகள் அள்ளி வரும் ரயில் : மக்களுக்கான ரயில்வே பட்ஜெட் என்கிறார் மம்தா

புதுடில்லி: இரு மாநில தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை பாதிக்காத வகையில் , கட்டணம் உயர்த்தப்படாமல் இந்த 2011- 2012 ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மம்தா தாக்கல் செய்வது இது 3 வது பட்ஜெட் ஆகும்.

இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய வந்த மம்தாவை நிருபர்கள், புகைப்படக்ககாரர்கள் சூழ்ந்து கொண்டு படமெடுத்தனர். ரயில்வே துறையின் நிதி ஆதாரம் கையைப்பிடித்தாலும், பயணிகள் கட்டணத்தில் கை வைக்க மம்தாவுக்கு விருப்பமில்லை . பட்ஜெட் போடப்படுவது மக்களுக்காக , மக்களால் உருவாக்கப்படும் பட்ஜெட் இதனால் இது ஒவ்வொரு சாதாரண மனிதனையும் பாதிக்காது என்று இன்று பார்லி.,க்கு வந்த போது மம்தா கூறினார்.

இந்த பட்ஜெட்டில் தேர்தல் நடக்கவிருக்கும் மேற்குவங்கம், தமிழகம் ஆகியவற்றை குறி வைத்து மக்களை கவரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பெறும் உணவு திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி புதிய திட்டம் அறிவிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக 100 ரயில்களும், 12 அதிவேக தூரந்தோ ரயில்களும் இன்று அறிவிக்கப்படும் என தெரிகிறது.

TAMILNADU ELECTION 2011: காரில் அடிபட்டவரை காப்பாற்றிய ராகுல்

TAMILNADU ELECTION 2011: காரில் அடிபட்டவரை காப்பாற்றிய ராகுல்: "புதுடில்லி: டில்லியில், சாலை விபத்தில் சிக்கிய நகராட்சி கவுன்சில் ஊழியரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தன் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி ..."

தமிழகத்துக்கு இந்தியாவின் சிறந்த மாநில விருது

சென்னை: சி.என்.என்., நிறுவனம், இந்தியாவின் சிறந்த மாநிலமாக, தமிழகத்தை தேர்வு செய்து விருது வழங்கியது. விருதை, துணை ஜனாதிபதியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு பெற்றுக் கொண்டார்.

சி.என்.என் - ஐ.பி.என் செய்தி நிறுவனம், தேசிய அளவில் வளர்ச்சி, சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களின் அடிப்படையில், நடுவர்கள் மூலம் அனைத்து மாநிலங்களையும் மதிப்பீடு செய்து, சிறந்த மாநிலங்களை தேர்வு செய்து, அவற்றுக்கு, "வைர மாநில விருதுகள்' வழங்கி வருகிறது. கடந்த 2010ம் ஆண்டுக்கு, ஒன்பது பிரிவுகளின் கீழ் வைர மாநில விருதுகளும், சிறப்பு விருதுகளாக இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம், சிறிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதுகளும் வழங்கப்பட்டன. இவற்றில், தமிழகம் இந்திய அளவில் பெரிய மாநிலங்களில் சிறந்த மாநிலம் என்ற விருதையும், மக்கள் பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம், மகளிர் மேம்பாடு ஆகிய மூன்று பிரிவுகளில் சிறந்த மாநிலத்துக்கான வைர மாநில விருதுகளையும் பெற்றுள்ளது. டில்லியில் 23ம் தேதி நடந்த விழாவில், இவ்விருதுகளை துணை ஜனாதிபதி அமீத் அன்சாரி வழங்கினார். தமிழக அரசின் சார்பில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுகளை பெற்றுக் கொண்டார். இந்த விருதுகளை, முதல்வர் கருணாநிதியிடம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று காண்பித்தார்.

தமிழக மீனவர்களை இலங்கை சுடுவது சரியல்ல: மன்மோகன்

""இலங்கையில் தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இதை அந்நாட்டு அரசிடம் இந்தியா அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது. கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்ய வேண்டுமே தவிர, சுட்டு கொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

பார்லிமென்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்பதை ஒப்புக் கொள்கிறேன். 2009ல் கடும் வறட்சியும், வெள்ளமும் நாட்டில் ஏற்பட்டது. அப்போது விலைகள் ஏறின. சர்வதேச விலை நிலவரங்களும் அதிகமாக இருந்ததால், அதிக விலை கொடுத்து தான் இறக்குமதி செய்ய நேர்ந்தது. அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை இந்திய உணவுக் கழகம் மூலமாக கொள்முதல் செய்ததால், இவற்றின் விலையை ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்க முடிந்தது. விலையும் அதிகரிக்கவில்லை. ஆனாலும், காய்கறிகள், பழங்கள் மற்றும் பாலின் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதேசமயம் வளர்ச்சியும் பாதிக்க கூடாது என்பதில், கண்ணும், கருத்துமாக உள்ளது. இதுவே விலைவாசியை குறைப்பதில், தாமதம் ஏற்படுவதற்கு காரணம். எனினும், மார்ச்சுக்குள் பணவீக்கம் 7 சதவீதத்திற்குள் குறைந்து விடும். உணவுப்பொருள் பணவீக்கம் குறைய சற்று நாளாகும்.

விவசாயத் துறையில் உற்பத்தியை பெருக்குவதே இதற்கு நீண்ட கால தீர்வு. அதற்காக நிறைய முதலீடு செய்ய அரசு தயாராக உள்ளது. பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறும். பொது வினியோக திட்டம் மிக முக்கியமானது. அதை சீரமைக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. இதன் மூலம், வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் சாதாரண மக்களுக்கு, அரிசியும், கோதுமையும் சகாய விலையில் கிடைக்கும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியும், சலுகை விலையில் அரிசி, கோதுமையும் கிடைத்துவிட்டால் சாதாரண மக்களின் உணவு பிரச்னை தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். அரசு துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பதிலளிப்பதில், அரசு தயக்கம் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விவகாரங்கள் சமீப நாட்களில் சர்ச்சையாகி வருகின்றன.

தொலைத்தொடர்பு கொள்கை என்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாகும். இதுதான் இந்த அரசியலும் அடிப்படை கொள்கையாக இருந்து வருகிறது. தொலைத்தொடர்பு கொள்கையை அமல்படுத்துவதில் சில தவறுகள் நடந்திருக்கலாம். அதேசமயம் தொலைத்தொடர்பு அடர்த்தி என்பது கடந்த 2004ம் ஆண்டில் 7.2 சதவீதமாக மட்டுமே இருந்தது. நகர்புறம் மற்றும் கிராமப்புறம் இரண்டையும் சேர்த்தே இவ்வளவாக இருந்த தொலைத்தொடர்பு அடர்த்தி, 2010ம் ஆண்டில் 66 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஊழல் நடந்துள்ளது. அதை சும்மாவிடப் போவதில்லை. உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. விண்வெளி துறையில் 2005ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை. அந்த தேவாஸ் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரமும் கூட ஒதுக்கப்படவில்லை. சர்ச்சைக்குரிய அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது 8.5 சதவீதம் வரை உள்ளது. இதை 10 சதவீதம் வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தான், முக்கிய மக்கள் நல திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை குறைந்து வருகிறது. காஷ்மீரிலும் நிலைமை முன்னேறியுள்ளது. அங்குள்ள இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இலங்கையை பொறுத்தவரை, அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் பிரச்னைக்கு ஒரே வழி அரசியல் தீர்வு காண்பது தான். இதை இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அங்குள்ள தமிழ் மக்கள் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும். அவர்களின் நலன்கள் பாதுகாக்க வேண்டும். அதற்குண்டான வழிவகைகளை அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவது தொடர்கிறது. எல்லை தாண்டி மீன்பிடிக்க போனால், இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டுமே தவிர, அவர்களை சுட்டுக் கொல்வது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. அதை இந்தியாவால் ஏற்கவும் முடியாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

கறுப்பு பணம் தொடர்கதை: ""கறுப்புப் பணத்தை, வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்வது, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நடக்கும் செயல் அல்ல. அது, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

