சேலம்: தேர்தல் முடிவு வெளியாகட்டும். அதன் பின்னர் அதிமுக உடைந்து போய் விடுவதை தமிழக மக்கள் காண்பார்கள் என்று ஜனதாக் கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.
சேலம் வந்த சாமி அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதாவால் ஒரு வேட்பாளர் பட்டியலைக் கூட சுயமாக தயாரிக்க முடியாத நிலை. அதையும் கூட சசிகலாவைக் கேட்டுத்தான் அவர் செய்தார். சசிகலாவிடமே பட்டியல் தயாரி்ப்புப் பணியையும் கொடுத்தார். இப்படிப்பட்டவரால் அரசியலுக்கு எந்த லாபமும் இல்லை. அவர் விலக வேண்டும். அப்போதுதான் அரசியல் உருப்படும். அதிமுக உருப்படும்.
சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுக உடைந்து போய் விடும். கூட்டணி குலைந்து போய் விடும். விஜயகாந்த் முதல் ஆளாக வெளியேறி விடுவார்.
என்னைப் பொறுத்தவரை மீண்டும் திமுக கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும், ஆட்சி அமைக்கும் என்றார் சாமி.
சாமி வாய் வைத்தால் விளங்காது என்பார்கள், இப்போது அதிமுக உடைந்து போய் விடும் என்று கூறியுள்ளார். என்னாகப் போகிறதோ..

No comments:
Post a Comment