Thursday, March 31, 2011

மு.க.அழகிரிக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பு

மதுரையில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரிக்கு வீட்டுக்கு அளிக்கப்பட்டிருந்த  போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவுக்கு பிறகு  பணியில் இருந்த போலீசார் திரும்ப அழைக்கப்பட்டனர்.

 போலீசாருக்கு பதிலாக மத்திய துணை ராணுவப்படை பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.

ஒ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரிப்பு

போடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஒ.பன்னீர்செல்வம் போடி ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தீர்த்த தொட்டி, தோப்புபட்டி, துரைராஜபுரம் காலனி, மீ.விலக்கு, அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், விசுவாசபுரம், டொம்புச்சேரி, உப்புக்கோட்டை, கூழையனூர் உள்ளிட்ட இடங்களில் ஒ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

பல இடங்களில் பெண்கள் ஆரத்தி அவரை வரவேற்றனர். அவருடன் தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் சென்றனர்.

என் உயிருக்கு ஆபத்து நிகழ்ந்தால்..... மு.க.அழகிரி

மத்திய மந்திரி மு.க.அழகிரி வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ் 

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மு.க.அழகிரியின் இல்லம், மதுரை சத்யசாய் நகரில் உள்ளது. அவர் மத்திய மந்திரி என்பதால், அவரது வீட்டிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில், மு.க.அழகிரியின் வீட்டிற்கு கொடுக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென்று வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் எனது எனது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து நிகழ்ந்தால் தேர்தல் கமிஷன் தான் பொறுப்பு என்று மு.க.அழகிரி கூறியுள்ளார்.

பூத் சிலிப் வழங்க தாமதம்: ஆசிரியர்கள் சாலை மறியல்

திருச்சி: வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவதற்காக அழைக்கப்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் கமிஷன் காக்க வைத்ததால் அதிருப்தியடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு இந்த தேர்தலில் தேர்தல் கமிஷனே பூத் சிலிப் வழங்குகிறது. ஆசிரியர்கள் மூலம் இப்பணியை நடத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதன்படி, திருச்சியில் பூத் சிலிப் பெறுவதற்காக, ஆசிரியர்கள் திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். மாலை 3.30 மணிக்கு வந்த அவர்கள் 5 மணியாகியும் எவ்வித பதிலும் இல்லாததால், அதிருப்தியடைந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் வந்துவிட்டால் திருமங்கலம் கலாச்சாரமும் வந்து விடுகிறது: பிரேமலதா

மதுரை: பாரதப் போரில் அர்ச்சுணன் வெற்றி பெற்றது போல் தேமுதிக, அதிமுக வேட்பாளர்கள் வெல்வார்கள் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்தின் மனைவி பிரேமலதா கூறினார்.


மதுரையில் அதிமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகையில்,
இந்த மதுரை மக்கள் வீரம் நிறைந்தவர்கள். இந்த மண்ணின் மருமகள் என்பதால் உங்களிடம் முரசு சின்னத்துக்கு வாக்கு கேட்டு வந்துள்ளேன்.

தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும். அப்போதுதான் அட்டகாசத்திற்கு ஒரு முடிவு கட்ட முடியும். தேர்தல் வந்துவிட்டால் திருமங்கலம் கலாச்சாரம் வந்து விடுகிறது. கட்டப் பஞ்சாயத்தும் அதிகரித்துள்ளது.

இங்கு மக்கள் மவுனமாக இருக்கிறார்கள். இந்த மவுன புரட்சி நமக்கு வெற்றி புரட்சியாக மாறும். மதுரை ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் மாட்டு தலையை வீசியதாக 5 இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மாட்டுத் தலையை வீசியது அவர்கள் இல்லை என்றால் 5 பேரையும் விடுதலை செய்ய பாடுபடுவோம்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை மானசீக குருவாக ஏற்று கேப்டன் செயல்பட்டு வருகிறார். இப்போது புரட்சி தலைவி ஜெயலலிதா உடன் புரட்சி கலைஞர் கேப்டன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த இரு புரட்சி கூட்டணி மக்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்க கூடிய கூட்டணியாகும்.