அவர் கூறியதாவது: ஒரு விஷயத்தில் ஊழல் நடந்திருந்தால், அதை, இந்த மண்ணின் சட்டத்தைக் கொண்டு கடுமையாக கையாள வேண்டும். தவறு செய்தவர்களை இந்த மண்ணின் சட்டம் தண்டிக்கும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் யார் ஊழல் செய்திருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர, விசாரணை நிறுவனங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்று நடத்தப்படும். அதில், கறுப்புப் பணத்தை கையாள்வது தொடர்பான அவர்களின் யோசனைகள், உதவிகள் கேட்கப்படும். ஆக்கப்பூர்வமான வகையில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும். நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு இடமே கிடையாது. காஷ்மீர் மாநில அரசை பலப்படுத்த தேவையான அனைத்தும் செய்யப்படும். இந்தியாவின் எண்ணற்ற சாதனைகளைப் பார்த்து, உலக நாடுகள் வியப்படைகின்றன. நமது அதிசயிக்கத்தக்க செயலுக்கு மரியாதை செலுத்துகின்றன. நாட்டின் இந்த கவுரவத்தை மேலும் அதிகரிக்க, உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

- நமது டில்லி நிருபர் -

காரில் அடிபட்டவரை காப்பாற்றிய ராகுல்

புதுடில்லி: டில்லியில், சாலை விபத்தில் சிக்கிய நகராட்சி கவுன்சில் ஊழியரை, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், தன் பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி அவரை காப்பாற்றினார். டில்லி நகராட்சி கவுன்சிலில் ஊழியராக பணியாற்றி வந்தவர் காலே ராம். இவர், தன் இருசக்கர வாகனத்தில் பலிக்கா கேந்திராவில் உள்ள தன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர் பின்னால் வந்த கார், காலே ராமின் இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்று விட்டது. கார் மோதியதால், காலே ராம் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அவரது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது, அந்த வழியாக, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காரில் வந்து கொண்டிருந்தார். அடிபட்டு, சாலையில் விழுந்து துடித்துக் கொண்டிருந்த காலே ராமை பார்த்ததும், காரை நிறுத்தி, உடனடியாக தன் பாதுகாப்பு வாகனம் ஒன்றில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லத்தின் அருகே இரு நாட்களுக்கு முன் நடந்தது. ராகுலின் பரிவு கண்டு பலரும் வியந்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

"80 கேட்டால் 48 தான் தர முடியும் என்பதா?': தி.மு.க., பார்முலாவை ஏற்க சோனியா மறுப்பு

"சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 48 "சீட்'கள் வழங்கப்படும்; ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கையை தேர்தலுக்குப் பின் பரிசீலிக்கலாம்' என்ற தி.மு.க.,வின் திட்டத்தை, காங்கிரஸ் ஏற்க மறுத்து விட்டது. 80 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்ட நிலையில், 48 தொகுதிகளை ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்தது காங்கிரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட முடிவெடுக்க, முன்னணி நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.
"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும்; குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்க வேண்டும்; அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும்' என, தி.மு.க.,வுடன் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு தி.மு.க., மறுப்பு தெரிவித்ததால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில், இரு கட்சிகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து காங்கிரசின் ஐவர் குழு உறுப்பினர்களான மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் சோனியாவிடம் விளக்கினர். தி.மு.க.,வின் நிலை குறித்து, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மூலம் சோனியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, "காங்கிரசுக்கு கூட்டணியில் 48 தொகுதிகள் வழங்கப்படும். கம்யூனிஸ்டுகள் தற்போது கூட்டணியில் இல்லாததால், கடந்த முறை அவர்கள் போட்டியிட்ட 23 தொகுதிகள் கைவசம் உள்ளன. இதில், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் வழங்கியது போக, மீதமுள்ள இடங்கள் காங்கிரசுக்கு கொடுக்கப்படும். ஆட்சியில் பங்கு குறித்த பேச்சு தற்போது எழவில்லை. தேர்தலுக்கு பின்னர் அவசியம் ஏற்படும்போது, அது குறித்து பேசிக் கொள்ளலாம்' என்று, சோனியாவிடம் தி.மு.க., சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரசுக்கு 80 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்திய நிலையில், 48 தொகுதிகள் மட்டும் ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்ததால் காங்கிரஸ் கோபமடைந்துள்ளது. எனவே, புதிய மாற்றுத் திட்டத்துடன் அணுகுமாறு தி.மு.க.,வை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் சென்னையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சரும், தி.மு.க.,வின் தென் மண்டல பொறுப்பாளருமான அழகிரி, தென் மாவட்டங்களின் சார்பில், தி.மு.க.,வின் நிலையை முதல்வரிடம் தெரிவித்தார். அப்போது, கடந்த ஐந்தாண்டுகளில் அரசின் திட்டங்களால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு, கூட்டணிக் கட்சிகளினால் ஏற்படும் கூடுதல் பலம் ஆகியன குறித்து கட்சி தலைமையிடம் விவரித்தார். வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய மாவட்டச் செயலர்களுடன், துணை முதல்வர் ஸ்டாலின் கருத்து கேட்டார். இதுதவிர, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கருத்துக்களையும் ஸ்டாலின் கேட்டார். இந்த ஆலோசனைகள் மூலம், காங்கிரஸ் கேட்டுள்ள புதிய மாற்றுத் திட்டத்தை தி.மு.க., வகுத்து வருகிறது. இத்திட்டம், காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்குமா? என்பது விரைவில் தெரியும். மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகிக்கும் நிலையில், கூட்டணியை முறித்துக் கொள்வது தி.மு.க.,விற்கு சாதகமாக இருக்காது என்பதால், கூட்டணியை தொடருவதற்கான முயற்சிகளை தி.மு.க., எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Thursday, February 24, 2011

தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிக்க ஐவர் குழு

சென்னை: சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு, ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், "நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க., தேர்தல் அறிக்கையை தயாரிக்க, அமைப்பாளர் நாதன், உறுப்பினர்கள் ரகுமான் கான், சுப்புலட்சுமி ஜெகதீசன், இளங்கோவன் எம்.பி., அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.

bus day in chennai:பஸ் டே' என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் ரகளை:தடியடி நடத்திய போலீஸ் மீது தாக்குதல்

சென்னை:அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், "பஸ் டே' என்ற பெயரில், பெரும் ரகளையில் ஈடுபட்டனர். அவர்களை கட்டுப்படுத்த தடியடி நடத்திய போலீசார் மீது, பீர் பாட்டில், கற்கள், செருப்புகளை வீசி பதில் தாக்குதல் நடத்தினர். இதில், துணை கமிஷனர் உட்பட, 15 போலீசார் மற்றும் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர்.சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், பாரிமுனையில் இருந்து எம்.எம்.டி.ஏ., காலனி செல்லும் இரண்டு மாநகர பஸ்களை (தடம் எண்:15 டி) வேப்பேரியில் நேற்று காலை மடக்கினர்.மாலை மற்றும் டிஜிட்டல் பேனர்களை பஸ்சின் முகப்பில் கட்டி, பஸ்சின் உட்புறம் மட்டுமின்றி, மேற்கூரையில் அமர்ந்து பயணித்தனர். குடிபோதையில் இருந்த சில மாணவர்கள், கையில் வைத்திருந்த தண்ணீர் பாக்கெட்டுகள், சிறிய கற்கள், காகித ராக்கெட்டுகளை சாலையில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது வீசியபடி சென்றனர்.உயர் அதிகாரிகளிடம் இருந்து உருப்படியான உத்தரவு வராததால், அதை வேடிக்கை பார்த்தபடியே, "பஸ் டே' கொண்டாட்டத்திற்கு போலீசார் பாதுகாப்பு வழங்கினர். பச்சையப்பன் கல்லூரி வளாகத்தை, மதியம் 1.20 மணியளவில் பஸ்கள் நெருங்கியது.அப்போது, பஸ்சில் கழற்றிய மாலையை பாதுகாப்பு பணியில் இருந்த கீழ்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி மீது வீசினர். பின் கற்களை கொண்டு போலீசார் மீதும் தாக்குதல் நடத்தினர். இதனால், ஆவேசமடைந்த போலீசார், உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்கள் உத்தரவுப்படி, வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தினர்.கல்லூரி வளாகத்திற்குள் சிதறி ஓடிய மாணவர்கள், உள்ளே தயாராக வைத்திருந்த பீர் பாட்டில், பழைய செருப்பு, கற்கள், டியூப் லைட்கள் மூலம், போலீசார் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இதில், கீழ்பாக்கம் துணை கமிஷனர் லட்சுமிக்கு முதுகு, உதவி கமிஷனர் விஜயராகவனுக்கு காது, இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரிக்கு கால் மற்றும் தலை, டி.பி., சத்திரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமாருக்கு இடது தொடை மற்றும் வயிற்றிலும் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.இதேபோல, எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட, 10 போலீசாருக்கும் காயம் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தியதில், ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட மாணவர்களை, கீழ்பாக்கம் போலீசார் விசாரணைக்காக தேடி வருகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------http://www.youtube.com/watch?v=m59RGEORvd0&feature=related

That hijacked feeling: City wants to end bus day chaos


CHENNAI: All good things have to come to an end. And the city feels the Bus Day activity has to end not because it started as a good gesture, but because of the ugly, often violent, turns it has taken over the last few years.

