சென்னை : தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நடந்த விழாவில் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். சரியாக பிற்பகல் 12.45 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்றார். அவரை தொடர்ந்து நிதித்துறை அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம், விவசாயத்துறை அமைச்சராக செங்கோட்டையன், மின்துறை மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன், நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக கே.பி.முனுசாமி, தொழில்துறை அமைச்சராக சி.சண்முகவேலு, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக ஆர்.வைத்தியலிங்கம், உணவுத்துறை அமைச்சராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சராக சோ.கருப்பசாமி, உயர்கல்வித்துறை அமைச்சராக பி.பழநியப்பன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக சி.வி.சண்முகம், கூட்டுறவுத் துறை அமைச்சராக செல்லூர் ராஜா, வனத்துறை அமைச்சராக பச்சமால், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறிய துறைமுகங்கள் துறை அமைச்சராக எடப்பாடி கே. பழனிச்சாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக எஸ்.பி.சண்முகநாதன், பொதுப்பணித்துறை அமைச்சாராக கேவி. ராமலிங்கம், சிறப்பு திட்ட அமலாக்க அமைச்சராக வேலு, பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சராக டி.கே.எம்.சின்னையா, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக எம்.சி.சம்பத், வருவாய்த்துறை அமைச்சராக பி.தங்கமணி, செய்தி மற்றும் விளம்பரத்துறை ஜி.செந்தமிழன், வணிகவரித்துறை அமைச்சராக எஸ்.கோகுல இந்திரா, சமூகநலத்துறை அமைச்சராக செல்வி ராமஜெயம், கைத்துறித்துறை அமைச்சராக பி.வி.ரமணா, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக ஆர்.பி.உதயகுமார் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராக என்.சுப்ரமணியம், போக்குவரத்து துறை அமைச்சராக வி.செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக என்.மரியம் பிச்சை, மீன்வளத்துறை அமைச்சராக கே.ஏ.ஜெயபால், சட்டத்துறை அமைச்சராக இ.சுப்பையா, சுற்றுலாத்துறை அமைச்சராக புத்தி சந்திரன், தொழிலாளர் துறை அமைச்சராக எஸ்.டி.செல்லபாண்டியன், சுகாதாரத்துறை அமைச்சராக வி.எஸ்.விஜய், விளையாட்டுத்துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
No comments:
Post a Comment