Saturday, May 14, 2011

கனிமொழி கோர்ட்டில் இன்றுஆஜர்: ஜாமின் கிடைக்குமா?

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட்டில் ஆஜராகும் கனிமொழிக்குஜாமின் கிடைக்குமா என்பது இன்று தெரியும்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுதொடர்பாக விசாரித்து வரும் சி.பி.ஐ., கலைஞர் "டிவி'க்கும், டி.பி.ரியாலிட்டி நிறுவனத்திற்கும்இடையே நடந்த பணப் பரிமாற்றம் குறித்து விசாரணை நடத்தியது. இது தொடர்பாக சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கனிமொழி, கலைஞர் "டிவி' இயக்குனர் சரத்குமார் சேர்க்கப்பட்டனர். இவர்களை சிறப்பு கோர்ட்டில் ஆஜராகும்படிஉத்தரவிடப்பட்டது. இதையடுத்து, இருவரும்கடந்த 7ம் தேதி சிறப்பு கோர்ட்டில் ஆஜராகினர்.கனிமொழியின் வக்கீல் ராம்ஜெத்மலானி, சரத்குமார் ரெட்டியின் வக்கீல் அல்தாப்பும் வாதிட்டனர்.கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பாண்ட் பத்திரத்தின் அடிப்படையில் ஜாமின்வேண்டுமென கோரப்பட்டது.இதில் சி.பி.ஐ., தரப்பில் ஆஜரான வக்கீல் லலித்,"சட்டத்தின்படி பார்த்தால் பாண்ட் பத்திரம் என்பது செல்லுபடி ஆகாது. ஜாமின் என்பதற்குபாண்ட் பத்திரம் நிகரான ஒன்று அல்ல. ஜாமினின்இடத்தை, பாண்ட் பத்திரம் சட்டப்படி நிரப்பிவிடாது. கனிமொழி, ஒன்று ரிமாண்ட் செய்வதற்குஒப்புக் கொள்ள வேண்டும். இல்லையெனில், நீதிபதியை தனது உண்மையான வாதங்கள் வாயிலாக திருப்தி ஏற்படுத்திவிட்டு பிறகு ஜாமின் கேட்டுக் கொள்ள வேண்டும். இவற்றை தவிர, வேறுஎந்த வழியிலும் ஜாமின் கேட்க வழியில்லை.ஊழல் குற்றச்சாட்டு வழக்கிற்கெல்லாம் அதுபொருந்தாது. தவிர, பெண் என்பதாலேயேஜாமின் வழங்கவும் கூடாது. பெண் என்ற சலுகைஎல்லா வழக்குகளிலும் தந்துவிட முடியாது'என்றார். பின்னர் இறுதியாக நீதிபதி ஓ.பி.சைனி,வரும் 14ம் தேதி (இன்று) தீர்ப்பை அளிக்கிறேன்என கூறி ஒத்தி வைத்தார்.இந்நிலையில், இன்று கனிமொழி சிறப்பு கோர்ட்டில் ஆஜராகிறார். அவருக்கு இன்று ஜாமின்கிடைக்குமா என்பது தெரியும். மேலும் கடந்தவாரம் டில்லியில், கனிமொழி ஆஜராக வந்தபோது, தி.மு.க.,வின் முன்னணி தலைவர்கள் டில்லியில் முகாமிட்டிருந்தனர். தற்போது தோல்வியைசந்தித்துள்ள நிலையில், இந்த வழக்கை தி.மு.க.,எப்படி சந்திக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

print