Two days after the Madras high court asked the city police why it could not put an end to the practice, the police tried to stop Bus Day by Pachaiyappa's College students on Wednesday. The students pelted stones at the police, injuring 30 of them and five others on the road. "This has become a law and order problem," says Manoj Radhakrishnan, a quality consultant who was held up in traffic jams caused by several Bus Days.

Bus Day, which started as a custom to honour bus drivers at the end of the academic year, is now a virtual hijacking of buses by a bunch of college students who sing, dance, holler and hold the city traffic to ransom. The public, the police and the Metropolitan Transport Corporation appear to have come to a consensus that enough is enough.

T Sekar, an assistant professor at Pachaiyappa's College, says it started about 25 years ago. "Students who travelled by the Broadway bus wanted to thank the driver at the end of the year. They garlanded the bus and the driver and took out a procession," he says. Years down the line, the procession acquired a menacing tone, with some of the spirited' students causing damages to the bus as also some other vehicles on the road. Soon, MTC drivers became captives and road users at the mercy of Bus Day revellers. The police were reduced to escorts.

Perhaps not any longer. "We are not going to let this go," says city police commissioner T Rajendran. "Severe action will be taken against those who pelted stones at the police and passersby." The ironical turn the revelry took over the years has put MTC in a spot. "Earlier students used to hire MTC buses for the day which was to honour drivers. Now it causes damage to MTC and others on the road. This has to stop," says MTC managing director V Babu.

B Mani, a student of Pachaiyappa's College has a counter: "There is no cultural activity in our college and this is our only celebration. Yes, it causes traffic jams, but so do ministers' convoys."
------------------------------------------------------------------------------------------------------------

'Bus Day' celebration turns violent

At least 30 police personnel, including an Assistant Commissioner of Police, and ten others were injured when a ‘Bus Day' celebration turned violent in front of the Pachaiyappa's College here on Wednesday, police said.
According to police sources, about 100 students took a Metropolitan Transport Corporation (MTC) bus from Broadway to their college as part of their ‘Bus Day' celebration around noon on Wednesday. A large posse of police personnel escorted them. On reaching the college premises, the students allegedly threw stones. Traffic was disrupted on EVR Salai following the incident.
“We exercised restraint and persuaded the students to disperse. They continued to throw stones indiscriminately…Six members of the public were also injured. Police used mild force to chase the unruly students into the campus,” Deputy Commissioner of Police (Kilpauk) S. Lakshmi said.
The injured police personnel were admitted to the Kilpauk Medical College and Hospital.
Four students were also hospitalised. “Police entered the campus without obtaining the permission of the management,” a professor of Pachaiyappa's College said.
The incident took place a couple of days after the Madras High Court wanted to know why police were not taking action against unruly celebrations in the name of ‘Bus Day'. Explaining why police used force, Commissioner of Police T. Rajendran said the students kept on throwing stones on the police and public. “Public life and property was endangered. The Inspector of Police (Kilpauk) E. Rajeswari suffered a head injury…we had no other option but to chase the students. One MTC bus and two motorcycles were damaged in stone throwing,” he told The Hindu.
The Kilpauk police have registered a case against unnamed students under various provisions of the IPC, including attempt to murder, and the Public Property (Prevention of Damage and Loss) Act, police sources added.

 

தி.மு.க.,-காங்.,கூட்டணியால்இளங்கோவன் தனிக் கட்சி

மதுரை:""தி.மு.க.,-காங்.,கூட்டணி ஏற்பட்டால் மூப்பனார் போல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனிக்கட்சி துவக்குவார்,'' என ம.தி.மு.க.,கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். விலைவாசி உயர்வை கண்டித்து மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:எகிப்தை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஹோசினி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி செய்து, அவரை அகற்றினர். டுனீசியா அதிபர் பென் அலி வெளியேற்றப்பட்டார். லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக போராடுகின்றனர். இப்படி இஸ்லாமிய நாடுகளில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. தமிழகத்தில் கருணாநிதியின் குடும்ப ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர். ஜாதி அரசியலுக்கு நெய் வார்த்தவர் ராமதாஸ். கலைஞர் "டிவி'யில் சி.பி.ஐ.,சோதனை மேற்கொண்டதை திசை திருப்ப, கருணாநிதி பா.ம.க.,வுடன் தொகுதி உடன்பாடு செய்தார்.தி.மு.க.,விற்கு இனி காங்., என்னென்ன நெருக்கடி தரப்போகிறதோ? தி.மு.க.,- காங்., கூட்டணி வந்தால் மூப்பனார் போல் தனிக்கட்சி துவக்கப்போவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகிறார். தமிழகத்தை ஒரு லட்சத்து 543 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் வைத்துள்ளனர். குஜராத்தில் மின்வெட்டு இல்லை. அங்கு முதல்வர் நரேந்திர மோடி ஒரு லட்சம் கோடியை மிச்சப்படுத்தி, வங்கியில் "டிபாசிட்' செய்து சிறப்பாக ஆட்சி செய்கிறார்.ம.தி.மு.க.,விற்கு 40 தொகுதிகள் ஒதுக்குமாறு ஜெ.,விடம் கோரியுள்ளோம், என்றார்.நகர் செயலாளர் பூமிநாதன், அவைத் தலைவர் சின்னசெல்லம், தொழிற்சங்க நிர்வாகி மகபூப்ஜான் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வைகோ வாழ்த்து

சென்னை : அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் நேற்று ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ சந்தித்து, பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். ""அ.தி.மு.க., தனித்து ஆட்சியைப் பிடிக்கும்,'' என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்டம் இல்லத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, ஜெயலலிதாவுக்கு பூங்கொத்து கொடுத்து, வைகோ பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

வெளியே வந்த வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஜெயலலிதாவுக்கு நாளை(இன்று) 63வது பிறந்த நாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்; தொகுதி பங்கீடு பற்றி பேசவில்லை. தொகுதி பங்கீடு எத்தனை நாளில் இறுதி செய்யப்படும் என்பதை சொல்ல முடியாது. இரு கட்சிகளின் தொகுதி பங்கீடு குழுவினர் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியது திருப்திகரமாக இருந்தது. தேர்தலில் தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி அடையும்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக தி.மு.க., தரப்பில் 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முதல் திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. அதில் 26 அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர், பணம் பட்டுவாடா செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் தி.மு.க., உத்தரவுக்கு எடுபிடி வேலை செய்யும் போலீஸ் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராஜாவை ஜாமீனில் விடாமல் திகார் ஜெயிலில் அடைத்துள்ளனர். சி.பி.ஐ.,யை கையில் வைத்திருக்கும் காங்கிரஸ் அரசை, கருணாநிதி ஏன் எதிர்க்கவில்லை. ராஜா குற்றவாளி அல்ல என்று பொதுக் குழுவில் பேசும் கருணாநிதி, காங்கிரசை எதிர்த்து ஏன் போராடவில்லை.

உண்மையான பயனாளிகளைப் பற்றி ராஜா சொல்லி விடக்கூடாது என்பதற்காகத்தான் அமைச்சர்களும், எம்.பி.,க்களும் திகார் ஜெயிலுக்குச் சென்று ராஜாவை சந்திக்கின்றனர். ஸ்பெக்ட்ரம் ஊழல், ஒருவர் மட்டும் செய்திருக்க முடியாது. அப்படியானால் பெரும் பங்கு யாருக்கு போயுள்ளது? காங்கிரசுக்கு பங்கு செல்லவில்லை என்றால், தி.மு.க., கூட்டணிக்காக காங்கிரஸ் ஏன் துடிக்கிறது? காங்கிரசுக்கு பெரும் பங்கு கிடைத்திருக்க வேண்டும்.

