Wednesday, May 11, 2011

முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை : தேர்தல் கமிஷனுக்கு ‌ஜெ., கடிதம்

சென்னை : ஓட்டு எண்ணிக்கையின்போது முறைகேடுகளை தவிர்க்க தேர்தல் கமிஷன் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலிதா தலைமை தேர்தல் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் பார்ம் 20ல் வாக்குகளைப் பதிவு செய்யும்போது அதைக் கண்காணிக்க கட்சி முகவர்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை குளறுபடி : கடந்த 2009 ஆண்டு நடந்த பார்லிமென்ட் தேர்தலின்போது, சிவகங்கை தொகுதியில் ஓட்டுகளின் எண்ணிக்கை, பார்ம் 20ல் பதிவு செய்யும்போது முறைகேடுகள் நடந்துள்ளன.

அ.தி.மு.க., வேட்பாளர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெற்ற வாக்குகள் காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரத்துக்கும், ப. சிதம்பரம் பெற்ற வாக்குகள் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் பெயரிலும் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் மற்றும் முகவர்களால் எழுத்தால் பதிவு செய்யப்பட்ட ஓட்டு எண்ணிக்கை தகவல்கள், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் படிவம் 20ல் மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆளுங்கட்சியான ஆதரவாக டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்களால் ஓட்டு எண்ணிக்கை விவரங்கள் மாற்றப்பட்டுள்ளன. அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, தற்போது சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, தேர்தல் அதிகாரிகள் மற்றும் முகவர்கள் பதிவு செய்யும் வாக்கு எண்ணிக்கையும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் பதிவு செய்யும் ஓட்டு எண்ணிக்கை விவரங்களும் ஒன்றாக உள்ளதா என்பதை சரிபார்க்க தேர்தல் அதிகாரிகளுக்கு ஆணையம் உத்தரவிட வேண்டும். பதிவான ஓட்டுக்களை சரிபார்த்த பின்னரே இறுதி தேர்தல் முடிவை வெளியிட வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா தேர்தல் கமிஷனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

print