Saturday, May 14, 2011

வீழ்ந்தது பணநாயகம்;ஜனநாயகத்திற்கு பொன்மகுடம் : வைகோ பெருமிதம்

சென்னை : "தமிழக வாக்காளர்கள் ஊழல் பணநாயகத்தை வீழ்த்தி, ஜனநாயகத்திற்கு பொன்மகுடம் சூட்டி உள்ளனர்' என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஐந்து ஆண்டுகளில் தலைவிரித்து ஆடிய ஆளுங்கட்சியின் ஊழல், சினிமாத் துறை, தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளையும் கபளீகரம் செய்ய முயன்ற ஒரு குடும்ப ஆதிக்கம், கடுமையான மின்வெட்டு, இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலைக்கு மத்திய அரசுக்கு துணைநின்ற துரோகம், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு எதிராக மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

எதிர்காலத்தில், அதிகார துஷ்பிரயோகத்தையும், ஊழல் பணத்தையும் கொண்டு, எவரும் தேர்தலில் வெல்ல முடியாது எனும் சரியான பாடத்தை வாக்காளர்கள் கற்பித்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க., பங்கேற்கவில்லை என்றாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தி.மு.க., அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்த்து, தொடர்ந்து பிரசாரத்திலும், அறப்போரிலும் ஈடுபட்டது.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

No comments:

print