தி.மு.க.,வின் குடும்ப ஆட்சியின் கொள்ளை தொடர வேண்டுமா? தமிழக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டுமா? என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும். அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றியை தமிழக மக்கள் தருவர். இவ்வாறு வைகோ கூறினார்.

அ.தி.மு.க., சார்பில் போட்டியிட 12 ஆயிரம் பேர் விருப்ப மனு

சென்னை : அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோர் மனுக்கள் தாக்கல் செய்ய, நேற்று இறுதி நாள் என்பதால், கட்சியினரின் கூட்டம் அலைமோதியது. நேற்றுடன், 12 ஆயிரம் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்கள், கடந்த 5ம் தேதி முதல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டன. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என, பல்வேறு தொகுதிகளுக்கு பலர் மனு தாக்கல் செய்தனர்.

இதுதவிர, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ஜெகதீசன், தென்காசிக்கு முருகேசன், அம்பாசமுத்திரம் தொகுதிக்கு ராகவன், விருகம்பாக்கம், ஆயிரம் விளக்கிற்கு வைத்தியநாதன், விருகம்பாக்கத்திற்கு வக்கீல் சக்தி சண்முகராஜா, சோழிங்கநல்லூருக்கு எம்.சி.முனுசாமி, ஆர்.கே.நகருக்கு வக்கீல் பால்கனகராஜ், கொளத்தூருக்கு சுந்தர், கன்னியாகுமரிக்கு நாஞ்சில் அன்பழகன் உட்பட, பலர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனு தாக்கல் செய்வதற்கு நேற்று கடைசி நாள் என்பதால், கட்சியினரின் கூட்டம் அலைமோதியது. கடந்த 19 நாட்களாக பெறப்பட்ட மனுக்கள், 12 ஆயிரம் வரை எட்டியுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பக்ட்ரம் ஜே.பி.சி.,யில் பா.ஜ., எம்.பி.,க்கள் யார் ?

 ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பார்லி., கூட்டுக்குழுவில் பா.ஜ., கட்சியை சேர்ந்த ஜஸ்வந்த்சிங், யஸ்வந்த்சின்கா, அலுவாலியா, ரவிசங்கர்பிரசாத், ஹரின்பதக் உள்ளிட்ட 5 பேர் இடம் பெறுவர் என பா.ஜ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதி உடன்பாடு: அ.தி.மு.க., தே.மு.தி.க., பேச்சுவார்த்தை

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடந்தது. சென்னையிலுள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க., சார்பில், பண்ருட்டி ராமச்சந்திரன், பார்த்தசாரதி, சுதீஷ் உள்ளிட்டோரும், அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்

அ.தி.மு.க., வுடன் கூட்டணி மக்கள் விருப்பம்: பண்ருட்டி ராமச்சந்திரன்

சென்னை: தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தே.மு.தி.க., இடையே தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடந்தது. சென்னையிலுள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், தே.மு.தி.க., சார்பில், அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொருளாளர் சுந்தர் ராஜன், இளைஞரணி செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோரும், அ.தி.மு.க., சார்பில் ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். மாலை 5.30 முதல் 7 மணி வரை நடந்த இந்த பேச்சுவார்த்தைக்குப்பின் நிருபர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாக தெரிவித்தார். பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் கட்சித்தலைவர் விஜயகாந்திடம் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், தேர்தலுக்குப்பின் அமையும் ஆட்சியில் பங்கு கேட்கும் எண்ணம் எதுவும் தே.மு.தி.க.,விடம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் தி.முக.,வின் குடும்ப ஆட்சியை அகற்ற, அ.தி.மு.க.,வுடன் தே.மு.தி.க., கூட்டணி வைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

தி.மு.க., முன்னணி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை: காங்கிரஸ் நிபந்தனைகள் குறித்து விவாதம்

சென்னை : "கூட்டணியில் தொடர காங்கிரஸ் தொடர்ந்து நிபந்தனை விதிக்கும் பட்சத்தில், தற்போது நம்மிடம் உள்ள கூட்டணிக் கட்சிகளைக் கொண்டே வெற்றி பெறுவோம்' என, முதல்வர் கருணாநிதி நடத்திய ஆலோசனையில், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், சோனியாவை காங்கிரசின் ஐவர் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சின் போது, ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம், அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு என்று மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் முன் வைத்தது. இதனால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு, பிரச்னையை சோனியாவிடம் தி.மு.க., கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள கோபம், அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று திருவண்ணாமலை சென்ற முதல்வர் கருணாநிதி, கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், இது தொடர்பாக கருத்துக்களை கேட்டார்.கூட்டணியில் இருக்கும் எதார்த்த நிலையை கருத்தில் கொள்ளாமல், 80 சீட் வேண்டும், 90 சீட் வேண்டும் என காங்கிரசின் அனைத்து மட்டத் தலைவர்களும் கூறி வந்தது, தி.மு.க.,வுக்கு தேவையற்ற நெருக்கடியை உருவாக்கியதாகக் கூறும் தி.மு.க., நிர்வாகிகள், லோக்சபா தேர்தலில் அதிக இடங்களைப் பெற இது போன்ற அணுகுமுறையை காங்கிரஸ் பின்பற்றியதை சுட்டிக் காட்டினர்.

"லோக்சபா தேர்தலில், 16 இடங்களைப் பெற்ற காங்கிரசால், தங்கபாலு, மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரபு, கார்வேந்தன் போன்ற முக்கிய தலைவர்களையே வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. கோஷ்டி பூசல், மாவட்ட ஒன்றிய அளவில் தேர்தல் பணி செய்ய காங்கிரசுக்கு ஆள் இல்லாதது. தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை காங்கிரசார் செலவிடாதது போன்றவையால் எதிர் அணி தான் லாபம் அடைந்தது. சட்டசபை தேர்தலிலும் இதே நிலை தான் காங்கிரசால் ஏற்படும்' என்றும் தலைமையிடம் கூறினர்.

"கூட்டணியின் பெரிய கட்சி என்ற வகையில் காங்கிரசின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் இல்லை. தி.மு.க.,வுக்கு நெருக்கடியையும், அவமானத்தையும் உருவாக்குதிலேயே அதன் கவனம் இருந்துள்ளது. காங்கிரசின் முன்னாள் தலைவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் இதற்கு சான்றாக அமைந்துள்ளன' என்றும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிடம் தி.மு.க., தலைமை எடுத்துச் சொல்லியும், அதற்கு கட்டாய கடிவாளம் போடாத காங்கிரஸ் தலைமையால், தி.மு.க., தலைமை தனிப்பட்ட அவமானங்களை சந்தித்ததை வரிசைப்படுத்தினர்.
சி.பி.ஐ.,யை கையில் வைத்துக் கொண்டு தனது சொந்த லாபங்களுக்காக காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. முலாயம் சிங், மாயாவதி போன்ற தலைவர்களை இதுபோல மிரட்டியுள்ள காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோதனை என்ற பெயரில் அறிவாலயம் வரை சி.பி.ஐ.,யை அனுப்பி மிரட்டுவது சரியல்ல என்று குறை கூறிய தி.மு.க., தலைவர்கள், "இதே காங்கிரசால், மிசா நெருக்கடியையும் கடந்து வந்துவிட்டோம், தோழமை என்ற நிலையில் காங்கிரசுடன் அனைத்து உறவுகளையும் தொடரலாம், மிரட்டலுக்கு பணிந்து கூட்டணியை தொடர வேண்டிய அவசியமில்லை' என, கருணாநிதியிடம் கூறினர்.

"பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மூலம் வட மாவட்டங்களிலும், கொங்கு நாடு மக்கள் கட்சி மூலம் மேற்கு மாவட்டங்களிலும், மூவேந்தர் முன்னணி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் மூலம் தென்மாவட்டங்களிலும் தேர்தலை எதிர்கொள்ளலாம். தி.மு.க.,வின் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இவை முழுமையாக நமக்கு கை கொடுக்கும். காங்கிரசால் நமக்கு பயனில்லை; சுமை தான்' என்று தலைமையிடம் வாதிட்டனர்.

