Friday, May 13, 2011

கொளத்தூரில் எந்திரங்கள் பழுது-சர்ச்சை-அதிமுக போராட்டம்

சென்னை: மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் சர்ச்சை வெடித்துள்ளது. கடைசிச் சுற்றின்போது 3 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்ததால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு அதிமுகவினர் கோரிக்கை விடுத்துள்ளதால் அங்கு குழப்ப நிலை நீடிக்கிறது.

சென்னை நகர தொகுதிகளில் கிட்டத்தட்ட அனைத்தையும் வென்று விட்டது அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள். கொளத்தூர் தொகுதி நிலவரம் மட்டுமே இன்னும் வெளிவராமல் உள்ளது.

இங்கு கடைசிச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்துப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை விட அவர் 2000 வாக்குகள் அதிகம் பெற்றிருப்பதாக கூறப்பட்டது.


இங்கு ஆரம்பத்திலிருந்தே மிகக் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியிலும், பின்னணியிலுமாக இருந்து வந்தார் ஸ்டாலின்.

இந்த நிலையில் கடைசிச் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது 3 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று அதிமுகவினர் கோரி கோஷமிட்டனர். இதனால் அங்கு சர்ச்சை நீடிக்கிறது.அங்கு தேர்தல் அதிகாரிகள் விரைந்துள்ளனர். இந்தக் குழப்பம் தொடர்பாக வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் பெருமளவில் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

print