எங்கள் கேப்டன் சினிமாவில் மட்டும் தான் நடிப்பார். ஆனால் மக்களிடம் நடிப்பவர் கருணாநிதி. திமுக எந்தத் திட்டம் அறிவித்தாலும் அதன் பலன் கலைஞருக்கு தான் போகும் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சொல்வார். இப்போதும் இலவச டி.வி. கொடுத்து கேபிள் இணைப்பு மூலம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.3,000 கோடி அளவுக்கு மக்கள் பணம் அவரது குடும்பத்துக்கு சென்றுள்ளது.

பாரதப் போரில் அர்ச்சுணன் வெற்றி பெற்றது போல் தேமுதிக, அதிமுக வேட்பாளர்கள் வெல்வார்கள் என்றார்.

5 வாகனங்களில் அணிவகுப்பு-பிரேமலதா மீது வழக்கு:

முன்னதாக அறந்தாங்கி அருகே பிரசாரத்தின் போது 5 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வாங்கிவிட்டு 15 வாகனங்கள் பயன்படுத்திய பிரேமலதா மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

விஜயகாந்துடன் போகும் வேட்பாளர்கள் ஹெல்மெட் போட்டுக்கங்க: ஸ்டாலின் வேண்டுகோள்

ஆழ்வார்குறிச்சி: 'நடிகர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் தயவு செய்து ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள்' என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


கடையம் ஒன்றிய பகுதிகளில் ஆலங்குளம் சட்டசபை தொகுதி வேட்பாளர் பூங்கோதைக்கு ஆதரவாக துணை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது,

தேர்தல் நேரத்தில் மட்டும் நாங்கள் உங்களை தேடி வரவில்லை. தேர்தலுக்கு தேர்தல் உங்களை தேடி வருபவர்கள் பலர் உள்ளனர். தமிழ்நாட்டை பற்றி கவலைப்படுபவர் கருணாநிதி. கொடநாட்டை பற்றி கவலைப்படுபவர் ஜெயலலிதா.

தேர்தல் அறிக்கையை கருணாநிதி ஒன்றரை மணிநேரம் படித்து வெளியிட்டதை தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். தேர்தல் அறிக்கையில் உங்களுக்கு கொடுத்த உறுதிமொழி, வாக்குறுதி உண்மையானவை. மக்களை பற்றியே சிந்திப்பவர் கருணாநிதி. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் தேர்தல் அறிக்கை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு கதாநாயகன் என அவர் கூறினார்.

தற்போது தேர்தல் அறிக்கை வெளியிட்டவுடன் கதாநாயகி என கூறினார். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது முன்னாள் கதாநாயகியும், முன்னாள் கதாநாயகரும் உலா வருகின்றனர்.

பதவிக்காக அலைபவர் கருணாநிதி அல்ல. அவர் பார்க்காத பதவி இல்லை. இந்த தள்ளாத நிலையிலும், உடல் நலக் குறைவிலும் தொடர்ந்து மக்களை சந்திப்பது ஏன்? தமிழ்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல திட்டங்களைத் தீட்டி அதனை செயல்படுத்துபவர். உங்களிடம் ஆதரவு கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது.

சொன்னதை செய்ததால் உரிமையுடன் ஆதரவு கேட்கின்றோம். 5 ஆண்டு ஆட்சி காலத்தில் செய்த சாதனையை உங்களிடம் கூறுகிறோம். ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, சத்துணவில் 3 முட்டையில் இருந்து 5 முட்டை, கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் நிதியுதவி இதேபோல பல நல்ல திட்டங்களை செய்த நாங்கள் இந்த முறை மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க உள்ளோம்.

முன்பு பெண்கள் சுயஉதவிக் குழுக்களுக்கு இரண்டரை லட்சம் வழங்கிய நாங்கள் இப்போது அதனை 4 லட்சமாக உயர்த்த உள்ளோம். அதிலும் 2 லட்சம் அரசு மானியமாகப் போகிறது. 2 லட்சத்தை கட்டினால் போதும். இதுபோன்று செய்த சாதனைகளை சொல்லி உங்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளோம். பூங்கோதைக்கு ஓட்டளித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

நடிகர் கட்சி வேட்பாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.உங்கள் தலைவருடன் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்லுங்கள். நீங்கள் கூட "டிவி'யில் பார்த்திருப்பீர்கள். கட்சித் தலைவர் கையில் அடி உதை படும் வேட்பாளர்களை. இதையெல்லாம் நாம் பார்க்க வேண்டுமா? என்றார்.

ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், திருமலையப்பபுரம், முதலியார்பட்டி, கடையம், மாதாபுரம் செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் அந்தந்த பகுதி திமுக கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

விஜயகாந்த்தை அதிமுக கூட்டணி கட்சியினரே நம்பவில்லை-திருமா

அரூர்: ஆயிரக்கணக்கானோர் மத்தியில் வேட்பாளரை அடித்து உதைக்கும் விஜயகாந்த் வெற்றி பெற்றார் நாடு என்ன ஆகும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவவன் கேள்வி எழுப்பினார்.


தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை ஆதரித்து திருமாவளவன் பிரச்சாரம் செய்து பேசுகையில்,

திமுக அறிவித்துள்ள திட்டங்கள் மூலம் சமூகத்தில் பின்தங்கிய, ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் அதிக வாக்கு வங்கி கொண்ட கட்சிகளான திமுக, காங்கிரஸ், பாமக ஓரணியில் உள்ளதால் திமுக கூட்டணி வெற்றி பெறும்.

எந்தக் கட்சி தலைவராவது சொந்த கட்சி வேட்பளாரை பொது இடத்தில் தாக்குவார்களா?. வேட்பாளர் என்ன சொன்னார், பெயரை தப்பா சொல்லாதையா என்று சொன்னார். பெயரை பாண்டியன் பாண்டியன் என்று சொல்லாதையா. பாஸ்கர் என்று சொல்லுயா என்று வேட்பாளர் சொல்லுகிறார்.

என்னையே எதிர்த்து பேசுகிறாயா, உங்க அப்பா உனக்கு பாஸ்கர் என பெயர் வைத்திருக்கலாம். நான் பாண்டியன் என்றுதான் கூப்பிடுவேன் என்று சொல்லி விஜய்காந்த் தாக்கியுள்ளார்.

இவரைப் போன்றவர் எல்லாம் வென்றால், ஆட்சிக்கு வந்தால் நாடு என்ன ஆகும் என்றார்.

பின்னர் மேட்டூரில் நிருபர்களிடம் பேசிய திருமா, கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியின் சாதனைகள் பொதுமக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பாமகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் சேர்ந்திருப்பது திமுக கூட்டணிக்கு வலுசேர்த்துள்ளது.

நடிகர் விஜயகாந்த்தின் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அவரது மதிப்பை குறைத்து வருகிறது. அதிமுக கூட்டணியில் உள்ளவர்களே விஜயகாந்த்தை நம்புவதில்லை என்றார்.

தேர்தல் ஆணையத்திற்கு ஜெயலலிதா வக்கீலை நியமித்தது ஏன்-நோட்டீஸ்

சென்னை: தேர்தல் ஆணையத்தின் வக்கீலாக, ஜெயலலிதாவுக்காக ஆஜராகும் வக்கீலை நியமித்தது தொடர்பாக விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பட்டி ஜெகன்னாதன் என்ற வக்கீல் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில்,

தமிழகத்தில் மக்களிடம் சோதனை நடத்தி எமர்ஜென்சி காலகட்டம் போல் தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. தேர்தல் கமிஷனின் எதேச்சதிகார போக்கால் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன.

ஆதாரமற்ற தகவல்களை வைத்துக்கொண்டு வீடுகளில் புகுந்து சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் அத்துமீறுகின்றனர். அவர்களின் நடவடிக்கை அனைத்தும் ஆளும் கட்சியான தி.மு.க.வுக்கு எதிரானதாகத் தெரிகிறது.

மேலும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் சில வழக்குகளில் ஆஜராகும் வக்கீல் ஜி.ராஜகோபாலன், தேர்தல் கமிஷனின் வக்கீலாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரை தேர்தல் கமிஷன் வக்கீலாக அனுமதித்திருக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இக்பால் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜகோபாலன் ஆஜராகி வாதிடுகையில்,

என்மீது தனிப்பட்ட முறையில் சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு நான் விளக்கம் அளிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் நடவடிக்கைகளில் வருமானவரித்துறை ஈடுபடுகிறது. ஆனால் இந்த துறைக்கு மனுதாரர் வக்கீலாக இருக்கிறார். எனவே இப்படிப்பட்ட மனுவை அவர் தாக்கல் செய்திருக்கக்கூடாது என்று வாதிட்டார்.