இந்நிலையில், காங்கிரசின் ஐவர் குழு மற்றும் தமிழகத்துக்கான பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரை அழைத்து, சோனியா நேற்று டில்லியில் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்படுகிறது.

Wednesday, February 23, 2011

ரேஷன் கார்டுகளைத் திருப்பித்தர முடிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள குலையனேரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தண்ணீர் வசதி கேட்டு கடந்த 7 நாட்களாக ஊரை விட்டு வெளியேறி, ஊருக்கு வெளியே உள்ள குளத்தின் அருகே வசித்து வருகின்றனர். தங்கள் கோரிக்கைக்கு 7 நாட்களாக தீர்வு ஏற்படாததால் இன்று அவர்கள் ரேஷன் கார்டுகளையும் வாக்காளர் அடையாள அட்டைகளையும் திருப்பித்தர முடிவு செய்துள்ளனர்

தேர்தல் அறிவிப்புக்கு முன்பே பண பட்டுவாடா: தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க., சவால்

தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தி.மு.க.,வினர், இப்போதே பணப் பட்டுவாடாவை துவக்கிவிட்டதாக, தகவல் வெளியாகியுள்ளது. இதை, தேர்தல் கமிஷன், எப்படி தடுக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, அனைத்து அரசியல் கட்சிகளும் வேகமாக தயாராகி வருகின்றன. தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கூட்டணியில், தொகுதிப் பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது.தி.மு.க., அணியில், பா.ம.க.,விற்கு, 31 சீட்கள் வழங்கப்பட்ட நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் மத்தியில், "சீட்' எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இடம் பெறுவது தொடர்பான அறிவிப்பு, அடுத்த மூன்று நாட்களில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.தேர்தல் நேரத்தில் பண வினியோகத்தை தடுப்பது, ஓட்டு போட்ட வாக்காளர்களுக்கு ரசீது வழங்குவது, கள்ள ஓட்டை தடுப்பது போன்ற ஆலோசனையில், தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இது ஒருபுறம் நடக்க, தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில், தி.மு.க., தரப்பில் பணப்பட்டுவாடா துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதற்கட்டமாக, மாவட்ட செயலர்கள் மூலம், கிராமப்புறங்களில் உள்ள கட்சியின் கிளைச்செயலர்களுக்கு தலா, 13 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாகவும், 100 வாக்காளர்களுக்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தலா, 3,000 ரூபாய் கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், அவர்கள் மூலம் வாக்காளர்களை வளைக்கவும் இந்த பட்டுவாடா நடந்துள்ளதாக தகவல் கசிகிறது.தி.மு.க.,வின் இந்த பணப்பட்டுவாடா குறித்த தகவல், அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் தெரிந்துள்ளது.

இது குறித்து, சமீபத்தில் நடந்த ம.தி.மு.க., பொதுக்குழுவில் வைகோ கூறும்போது, "தி.மு.க.,வினர் பணப்பட்டுவாடாவை இப்போதே துவக்கிவிட்டனர்; இதை தடுப்பதற்கு தேர்தல் கமிஷனர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என தெரியவில்லை' என்றார்.

ஆனால், தி.மு.க., தொண்டர்களுக்கு வழங்கப்படும் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தரப்பில் எடுக்கப்படவில்லை. "பொதுமக்களுக்கு வழங்கும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்ற நினைப்பில் உள்ளதாக தெரிகிறது. இதை, தலைவர்கள் கண்டுக்கொள்ளாத நிலையில், அதை தடுக்க வழி தெரியாமல் எதிர்க்கட்சிகளின் உள்ளூர் நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.

வடசென்னையில், தி.மு.க., சார்பில் பெண்களுக்கு, பல்வேறு இலவச பயிற்சிகள் அளித்து, தையல் இயந்திரம், மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடும், ஆர்.கே.,நகர் தொகுதியில் ரகசியமாக நடக்கிறது. இதற்கான பயனாளிகள் தேர்வும், தி.மு.க., சார்பில் நடந்து முடிந்துள்ளது.வரும் மார்ச் மாதம், துணை முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளின் போது, இந்த இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என தெரிகிறது.தி.மு.க.,வினர், பணப்பட்டுவாடாவை துவங்கி உள்ள நிலையில், தேர்தல் கமிஷன் தூங்கி வழிந்துவருகிறது. இப்போதே அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தினால் மட்டுமே, உண்மையாகவே தேர்தல் கமிஷன் எதிர்பார்ப்பதை போன்று நடுநிலையான தேர்தல் நடக்கும். அதனால், பணப்பட்டு வாடாவை தடுக்கும் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை விரைந்து துவக்கவேண்டியது அவசியமாகியுள்ளது.

ஸ்டாலின் இன்று டில்லி செல்கிறார்

சென்னை:துணை முதல்வர் ஸ்டாலின், இன்று டில்லி செல்கிறார்.டில்லிக்கு இரண்டு நாள் பயணமாக செல்லும் அவர், ஐ.பி.என் -7 என்ற அமைப்பின் சார்பில் நடக்கும், வைர மாநிலங்களுக்கான விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.தன் பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ராஜாவை சந்திப்பார் எனக் கூறப்படுகிறது.

தமிழக சட்டசபைக்கு மே 5, 6ல் தேர்தல்?

திண்டுக்கல் :தமிழக சட்டசபை தேர்தல் மே 5 அல்லது 6ல் நடக்க வாய்ப்புள்ளது.

கடந்த சட்டசபை தேர்தல் 2006ல் மே 8ல் நடந்தது. முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க., அரசு மே 13ல் பொறுப்பேற்றது. எனவே, வரும் மே 12க்குள் புதிய அரசு பொறுப்பேற்க வேண்டும். அதற்குள் தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்தி முடித்தாக வேண்டும்.

எப்போது தேர்தல்: தேர்தல் தேதி அறிவிப்பிலிருந்து குறைந்தது 40 நாட்கள் கழித்து வேட்பு மனு தாக்கல் துவங்கும். அதிலிருந்து குறைந்தது 25 நாட்களில் ஓட்டுப்பதிவு நடக்கும். ஓட்டுப்பதிவு நடந்த 3 நாட்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். கடந்த தேர்தல்களில் இந்நடைமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்:இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். வேட்பு மனு தாக்கல் ஏப். 11லும்(திங்கள்), மே 5 (வியாழன்) அல்லது மே 6 (வெள்ளி)ல் ஓட்டுப்பதிவும், மே 8ல் ஓட்டு எண்ணிக்கையும் நடைபெறும் வகையிலும் தேர்தல் அட்டவணை அமைய வாய்ப்புள்ளது.

தினமலர் இணையதளம் பரிந்துரைக்கும் பிரவுசர்; வேகம், பாதுகாப்பு, எளிமைக்கு கு‌ரோம் பிரவுசர்

தி.மு.க., கூட்டணிக்கு காங்கிரஸ் கட்சி 3 நிபந்தனை : சோனியாவிடம் நேரில் பேச தி.மு.க., திட்டம்

சென்னை : தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்கு முன், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல்திட்டம், ஒருங்கிணைப்புக் குழு ஆகிய மூன்று நிபந்தனைகளை, காங்கிரஸ் கட்சியின் ஐவர் குழு விதித்துள்ளது. இதை ஏற்க மறுத்துள்ள தி.மு.க., தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான நிலையை ஏற்படுத்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளது. முதல்வர் கருணாநிதியின் தூதுவராக டி.ஆர்.பாலு, சோனியாவை சந்திக்க உள்ளார்.

தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. துணைமுதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., குழுவினருடன், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட காங்கிரஸ் குழு பேச்சு நடத்தியது. கூட்டணி ஆட்சிக்கு உறுதியளிக்க வேண்டும். குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க ஒப்புக் கொள்ளவேண்டும் என்று காங்கிரஸ் சார்பில் அப்போது வலியுறுத்தப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு, மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அரசில் குறைந்தபட்ச செயல் திட்டம் ஏதுமில்லை. அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழுவும் அமைக்கப்படவில்லை. எனவே, அதுபோன்ற முறையை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் தி.மு.க., தரப்பில் கூறப்பட்டது.

