Tuesday, May 17, 2011

தமிழக அமைச்சர்கள் பயோடேட்டா

 
ஜெயலலிதா - முதல்வர்

(பொது துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், பொது நிர்வாகம், டிஆர்ஓ, லஞ்ச ஒழிப்பு, காவல் துறை, உள்துறை)

வயது 63. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். 1991-96, 2002-06ம் ஆண்டுகளை தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முதல்வர் ஆகியுள்ளார்.

ஓ.பன்னீர் செல்வம் - நிதி

(திட்டம், சட்டசபை, தேர்தல்கள்
மற்றும் பாஸ்போர்ட்)
வயது 60. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதி எம்.எல்.ஏ. சொந்த ஊர் பெரியகுளம். கல்வித்தகுதி பி.ஏ. மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப். மகள் கவிதா. வகித்த பதவிகள்: பெரியகுளம் நகர அதிமுக செயலர், நகர்மன்ற தலைவர், மாவட்ட செயலர், 2001-2006 மற்றும் 2006-2011ல் பெரியகுளம் தொகுதி எம்எல்ஏ, முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர், எதிர்க்கட்சி துணைத் தலைவர். தற்போது அதிமுக பொருளாளர்.

செங்கோட்டையன் - வேளாண்மை

வயது 64. ஈரோடு மாவட்டம் கோபி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்எஸ்எல்சி படித்தவர். சொந்த ஊர் கோபி அடுத்த குன்னம்பாளையம். அதிமுக தலைமை நிலைய செயலாளர். மனைவி ஈஸ்வரி. மகன் கதிர் ஈஸ்வர், கோவையில் இன்ஜினியரிங் கல்லூரி நடத்தி வருகிறார்.

விஸ்வநாதன் - மின்சாரம்

வயது  62. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி எம்.எல்.ஏ. கல்வித் தகுதி பி.எஸ்சி. தொழில்: விவசாயம், சொந்த ஊர்: நத்தம் ஒன்றியம் உலுப்பகுடி. மனைவி செல்வராணி, மகள்கள் கவிதா, ரஞ்சிதா. மகன் அமர்நாத். கட்சிப் பொறுப்பு: திண்டுக்கல் மாவட்ட செயலாளர்.

கே.பி.முனுசாமி - உள்ளாட்சி

வயது 61. கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர். பி.ஏ., பி.எல். முடித்துள்ளார். இப்போது கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளராக உள்ளார். 2 முறை எம்எல்ஏவாகவும்,  ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். மனைவியும்
ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

சண்முகவேலு - தொழில்

வயது 62. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி எம்.எல்.ஏ. படிப்பு எம்.ஏ. சொந்த ஊர் உடுமலை அடுத்த சாமராயபட்டி. மனைவி மனோன்மணி. மகள் மீனாட்சி, மகன் ராஜ்குமார். அதிமுக திருப்பூர் மாவட்ட செயலாளர்.

வைத்திலிங்கம் - வீட்டுவசதி

வயது 56. ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏ. சொந்த ஊர் ஒரத்த நாடு அருகே தெலுங்கன்குடிகாடு. கல்வித் தகுதி பி.ஏ. மாவட்ட செயலாளராக உள்ளார். 2001-ல் தொழில்துறை மற்றும் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். 2006-ல் இதே தொகுதியில் வெற்றி பெற்றார். மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

கிருஷ்ணமூர்த்தி - உணவு

வயது 56. கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ. சொந்த
ஊர் போளூர் தாலுகா எலத்தூர் கிராமம். கல்வித் தகுதி பி.எஸ்சி (அக்ரி). கட்சியில் தற்போது தி.மலை
தெற்கு மாவட்டச் செயலாளர். ஒன்றியக்குழு தலை வராகவும் இருந்துள்ளார். மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

சொ.கருப்பசாமி - கால்நடை

வயது 56. சங்கரன்கோவில் தொகுதி எம்எல்ஏ. சொந்த ஊர் புளியம்பட்டி. பியுசி படித்துள்ளார். 3 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றுள்ளார். கட்சியில் தற்போது மாநில அமைப்பு செயலாளர். ஆட்சி மன்றக்குழு உறுப்பினராகவும், நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளராகவும் இருக்கிறார். மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

பழனியப்பன் - உயர் கல்வி

வயது 43. பாப்பிரெட்டிப்பட்டி எம்எல்ஏ. தர்மபுரி மாவட்டம் மொளையானூர் கிராமத்தை சேர்ந்தவர். கல்வித் தகுதி எம்.எஸ்சி., இப்போது மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். ஏற்கனவே, மொரப்பூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சி.வி.சண்முகம் - பள்ளி கல்வி

வயது 46. விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ. பி.ஏ.பி.எல் படித்துள்ளார். மனைவி கவுரி, மகன் ஜெயசிம்மன், மகள் வள்ளி. விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளர். 2001 முதல் 2006 வரை கல்வி, வணிகவரி, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்துள்ளார்.

