Saturday, May 7, 2011

புதிய சாப்ட்வேர் உதவியுடன் ஒவ்வொரு சுற்று முடிவும் இணையதளத்தில் பார்க்கலாம்

திருச்சி: வாக்கு எண்ணிக்கை ஒவ்வொரு சுற்று முடிவையும் இணையதளத்தில் பார்க்கலாம். இதற்காக புதிய சாப்ட்வேர் பயன்படுத்தப்பட உள்ளது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தல் நடந்துள்ள தமிழகம் உட்பட 5 மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் விடியோ கான்பரன்சிங்கில் கலந்துரையாடல் நேற்று நடந்தது. இதுகுறித்து உயர்அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை நாளில் ஒவ்வொரு சுற்று முடிவும் இணையதளத்தில்(மீறீமீநீtவீஷீஸீ.tஸீ.ரீஷீஸ்.வீஸீ) வெளியிடப்படும். இதற்காக ஜெனிசிஸ் என்ற சாப்ட்வேட் பயன்படுத்தப்பட உள்ளது. பொதுதேர்தல் முடிவுகள் சிஸ்டம் என்ற அடிப்படையில் இந்த சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் 10ம் தேதி புதிய சாப்ட்வேர் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப¢படும். அதை கணினியில் ஏற்றிக் கொள்ள வேண்டும். 13ம் தேதி ஒவ்வொரு சுற்று முடிவையும் புதிய சாப்ட்வேரில் டைப் செய்து வெளியிட வேண்டும். ஒரு முறை இந்த சாப்ட்வேரில் டைப் செய்து விட்டால் அதை திருத்த முடியாது. மாற்றம் செய்ய விரும்பினால் தலைமை தேர்தல் அலுவலர் ஒப்புதலுக்கு பிறகே மாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

print