இந்த கருத்து வேறுபாட்டால், தி.மு.க., - காங்கிரஸ் இடையேயான பேச்சுவார்த்தை முன்னேற்றம் ஏற்படாமல் நின்றுபோனது. மேலும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற காங்கிரசின் கோரிக்கை வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், தொகுதிப் பங்கீடு பேச்சின்போது, ஆட்சியில் பங்கு என்பது தேவையற்ற ஒன்று என்றும், அதற்கு இப்போது எவ்வித அவசியமும் ஏற்படவில்லை என்றும், தி.மு.க., தரப்பில் கூறப்படுகிறது.ஆட்சியில் பங்கு அளிப்பது பற்றி, அவசியம் ஏற்பட்டால், தேர்தல் முடிந்து தான் பேச முடியும் அப்படி இருக்கையில், காங்கிரஸ் அக்கோரிக்கையை வலியுறுத்தியதால், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்தையின் போது பேசவேண்டிய முக்கிய அம்சங்கள் தடைபட்டுப் போனதாகவும் தி.மு.க., மூத்த நிர்வாகி ஒருவர் குற்றம்சாட்டுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "தி.மு.க., தலைமையில் பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணிகள் பலமுறை அமைக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை எழவில்லை. தி.மு.க., - காங்கிரஸ் கட்சிகள் இணைந்து, ஆட்சி பங்கு பார்முலாவை முன்வைத்து சந்தித்த 1980 தேர்தலில், படுதோல்வியை சந்திக்க நேர்ந்தது. இதனால், கூட்டணி ஆட்சி பார்முலா தமிழகத்துக்கு ஒத்துவராது' என்றார்.

இந்நிலையில், தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்டுள்ள சிக்கலைப் போக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா தலையிட்டு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தி.மு.க, முடிவு செய்துள்ளது. சோனியாவின் தலையீட்டுக்குப் பின்னரே தி.மு.க., - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் சுமுக உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே, முதல்வர் கருணாநிதியின் கருத்துக்களை சோனியாவிடம் கூறுவதற்காக, அவரை சந்திக்க டி.ஆர்.பாலு நேரம் கேட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் சோனியாவை சந்தித்து அவர் விளக்கம் அளிக்க உள்ளார். இதன்பின், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படலாமென தி.மு.க., கருதுகிறது.

Tuesday, February 22, 2011

தொகுதி பங்கீட்டில் தி.மு.க., புதிய, பார்முலா: சிறிய கட்சிகள் அதிர்ச்சி

சட்டசபை தேர்தல் தொகுதிப் பங்கீட்டில், சிறிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தி.மு.க., புதிய, "பார்முலா'வை பின்பற்றுவதால், அதிக தொகுதிகளை எதிர்பார்த்திருக்கும் சிறிய கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள, 234 சட்டசபை தொகுதிகளில், கடந்த முறை அமைந்த தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், தி.மு.க., 132 தொகுதிகளிலும், காங்கிரஸ், 48, பா.ம.க., 31 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அப்போது, இந்த கூட்டணியில் இருந்த இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும், 23 தொகுதிகளைப் பெற்றன. இந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகள், அ.தி.மு.க., அணியில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட, 23 தொகுதிகள், தி.மு.க., வசம் கூடுதல் தொகுதிகளாக உள்ளன.இந்நிலையில், கடந்த சட்டசபை தேர்தலில் பின்பற்றிய, "பார்முலா'படியே வரவுள்ள சட்டசபை தேர்தலில் பெரிய கட்சிகளுக்கு சீட் ஒதுக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., அணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க.,விற்கு, 31 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் கடந்த முறை போட்டியிட்ட, 23 தொகுதிகள், தி.மு.க.,வசம் உள்ளன. இந்த தொகுதிகளைக் கொண்டு தான் விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் வழங்கப்படும். கூடுதல் இடங்கள் கேட்கும் காங்கிரசுக்கும், இதிலிருந்தே தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று, தி.மு.க., புதிய, "பார்முலா' வகுத்துள்ளது.இந்த, "பார்முலா'வுக்குள், தாங்கள் கேட்கும் தொகுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென, தி.மு.க., அறிவுறுத்தியுள்ளதால், சிறிய கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன. கூடுதல் தொகுதிகளைப் பெற வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கடந்த முறை, ஒன்பது தொகுதிகளில் போட்டியிட்டது. இம்முறை இரண்டு இலக்க எண்ணிக்கையை தொடர விரும்பும் அக்கட்சி, 12 தொகுதிகள் வரை கேட்பதாக கூறப்படுகிறது.மேற்கு மண்டலத்தில் கணிசமாக ஓட்டு வங்கி வைத்திருக்கும், கொங்குநாடு மக்கள் கட்சி, தி.மு.க., கூட்டணியில் நான்கு தொகுதிகள் வரை கேட்கிறது. தங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில், தங்களுக்கான சின்னத்தில் போட்டியிடவும் இக்கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது.

தி.மு.க., "பார்முலா' படி, கம்யூனிஸ்டுகளுக்கு ஒதுக்கப்பட்டு, தற்போது காலியாக உள்ள தொகுதிகளை, சிறிய கட்சிகளுக்கு பிரித்து கொடுத்தது போக, காங்கிரசுக்கு கூடுதலாக, 10 தொகுதிகள் வரை ஒதுக்க திட்டமிடப்படுள்ளது. காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட, 48 தொகுதிகளுடன், கூடுதலாக, 10 தொகுதிகள் வரையே, அதற்குக் கிடைக்கும் என்று தெரிகிறது.

தி.மு.க., - விடுதலை சிறுத்தைகள் பேச்சு

சென்னை : தி.மு.க., மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் இடையே, தொகுதிப் பங்கீடு தொடர்பான முதல்கட்ட பேச்சு, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க., சார்பில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில், அக்கட்சியின் தலைவரும், எம்.பி.,யுமான திருமாவளவன், ரவிக்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் பங்கேற்றனர்.



திருமாவளவன் கூறியது: பேச்சுவார்த்தை, இரு தரப்பிற்கும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்த கட்டத்தில் முடிவாகி, விரைவில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்படும். முதல் முறையாக பா.ம.க.,வுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம். வட மாவட்டங்களில் குறைந்தது, 110 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றிபெறும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

திகார் சிறையில் ராஜாவை சந்தித்து பாலு ஆறுதல் : தைரியமாக இருப்பதாக தகவல்

ஸ்பெக்ட்ரம் விவகார வழக்கில் கைதாகி, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜாவை, தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். இனி மற்ற தி.மு.க ., எம்.பி.,க்களும் ராஜாவை சந்திப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லியை அடுத்த திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ராஜாவை, தி.மு.க., பார்லிமென்ட் கட்சி தலைவர் டி.ஆர்.பாலு நேற்று மாலை 4.50 மணிக்கு சந்தித்தார். சிறையின் பார்வையாளர் அறையில் இச்சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராஜாவின் மனைவி, ராஜாவை சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து டி.ஆர்.பாலுவிடம் கேட்டபோது, "ஏற்கனவே ராஜாவுக்கு அல்சர் பிரச்னை இருக்கிறது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, அவர் அவதிப்படுவதாக ராஜாவின் குடும்பத்தினர் கவலைப்பட்டனர். இதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க வந்தேன். அதுமட்டுமல்லாது அவர் எங்களது கட்சியின் எம்.பி.,யும் ஆவார்.அவரை சந்தித்து ஆறுதலும், ஆதரவும் தெரிவிக்கவேண்டியது என் கடமை. அதை தான் செய்தேன். சிறையில் ராஜா தைரியத்துடன் உள்ளார். வழக்குகள் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தேன்' என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக எம்.பி.,க்கள் பலரும் டில்லிக்கு வந்துள்ளதால், தி.மு.க.,வை சேர்ந்த பிற எம்.பி.,க்களும் அடுத்தடுத்து ராஜாவை சந்திப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறை அதிகாரி தகவல்: இதனிடையே, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்காக, சிறையின் விதிமுறைகள் எதுவும் தளர்த்தப்படவில்லை என சிறை அதிகாரி தெரிவித்தார்.