செல்லூர் ராஐ§ - கூட்டுறவு

வயது 58. மதுரை மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. சொந்த ஊர் மதுரை. பி.எஸ்சி. படித்துள்ளார். முழுநேர அரசியல்வாதியாக பணியாற்றுகிறார். மனைவி ஜெயந்தி, மகள்கள் சவுமியா, ரம்யா. மகன் தமிழ்மணி. கட்சிப் பொறுப்பு: மதுரை மாநகர் மாவட்ட செயலர்.

கே.டி.பச்சைமால் - வனம்

வயது 52. கன்னியாகுமரி தொகுதி எம்எல்ஏ. தம்மத்துகோணத்தை சேர்ந்தவர். தொழிற்கல்வி படித்தவர். ஆசிரியராக பணியாற்றி உள்ளார். தற்போது குமரி மாவட்ட செயலாளராக உள்ளார். ஏற்கனவே குளச்சல் தொகுதியில் வெற்றி பெற்றவர். மனைவி, 2 மகன்கள் உள்ளனர்.

கே.பழனிசாமி - நெடுஞ்சாலை

வயது 57. இடைப்பாடி தொகுதி எம்எல்ஏ. சேலம் இடைப்பாடி அருகே சிலுவம்பாளையத்தை சேர்ந்தவர். கல்வித் தகுதி  பி.எஸ்சி., ஏற்கனவே 2 முறை எம்எல்ஏவாகவும் ஒரு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். கட்சியில் இப்போது சேலம் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

சண்முகநாதன்-அறநிலையத்துறை

வயது 57. ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ. சொந்த ஊர் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பண்டாரவிளை. 2001-ல் இதே தொகுதியில் வெற்றி பெற்று ஜவுளி மற்றும் கைத்தறி துறை அமைச்சராக பதவி வகித்தவர். கட்சியில் தற்போது மாவட்ட செயலாளராக உள்ளார். மனைவி, 5 மகள்கள்,
ஒரு மகன் உள்ளனர்.

ராமலிங்கம் - பொதுப்பணி

வயது 56. ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. படிப்பு பி.ஏ. சொந்த ஊர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கள்ளிவலசு.  மனைவி அம்மணி, மகள்கள் மீனா பிரீத்தி, ஆர்த்தி பிரியதர்ஷினி, மகன் ரத்தன் பிருத்வி.  ராஜ்ய சபா எம்.பி.யாகவும் அதிமுக ஈரோடு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

வேலுமணி - திட்ட அமலாக்கம்

வயது 43. கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. படிப்பு எம்.ஏ, எம்.பில்., சொந்த ஊர், கோவை குனியமுத்தூர். எம்.ஏ, எம்.பில் படித்தவர். மனைவி வித்யாதேவி. மகன் விஷால், மகள் வந்தனா. கோவை புறநகர் மாவட்ட அதிமுக செயலர். முதல்முறையாக அமைச்சராகிறார்.

சின்னையா - பிற்படுத்தப்பட்டோர் நலம்

வயது 49. காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் தொகுதி எம்எல்ஏ. பிறந்து, வளர்ந்தது தாம்பரம். பி.ஏ. படித்துள்ளார். அதிமுக நகர செயலாளராக உள்ளார். தாம்பரம் நகராட்சி கவுன்சிலராக இருந்தவர் தேர்தலுக்காக பதவியை ராஜினாமா செய்தார். மனைவி, மகன் உள்ளனர்.

எம்.சி.சம்பத் - ஊரக தொழில்

கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. படிப்பு எம்.எஸ்சி. சொந்த ஊர் பண்ருட்டி அருகே உள்ள மேல்குமாரமங்கலம்
கிராமம். தொழில் விவசாயம். மனைவி தமிழ்வாணி, குழந்தைகள் பிரவீன், திவ்யா. கடலூர் மாவட்ட அதிமுக செயலாளர்.

தங்கமணி - வருவாய்துறை

வயது 48. குமாரபாளையம் தொகுதி எம்எல்ஏ. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்
பாளையத்தில் வசிக்கிறார். கல்வித் தகுதி பி.ஏ., இப்போது மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். ஒரு முறை எம்எல்ஏவாகவும், ஒன்றியக்குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

ஜி.செந்தமிழன் - செய்தித்துறை

வயது 47. சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏ. சென்னையை சேர்ந்தவர். கல்வித் தகுதி எம்.ஏ.,எம்.எல்., கட்சியின் மாணவர் அணி பதவிகளை வகித்த இவர், தற்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராக உள்ளார். கடந்த தேர்தலில் இதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

கோகுல இந்திரா - வணிக வரி

வயது 45. அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ. சொந்த ஊர் ராமநாதபுரம். கல்வித் தகுதி பி.ஏ.பி.எல்., மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தவர். தற்போது அதிமுக மாநில அமைப்புச் செயலாளர். கணவர், 2 மகள்கள் உள்ளனர்.