இதையடுத்து இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 5ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தனர்.

234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடிப்பு : வெளியானது வேட்பாளர் இறுதி பட்டியல்

சென்னை:தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இன்னும் 12 நாட்கள்மட்டுமே உள்ளன. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதுநேற்றுடன் முடிவடைந்து,வேட்பாளர் பட்டியல் இறுதிசெய்யப்பட்டு, அவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டுவிட்டதால், 234 தொகுதிகளிலும் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனு தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கி, 26ம் தேதி முடிந்தது. இதில், 4,280 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. மனுக்கள் கடந்த திங்கள்கிழமை (28ம் தேதி) பரிசீலிக்கப்பட்டன. இதில், 1,153 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; சிலர் வாபஸ் பெற்றுஇருந்தனர். மீதம் 3,082 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக சென்னையில் 294 மனுக்கள் ஏற்கப்பட்டன. திருப்பூர் வடக்கு தொகுதியில் 70 மனுக்கள் ஏற்கப்பட்டன.மனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதில், ஏராளமானோர் வாபஸ் பெற்றனர். இதுதவிர, அதிகாரபூர்வ வேட்பாளர்களின் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்தவர்களும் வாபஸ் பெற்றனர். இதையடுத்து, வேட்பாளர்களது இறுதிப் பட்டியல் நேற்று இரவு தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கியது போக, மற்ற பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சைகளுக்குசின்னங்கள் ஒதுக்கப்பட்டன.

தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னமும், ஐ.ஜே.கே., கட்சிக்கு மோதிரம்சின்னமும் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷனின் 53 சின்னங்களில் ஒன்று, அவர்களது விருப்பப்படி ஒதுக்கப்பட்டது.முதலில், பதிவு செய்த கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. அதன்பின், சுயேச்சைகளுக்கான சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வேட்பு மனு பரிசீலனையின் போது, மயிலாப்பூர் தொகுதிகாங்கிரஸ் வேட்பாளராக மனுதாக்கல் செய்திருந்த, ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரதுகணவர் தங்கபாலுவின் மனு ஏற்கப்பட்டது.அதேபோல, கிருஷ்ணகிரிதொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஹசீனா சையதுக்கு பதில், மக்பூல் ஜானை புதிய வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. ஆனால், அவர் குறிப்பிட்ட நேரத்துக்குள் மனுதாக்கல் செய்யவில்லை. இதை யடுத்து, ஹசீனாவே காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் எனக் கருதப்பட்டது. ஆனால், இதில் திடீர் திருப்பமாக, அவர் தனது மனுவை நேற்று வாபஸ் பெற்றார். மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த அவரது கணவர் சையத், காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார்.ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 12 நாட்களே உள்ளதால், பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. இந்த அனல் பறக்கும் பிரசாரம், ஏப்ரல் 11ம் தேதி மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 13ம் தேதி பதிவாகும் ஓட்டுக்கள் எல்லாம், மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.

சட்டசபை தேர்தல்: விளவங்கோடு மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வேட்பு மனு வாபஸ்

நாகர்கோவில்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த விளவங்கோடு எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்றார்.


குமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் விளவங்கோடு தொகுதி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திருவட்டார் எம்.எல்.ஏ. லீமா ரோஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி தனக்கு சீட் கொடுக்காததால் அதிருப்தி அடைந்த தற்போதைய விளவங்கோடு எம்.எல்.ஏ. ஜான் ஜோசப் அதே தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

இதற்காக அவர் கடந்த 26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். சுயேட்சையாக போட்டியிடுவது ஏன் எனவும் நிருபர்களுக்கு விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயற் குழு கூடி ஜான் ஜோசப்பை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவது என முடிவெடுத்து அறிவித்தது.