டில்லி, திகார் சிறை சிறையின் உயரதிகாரி நீரஜ் குமார் நேற்று கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவுக்கு, சிறையில் சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளதாக மீடியாக்களில் தகவல் வெளியாகியுள்ளன. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ராஜாவுக்காக, சிறை விதிமுறைகள் எதுவும் தளர்த்தப்படவில்லை. சிறையில் அவருக்கென தனியாக எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. மற்ற கைதிகளை போல் தான், அவரும் நடத்தப்படுகிறார். திகார் சிறையில் பாதுகாப்பு பணியில் உள்ள தமிழக போலீசார், அவருக்கு எந்த சலுகையும் காட்டவில்லை. ஒரு அறையில் இருக்கும் கைதிகள், மற்ற அறையில் இருக்கும் கைதிகளுடன் பேச முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு அறையின் சுவர்களும் உயரமாக அமைக்கப்பட்டுள்ளன.மற்ற கைதிகளை போல் ராஜாவும் தரையில் தான் உறங்குகிறார். தரையில் விரிப்பதற்காக அவருக்கு ஏழு கம்பளிகள் வழங்கப்பட்டுள்ளன. கோர்ட் உத்தரவை பின்பற்றுகிறோம்.எழுத்துப்பூர்வமான உத்தரவு வந்தால் மட்டுமே, ராஜாவை சந்திப்பதற்கு பிறருக்கு அனுமதி அளிக்கப்படும். அதேபோல் சலுகைகள் அளிக்கும் விஷயத்தில் எழுத்துப்பூர்வமான உத்தரவு வந்தால் மட்டுமே நிறைவேற்றுவோம்.இவ்வாறு நீரஜ் குமார் கூறினார்.

35 சீட் கேட்டு அ.தி.மு.க.,விடம் ம.தி.மு.க., பிடிவாதம்

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், 35 தொகுதிகளை ஒதுக்கீடு செய்தது போல், இந்த தேர்தலிலும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினரிடம், ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் நேற்று, பிடிவாதமாக வலியுறுத்தினர். எத்தனை தொகுதிகள் என்ற இறுதி முடிவை, அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா எடுப்பார் என, அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழுவினர் தெரிவித்ததால், தொகுதி பங்கீடு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது.



அ.தி.மு.க., அணியில், புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், மனித நேய மக்கள் கட்சி உட்பட நான்கு கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உடன்பாடு முடிந்துள்ளது. இந்த கட்சிகளை விட கூடுதல் பலம் கொண்ட கட்சியான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை, அ.தி.மு.க., முடித்து விட்டது. இரு கட்சிகளும் விரும்பிக் கேட்ட தொகுதிகளின் எண்ணிக்கையின் முடிவு அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழுவினரான ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருடன், ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவின் மாரியப்பன், பாலவாக்கம் சோமு, செய்தி தொடர்பாளர் நன்மாறன் ஆகியோர் நேற்று, ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர்.

பேச்சுவார்த்தை முடிந்த பின், மாரியப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பேச்சுவார்த்தை திருப்தியாக அமைந்தது. எங்களுடைய ஒட்டு மொத்த குறிக்கோள், தி.மு.க., ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான். இதற்காக ஒருங்கிணைந்து செயல்பட வியூகம் அமைத்துள்ளோம். ம.தி.மு.க., வுக்கு எத்தனை இடம் என்பது பற்றி இரு தலைவர்களும் முடிவு செய்வர். இன்னும் சில கட்சிகள் இந்த அணிக்கு வரவுள்ளன,'' என்றார்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், ம.தி.மு.க., வுக்கு, 35 தொகுதிகளை, அ.தி.மு.க., ஒதுக்கியது. அதே பார்முலாவில் இந்த முறையும், 35 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ம.தி.மு.க., தொகுதி பங்கீடு குழுவினர் வலியுறுத்தினர்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க., அணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெறவில்லை. அதனால், தொகுதிகள் அதிகமாக இருந்தன. தற்போது, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கூடுதலாக தே.மு.தி.க., வும், அ.தி.மு.க., அணியில், இடம்பெறவுள்ளது. அக்கட்சிக்கும் கணிசமான தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். எனவே, ம.தி.மு.க., கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கை, ஜெயலலிதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். அவர் இறுதி முடிவை எடுப்பார் என, தொகுதி பங்கீடு குழுவினர் பேசியதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

ம.தி.மு.க., வும், 35 தொகுதிகள் முடிவிலிருந்து குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., வுக்கு கடந்த தேர்தலில், 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது போல, தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ம.க.,வுக்கு வடமாவட்டங்களில் தான் செல்வாக்கு என்றால், ம.தி.மு.க., வுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக கட்சியின் கிளைகள் உள்ளன. மேற்கு, தெற்கு மாவட்டங்களில், ம.தி.மு.க.,வுக்கு தொகுதி வாரியாக கணிசமான ஓட்டு வங்கியும் உள்ளது.

கடந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில், ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் ம.தி.மு.க., தோல்வி அடைந்தது. 2001ம் ஆண்டு தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டுள்ளது.தேர்தலில் சூறாவளி பிரசாரத்தில், ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, கொள்கை பரப்பு செயலர் நாஞ்சில் சம்பத் ஈடுபடுவர். எனவே, பா.ம.க.,விற்கு எந்த விதத்திலும் ம.தி.மு.க., குறைந்த கட்சி அல்ல. பா.ம.க., வுக்கு இணையாக, 31 தொகுதிகளை கொடுத்தால் கூட மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வோம் என ம.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, தே.மு.தி.க.,வுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்த பின் ம.தி.மு.க., வின் தொகுதி எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்படும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நமது சிறப்பு நிருபர்-

பிரதமர் மன்மோகன் சிங் மீது ஜெயலலிதா கடும் சாடல்

சென்னை : "பிரதமர் மன்மோகன் சிங், நாட்டை தொற்றிக் கொண்டிருக்கும் அனைத்து நோய்களையும் மூடி மறைக்கும் மனோதிடமற்ற, முதுகெலும்பில்லாத பிரதமர்' என, ஜெயலலிதா கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கை: பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பிரச்னைகள் குறித்து ஊடகங்களுடன் கலைந்துரையாடிய போது, கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் ஏற்படுத்தும் விவகாரங்களை சமாளிப்பதில், திறம்ப செயல்பட முடியாத தன் பரிதாபமான இயலாமையை, திரும்பத் திரும்ப ஒப்புக் கொண்டது, அவரது கையாலாகாத்தனத்தையே எடுத்துக் காட்டியது.

தன் அரசின் பெரும்பாலான தோல்விகளுக்கு, கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஏற்பட்ட சமரசங்கள் தான் காரணம் என்பதை, சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தார் மன்மோகன் சிங். லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் இமாலய ஊழலை நிகழ்த்தியவர் என்ற குற்றச்சாட்டிற்கு ராஜா ஏற்கனவே ஆளாகியிருந்தார்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக கூட்டணி அரசு அமைந்த போது, ராஜாவை தொலை தொடர்புத் துறை அமைச்சராக மீண்டும் நியமனம் செய்ததற்கு, கூட்டணி கட்சியின் நிர்பந்தம் தான் காரணம் என, பிரதமர் தெரிவித்திருக்கிறார். அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் பிரதமரிடத்தில் தான் இருக்கிறது என, அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து தன் கட்சித் தலைவருடனும், கூட்டணி கட்சி தலைவர்களுடனும் கலந்து ஆலோசிப்பதில் தவறில்லை. ஆனால், மத்திய அமைச்சரை தேர்ந்தெடுப்பதில், தனக்கு எவ்வித பங்கும் இல்லை என்றும், இவ்விஷயத்தில் தன் கைகள் கட்டப்பட்டு விட்டன என்றும் பிரதமர் ஒப்புக் கொண்டிருப்பது, இந்திய அரசியல் சாசனத்தையே முற்றிலும் அவமதிப்பது போல் உள்ளது.

"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில், பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை ராஜா எடுத்த போது மவுனம் சாதித்தது குறித்த கேள்விக்கு, "தான் அது குறித்து கடிதம் எழுதியதாகவும், எந்த தவறுக்கும் இடமில்லை' என, ராஜா கூறியதாகவும் பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். ராஜா அளித்த உறுதியின் அடிப்படையில், நாட்டின் சொத்து கொள்ளையடிக்கப்பட்டதை பிரதமர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து தனக்கு தெரியாது என, பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங் நிச்சயமாக சொல்லியிருக்கக் கூடாது. பிரச்னையில் தலையிட்டு, நாட்டின் சொத்து சுரண்டப்படுவதைத் தடுத்து இருக்க வேண்டும். ஆனால், கூட்டணி தர்மம் என்ற தெளிவற்ற காரணத்தைக் காட்டி, பிரதமர் வாய் மூடி மவுனியாக இருந்து விட்டார். இது தான் இன்று இந்தியா எதிர்கொண்டிருக்கும் வருத்தம் தோய்ந்த உண்மை நிலை.

