Sunday, May 8, 2011

கனிமொழிக்காக திகார், ரோஹினி சிறைகளை தயார் செய்த அதிகாரிகள்!!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கைதாவார் என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டதால், திகார் மற்றும் ரோஹினி சிறைச்சாலைகளை கனிமொழிக்காக தயார் செய்தனர் சிறை அதிகாரிகள்.

இன்றைய விசாரணை முடிந்ததும் கனிமொழி எந்நேரமும் கைதாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இதையடுத்து டெல்லியில் உள்ள திகார் மற்றும் ரோஹின் சிறைச்சாலைகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

கனிமொழி கைது செய்யப்பட்டால் அவரை முதலில் திகாருக்கு கொண்டு செல்வதென்றும், பின்னர் அங்கிருந்து டெல்லி ரோஹினி சிறைச்சாலையின் மகளிர் பிரிவுக்கு மாற்றுவதென்றும் முடிவு செய்யப்பட்டதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனிமொழி கைது செய்யப்பட்டால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமேதும் இல்லை என்றும், அவரிடம் போதுமான அளவு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதால், நேரடியாக அவர் நீதிமன்றக் காவலில்தான் வைக்கப்படுவார் என்றும் சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

ஆனால் அந்த வேலையை வைக்கவில்லை சிபிஐ சிறப்பு நீதிமன்றம். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மே 14ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.

No comments:

print