Wednesday, May 11, 2011

ஓட்டு எண்ணிக்கை : தேர்தல் கமிஷன் கெடுபிடி

சென்னை : தமிழகத்தில் மொத்தம் 91 மையங்களில் ஓட்டு எண்ணப்படுகிறது. ஓட்டு எண்ணிக்கை குறித்து சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த தமிழக தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார் : ஓட்டு எண்ணிக்கை மையங்களில் வீடியோ காமிரா பொறுத்தப்பட்டு ஓட்டு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பிடிக்கப்படும் என்றார். இந்த புதிய முறையின் காரணமாக ஓட்டு எண்ணிக்கை பணி சற்று தாமதமாகும் என்றார். ஓட்டு எண்ணும் பணியில் 16,966 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஓட்டு எண்ணும் மையத்தில் பணி ஒதுக்கப்பட்டுள்ள அனைத்து ஊழியர்களும் அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றார் . ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளன்று முதலில் தபால் ஓட்டுக்கள் எண்‌ணப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தலுக்கு முன் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட 5935 வழக்குகளில 1378 வழக்குகளில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

No comments:

print