செல்வி ராமஜெயம் - சமூக நலம்

வயது 45. கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். சொந்த ஊர் கடலூர் பரங்கிப்பேட்டையில் உள்ள அகரம். கணவர் இறந்துவிட்டார். ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். கடலூர் மாவட்ட அதிமுக மகளிர் அணி செயலாளர்.

பி.வி.ரமணா - கைத்தறி

வயது 44. திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.
திருவள்ளூரில் வசிக்கிறார். டி.பார்ம் படித்துள்ளார். தொழில் செய்கிறார். மனைவி, மகள் உள்ளனர். இவர் முதல் முறையாக அமைச்சராக பதவி ஏற்கிறார்.

உதயகுமார் - தகவல் தொழில்நுட்பம்

வயது 37. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. கல்வித்தகுதி: பி.காம்., பி.எல். மதுரையில் வசிக்கிறார். மனைவி தாமரைச் செல்வி, குழந்தைகள் பிரியதர்ஷினி (5), தனலட்சுமி (3). கட்சிப் பொறுப்பு: மாநில மாணவரணி செயலர். முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி.

சுப்பிரமணியன் - ஆதிதிராவிடர் நலம்

வயது 57. கந்தர்வக்கோட்டை தொகுதி எம்எல்ஏ. சொந்த ஊர் விராலிமலை ஒன்றியம் நம்மம்பட்டி. இஇஇ பட்டயப்படிப்பு முடித்துள்ளார். கடந்த தேர்தலில் குளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றார். மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

செந்தில்பாலாஜி - போக்குவரத்து

வயது 36. கரூர் தொகுதி எம்எல்ஏ. சொந்த ஊர் மண்மங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராமேஸ்வரப்பட்டி. பி.காம். பட்டதாரி. ஒரு முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். கட்சியில் தற்போது மாவட்டச் செயலாளராக உள்ளார். மனைவியும் 5 வயதில் மகளும் உள்ளனர்.

மரியம்பிச்சை - சுற்றுச்சூழல்

திருச்சி மேற்கு தொகுதி எம்எல்ஏ. சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்தவர். பி.ஏ. பட்டதாரி. முதல் முறையாக சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மாநகராட்சி கவுன்சிலராக இருந்த இவர், பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டார். மனைவியும் 3 மகன்களும் உள்ளனர்.

கே.ஏ.ஜெயபால் - மீன்வளம்

வயது 60. நாகை தொகுதி எம்எல்ஏ. சொந்த ஊர் அக்கரைபேட்டை. பி.காம். பட்டதாரி. ஊராட்சி மன்ற தலைவராக இருந்துள்ளார். கட்சியில் தற்போது நாகை மாவட்ட பொருளாளராக உள்ளார். இவரது மனைவி, மாவட்ட கவுன்சிலர். 3 மகன்கள் உள்ளனர்

இசக்கி சுப்பையா - சட்டம்

வயது 47. அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ. சொந்த ஊர் சேரன்மகாதேவி அருகே உள்ள பிராஞ்சேரி. கல்வித்தகுதி எம்ஏ, எம்எல். நெல்லை மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளராக உள்ளார். மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

புத்திசந்திரன் - சுற்றுலா

வயது 49. நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதி எம்.எல்.ஏ. படிப்பு பி.எஸ்சி, பி.எட். சொந்த ஊர் நீலகிரி மாவட்டம், மணிக்கல் கிராமம். மனைவி பத்மாவதி, மகள்கள் முகிலா, அனுசுயா. ஒன்றிய அதிமுக செயலர். முதல்முறையாக ஊட்டி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

செல்லபாண்டியன் - தொழிலாளர் நலம்

வயது 54. தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ. படிப்பு: எம்.ஏ. பட்டதாரி. தொழில்: வியாபாரம், விவசாயம்.கட்சியில்
தற்போது மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளராக உள்ளார். மனைவி, 2 மகன்கள், ஒரு மகள்
உள்ளனர்.

வி.எஸ்.விஐய் - சுகாதாரம்

வயது 53. வேலூர் தொகுதி எம்எல்ஏ. கல்வித்தகுதி எம்பிபிஎஸ், எம்.எஸ். தனியாக மருத்துவமனை நடத்தி வருகிறார். கட்சியில் தற்போது மாவட்ட மருத்துவ அணி செயலாளராக உள்ளார். மனைவி, ஒரு மகள், மகன் உள்ளனர்.

என்.ஆர்.சிவபதி - விளையாட்டு

வயது 48. முசிறி தொகுதி எம்எல்ஏ. தொட்டியம் அடுத்த நத்தம் கிராமத்தை சேர்ந்தவர். கல்வித் தகுதி எம்.ஏ.பி.எல். 1991-ல் தொட்டியம் தொகுதியில் இருந்து எம்எல்ஏவாக தேர்வு பெற்றவர். கட்சியிலும் பல பதவிகளை வகித்துள்ளார். மனைவி, 2 மகள்களும் உள்ளனர்.

No comments:

print