சென்னை: தமிழகத்தின் முதல்வராக அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., 3 வது முறை முதல்வராக இன்று பதவியேற்றார். சென்னை பல்கலை., நூற்றாண்டு அரங்கில் நடந்த பதவியேற்பு விழாவில் , தே.மு.தி.க., தலைவரும், எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த், குஜராத் முதல்வர் நநேரந்திரமோடி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு( தெலுங்குதேசம்) , இடதுசாரி தலைவர்கள் ஏ.பி., பரதன், ராஜா, உள்பட பலர் திரளாக பங்கேற்றனர். தமிழ்த்தாய் வாழ்த்து நாட்டுப்பன்னுடன், 12. 45 க்கு பதவியேற்பு விழாவி துவங்கியது. கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா ஜெ., முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
நடந்து முடிந்த தேர்தலில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள அ.தி.மு.க.,வின் சட்டசபை தலைவராக நேற்று ஜெ., தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இன்று 34 அமைச்சர்கள் கொண்ட தமது அமைச்சரவையுடன் பிற்பகல் 12. 24 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்றார். கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.விழாவில் சிபிஎம் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ செயலாளர் தா.பாண்டியன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மற்றும் மனித நேய மக்கள் கட்சி, பார்வர்ட் பிளாக், புதிய தமிழகம், மூவேந்தர் முன்னேற்ற முன்னணி உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் , பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் சோ, ஐகோர்ட் நீதிபதிகள் , போலீஸ் உயர் அதிகாரிகள், உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.
ஜெயலலிதா அளித்த நேற்றைய பேட்டி: நேற்று கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்த பின்னர் ஜெயலலிதா நிருபர்களின் கேள்விக்கு பதில் அளத்ததாவது:ராஜ்பவனுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள், எப்படி உணர்கிறீர்கள்?
ராஜ்பவனுக்கு பல முறை வந்திருக்கிறேன்; இது எனக்கு புதியது அல்ல. அதனால் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.
தமிழக மக்கள் இப்போது பாதுகாப்பாக இருக்கிறார்களா?
இனிவரும் காலங்களில் மக்கள் எந்த அச்சமும் படத்தேவையில்லை; அவர்கள்; நிம்மதியாக, பாதுகாப்பாக வாழலாம்.
தேர்தலில் வெற்றி பெற்ற உங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா, தேநீர் விருந்து கொடுக்கிறாரா?
தேர்தலில் வெற்றி பெற்றபின் தொலைபேசியில் எனக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தார்.
டில்லிக்கு செல்கிறீர்களா?
பதவி ஏற்புக்கு பின் அதைப் பற்றி பார்க்கலாம்.
எந்தப் பணிக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
இதைப்பற்றி ஏற்கனவே நான் விரிவாக சொல்லி விட்டேன். மூன்று நாட்களாக பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். இப்போது எனக்கு முக்கிய பணி இருப்பதால் அவசரமாக செல்ல வேண்டும்.
உங்களது உடனடி முக்கியத்துவம் கொடுக்கும் பணி எது?தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. அதை சரிசெய்ய வேண்டும். பொருளாதாரம் தடம் புரண்டு இருக்கிறது; அதை, சரியான பாதைக்கு கொண்டு வரவேண்டும். கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழகம் இருண்ட காலத்திற்கு சென்றது போன்ற நிலை இருக்கிறது. தமிழகத்தை, வளம் மிக்க, வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று, முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்துவோம். மிக மோசமான தொடர் மின்வெட்டை சரி செய்வது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, போன்ற நடவடிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக எடுக்கப்படும்.
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதே?இது மிகவும் துரதிர்ஷ்டவசமான நடவடிக்கை; இது, மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுக்கும்.
பதவி ஏற்பு விழாவிற்கு விஜயகாந்தை அழைப்பீர்களா?
நிச்சயமாக; அவர் எங்கள் கூட்டணிக் கட்சியை சேர்ந்தவர். அவர்களும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
தலைமைச் செயலர் மாலதி நிருபர்களிடம் கூறும்போது, "தமிழக முதல்வராக ஜெயலலிதாவும், அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்' என்றார்.