தன் அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியாததோடு மட்டுமல்லாமல், எல்லை மீறி பிரச்னைகள் செல்லும் போது, அதில் தலையிட முடியாத ஒருவரை நாம் பிரதமராக பெற்றிருக்கிறோம். "எஸ் - பாண்ட்' அலைக்கற்றையை, இஸ்ரோ ஒதுக்கியது, காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல் போன்ற கூட்டணி தர்மத்திற்கு தொடர்பில்லாத வினாக்களுக்கும் திருப்திகரமான பதில்களை பிரதமர் தரவில்லை.

மொத்தத்தில், பிரதமரின் ஊடகங்களுடனான நேரடி கலந்துரையாடல் என்பது, வெடிக்காத பட்டாசு போல், புஸ்வானமாக அமைந்ததோடு, அவலமானதாகவும் இருந்தது. இதன் மூலம், கூட்டணி தர்மம் என்ற எளிதில் உடையக் கூடிய கண்ணாடி போன்ற பலவீனமான கேடயத்தை பயன்படுத்தி, இந்நாட்டை தொற்றிக் கொண்டிருக்கிற அனைத்து நோய்களையும் மூடி மறைக்கும், மனோதிடமற்ற, முதுகெலும்பில்லாத பிரதமர் நமக்கு வாய்த்திருக்கிறார் என்பது வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அன்புமணி உதவியாளர் வீட்டில் சி.பி.ஐ., ரெய்டு: மருத்துவ கல்லூரி அனுமதி ஊழல் வழக்கில் திருப்பம்

சென்னை : மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணியின் பாதுகாப்பு உதவியாளராக இருந்தவர் வீட்டில் சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, ஆவணங்களை அள்ளிச் சென்றனர். இந்த ரெய்டு சம்பவம், பா.ம.க., வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அளவில் மருத்துவக் கல்லூரிகள் துவக்குவதற்கு, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், உரிய வசதிகள் இல்லாத மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதில், பெருமளவில் பணம் கைமாறியதாகவும் சி.பி.ஐ.,க்கு தகவல் வந்தது.இதையடுத்து, இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த கேதன் தேசாய் வீடு, மருத்துவக் கல்லூரி, அலுவலகம் ஆகியவற்றில் சி.பி.ஐ., சோதனை நடத்தியதில், முறைகேடாக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள், பணம் மற்றும் நகைகள் கைப்பற்றப்பட்டதுடன், கேதன் தேசாயும் கைது செய்யப்பட்டார்.

சி.பி.ஐ., அதிகாரிகள், கேதன் தேசாயிடம் நடத்திய விசாரணையில், பல்வேறு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான தகவல்கள் சிக்கின. இதில், மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள இண்டக்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதில், அப்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாசின் பாதுகாப்பு உதவியாளராக இருந்த, டி.எஸ்.மூர்த்திக்கு தொடர்பிருப்பதாக தெரிந்தது. மத்திய புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்து ஓய்வு பெற்ற மூர்த்தி, அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது, அவரது பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார். அப்போது, அமைச்சருக்கு நெருக்கமானவராக காட்டிக் கொண்ட மூர்த்தி, இண்டக்ஸ் கல்லூரிக்கு அனுமதி பெற்றுத் தந்ததில், இடைத்தரகராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சி.பி.ஐ.,யில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இது தொடர்பாக, கடந்த மாதம் டில்லியில் இருந்து சி.பி.ஐ., அதிகாரிகள், சென்னை, சேத்துப்பட்டு, குருசாமி சாலையில் உள்ள மூர்த்தியின் வீட்டிற்கு சோதனையிட வந்தனர். அப்போது, அமெரிக்காவில் உள்ள தன் மகள் வீட்டிற்கு மூர்த்தி சென்று விட்டார். இதையடுத்து, வீட்டைப் பூட்டி சீல் வைத்த அதிகாரிகள், மூர்த்தியின் வருகைக்காக காத்திருந்தனர். அமெரிக்காவில் இருந்து நேற்று காலை, மூர்த்தி சென்னை வருவதாக சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.நேற்று காலை, சென்னை வந்து வீட்டிற்குள் நுழைவதற்காக மூர்த்தி காத்திருந்தபோது, டில்லியில் இருந்து தயாராக வந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள், மூர்த்தி முன்னிலையில் வீட்டில் சோதனையிட்டனர். டில்லி அதிகாரிகள் நான்கு பேர் மற்றும் சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட ஆறு பேர், வீடு முழுக்க சோதனையிட்டனர். நேற்று காலை துவங்கிய இந்த சோதனை, பிற்பகல் 1:30 மணி வரை நீடித்தது.

சோதனையில், மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்கிக் கொடுத்த போது, நடந்த பணப் பரிமாற்றம் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் சிக்கின. இந்த ஆவணங்கள் அடிப்படையில், சி.பி.ஐ., மூர்த்தியிடம் விசாரணை நடத்த உள்ளது. இதில், கல்லூரி அனுமதிக்காக பெற்ற பணம், யாரிடம் கொடுக்கப்பட்டது, நடந்த முறைகேடுகள் குறித்தும் கேட்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சி.பி.ஐ., முடிவெடுக்கும்.மத்தியஅமைச்சராக இருந்த அன்புமணியின், முன்னாள் உதவியாளர் வீட்டில் நடந்துள்ள இந்த ரெய்டு காரணமாக, பா.ம.க.,வினர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

Sunday, February 20, 2011

தி.மு.க., திட்டம் குறித்து காங்., ஐவர் குழு இன்று முடிவு: அதிக தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு

கூட்டணி உறவில் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், காங்கிரஸ் - தி.மு.க., இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடக்கவுள்ளது. சட்டசபை பொதுத் தேர்தலில் காங்கிரசும், தி.மு.க.,வும் கூட்டணியாக போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டாலும், "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில், மத்திய அரசு எடுத்துவரும் அடுத்தடுத்த நடவடிக்கைகள், ஆளுங்கட்சி, "டிவி'யின் வாசலில் கால் வைத்துள்ள சி.பி.ஐ.,யின் நடவடிக்கைகள், இந்த கூட்டணிக்கு வேட்டு வைத்து விடுமோ என்ற அச்சம், அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க., தலைவரும், முதல்வருமான கருணாநிதியை, காங்கிரஸ் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள ஐவர் குழு, இன்று சந்திக்கிறது. ஐவர் குழுவில், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், எம்.எல்.ஏ., ஜெயக்குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த கூட்டணியில் இடம்பிடித்துள்ள பா.ம.க.,வுக்கு, கடந்த முறை வழங்கப்பட்டுள்ள, 31 சீட்கள், மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. "ஆட்சியில் பங்கு' என்ற கோஷம் எழுந்தாலும், வெளிப்படையாக எந்த நெருக்கடியையும் தராமல், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அந்த ஆதரவுக்கு கைமாறாக, இந்த முறை, கூடுதல் இடங்கள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரசார் உள்ளனர்.

மேலும், கடந்த முறை, இந்த கூட்டணியில் இடம்பெற்ற மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தற்போது இல்லாததால், அந்த இடங்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸ் உள்ளது. ஆட்சியில் பங்கு, 70 தொகுதிகள் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் தரப்பில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில், ஆட்சியில் பங்கு கிடைக்காவிட்டாலும், 55 முதல், 60 தொகுதிகள் கிடைத்தாலே காங்கிரசார் உற்சாகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராகி விடுவர் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இந்த எண்ணிக்கையில் தொகுதிகளை வழங்க, தி.மு.க.,வும் தயாராக இருப்பதாகவே, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதிகளின் எண்ணிக்கை, முதல்வர் முன்னிலையில் இன்று முடிவானால், அந்த தகவல் டில்லி தலைமைக்கும், ராகுலுக்கும் தெரிவிக்கப்பட்டு, பின், அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின் போது, குலாம் நபி ஆசாத், தமிழகம் வரவழைக்கப்படுவார் என்றும், அவர் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாகும் என காங்.,தரப்பில் கூறப்படுகிறது.

print