33 மந்திரிகள்: நிதியமைச்சர் பன்னீர்செல்வம் : முதல்வராக ஜெயலலிதாவும், இதர 33 அமைச்சர்களும் இன்று பதவியேற்கின்றனர். ஓ.பன்னீர்செல்வம் நிதியமைச்சர் ஆகிறார். பள்ளிக் கல்வி அமைச்சராக சி.வி.சண்முகம், செய்தித் துறை அமைச்சராக செந்தமிழன் உட்பட 33 பேர், புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
முதல்வர் ஜெயலலிதா தலைமையில் புதிய அமைச்சரவையில், 33 பேர் பதவி ஏற்றனர். அதன் விவரம்:
பெயர் வெற்றி பெற்ற தொகுதி துறை
1. ஜெ.ஜெயலலிதா ஸ்ரீரங்கம் பொது நிர்வாகம், உள்துறை
2. ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் நிதி மற்றும் திட்டத்துறை
3. கே.ஏ.செங்கோட்டையன் கோபி விவசாயம்
4. நத்தம் விசுவநாதன் நத்தம் மின் துறை
5. கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரி உள்ளாட்சித் துறை
6. சண்முகவேலு மடத்துக்குளம் தொழில் துறை
7. ஆர்.வைத்திலிங்கம் ஒரத்தநாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
8. அக்ரி கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம் உணவுத்துறை
9. சி.கருப்பசாமி சங்கரன்கோவில் கால்நடை மற்றும் பால்வளம்
10. பி.பழனியப்பன் பாப்பிரெட்டிப்பட்டி உயர்கல்வித் துறை
11. சி.வி.சண்முகம் விழுப்புரம் பள்ளி கல்வித்துறை
12. செல்லூர் கே.ராஜு மதுரை மேற்கு கூட்டுறவுத் துறை
13. கே.டி.பச்சைமால் கன்னியாகுமரி வனத்துறை
14. எடப்பாடி கே.பழனிச்சாமி எடப்பாடி நெடுஞ்சாலைத் துறை
15. எஸ்.பி.சண்முகநாதன் ஸ்ரீவைகுண்டம் இந்து சமய அறநிலையத்துறை
16. கே.வி.ராமலிங்கம் ஈரோடு மேற்கு பொதுப்பணித் துறை
17. எஸ்.பி.வேலுமணி தொண்டாமுத்தூர் சிறப்பு திட்ட அமலாக்கம்
18. டி.கே.எம்.சின்னய்யா தாம்பரம் பிற்படுத்தப்பட்ட நலத்துறை
19. எம்.சி.சம்பத் கடலூர் ஊரக வளர்ச்சித் துறை
20. பி.தங்கமணி குமாரபாளையம் வருவாய் துறை
21. ஜி.செந்தமிழன் சைதாப்பேட்டை செய்தி மற்றும் விளம்பரத்துறை
22. எஸ்.கோகுல இந்திரா அண்ணா நகர் வணிக வரித்துறை
23. செல்வி ராமஜெயம் புவனகிரி சமூகநலத்துறை
24. பி.வி.ரமணா திருவள்ளூர் கைத்தறித்துறை
25. ஆர்.பி.உதயகுமார் சாத்தூர் தகவல் தொழில்நுட்பத் துறை
26. என்.சுப்பிரமணியன் கந்தர்வகோட்டை ஆதிதிராவிடர் நலத்துறை
27. வி.செந்தில் பாலாஜி கரூர் போக்குவரத்துத் துறை
28. என்.மரியம் பிச்சை திருச்சி மேற்கு சுற்றுச்சூழல் துறை
29. கே.ஏ.ஜெயபால் நாகப்பட்டினம் மீன்வளத்துறை
30. இ.சுப்பையா அம்பாசமுத்திரம் சட்டத்துறை
31. புத்திசந்திரன் உதகை சுற்றுலாத்துறை
32. எஸ்.டி.செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொழிலாளர் துறை
33. வி.எஸ்.விஜய் வேலூர் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
34. என்.ஆர்.சிவபதி முசிறி விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை
புதிய அமைச்சரவை பட்டியலில், 24 பேர் புதிய முகங்களாக இடம் பெற்றுள்ளனர். கடந்த 2001-06ம் ஆண்டு வரையில் நடந்த அ.தி.மு.க., ஆட்சியில் இடம் பெற்ற அமைச்சர்கள் சிலர், தற்போதைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்; சிலர் இடம் பெறவில்லை. ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், வளர்மதி, தனபால், விஜயலட்சுமி பழனிச்சாமி, நயினார்நாகேந்திரன், சோமசுந்தரம், கு.ப.கிருஷ்ணன், அன்பழகன் போன்றவர்கள் இடம்பெறவில்லை.
No comments:
Post a Comment