இந்நிலையில் விளவங்கோடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த ஜான்ஜோசப் தனது வேட்பு மனுவை நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டார். தன்னை முன் மொழிந்த ஒருவர் மூலம் அதற்கான கடிதத்தை விளவங்கோடு தொகுதி தேர்தல் அதிகாரியிடம் வழங்கினார். இதனால் அத்தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் குறித்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

உங்க செல்லம்மா வந்திருக்கேன், ஓட்டுபோடுங்க: சென்டிமென்ட்டாய் மடக்கும் ராதிகா

தென்காசி: உங்கள் செல்லம்மா வந்துள்ளேன், சரத்குமாருக்கு ஓட்டு போடுங்கள் என்று தென்காசி தொகுதியில் சரத்குமாரை ஆதரித்து பெண்களிடம் ராதிகா வாக்கு சேகரித்தார்.


தென்காசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரான சரத்குமாரை ஆதரித்து அவரது மனைவி ராதிகா பிரசாரம் செய்தார். நகரின் முக்கிய இடங்களில் திறந்த வேனில் நின்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். தென்காசி தொகுதியி்ல் சமக தலைவரும், எனது கணவருமான சரத்குமார் போட்டியிடுகிறார். இது எனக்கு பெருமையாக உள்ளது.

தென்காசிக்கு அடிக்கடி நான் வர வேண்டி இருப்பதால் இங்கு வீடும், அலுவலகமும் பார்த்து வருகிறோம். அதி்முக தேர்தல் அறிக்கையில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என அனைவருக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், பெண்களுக்கு மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மானியத்துடன் ரூ. 10 லட்சம் கடனுதவி போன்றவை மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து எனது கணவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார்.

முன்னதாக அவர் எல்ஆர்எஸ் பாளையத்தில் ரயில்வே மேட்டு தெரு, ரதவீதி, வாலிபன் பொத்தை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு நின்ற பெண்களிடம் ராதிகா நான் உங்கள் செல்லம்மா (சீரியல்) வந்துள்ளேன். இரட்டை இலைக்கு ஓட்டு போடு்ங்கள் என்றார்.

வடிவேலுவுக்கு எதிராக சிங்கமுத்துவைக் களமிறக்கும் தேமுதிக!

சென்னை: வடிவேலுவின் அதிரடி அனல் பிரச்சாரத்தை சமாளிக்க அவரது எதிரியான சிங்கமுத்துவை களமிறக்குகிறது அதிமுக கூட்டணி.


திமுக கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார் வடிவேலு. சில நேரங்களில் எல்லை மீறிப் பேசினாலும், மக்கள் அவரது பிரச்சாரத்தை ரசிக்கிறார்கள். எக்கச்சக்க கூட்டம் கூடுகிறது.

அத்தனை கூட்டங்களிலும் விஜயகாந்தை அவர் விளாசித் தள்ளுகிறார். இதற்கு என்ன பதில் தருவது என்று தெரியாமல் விழிக்கிறார்கள் அதிமுக கூட்டணியினர். காரணம் அங்கு மக்களை ஈர்க்கும் அளவுக்கு இருப்பவர்கள் இருவர் மட்டுமே. ஒன்ரு ஜெயலலிதா. அடுத்தவர் விஜயகாந்த்.

அதிலும் விஜயகாந்த் தனது வேட்பாளரை அடிப்பது, விஜய் ரசிகர்களைத் திட்டுவது என்று மக்களிடம் அதிருப்தியைக் கிளப்பி வருவதால், வடிவேலுக்கு இணையான ஒருவரை களமிறக்க முயன்றுவந்தனர்.

அவர்களிடம் வசமாக சிக்கியுள்ளவர் வடிவேலுவின் முன்னாள் நண்பராக இருந்து, அவரிடம் கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் காமெடியன் சிங்கமுத்து. இந்த வழக்கில் இவர் கைதாகி புழல் ஜெயிலிலும் இருந்தார்.

இந்த இருவருக்குமான பிரச்சினை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வடிவேலுவுக்குப் போட்டியாக பிரச்சாரத்தில் குதிக்கிறார் சிங்கமுத்து.

நாளை மறுதினம் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் கூறுகையில், "திரையில் வடிவேலுவை காமெடியனாகத்தான் பார்த்திருக்கிறீர்கள். அவருக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அந்த முகத்தை தோலுறித்து காட்டத்தான் நான் வருகிறேன்", என்று தொண்டையைக் கனைக்கிறாராம் சிங்கமுத்து.

வேட்பாளரை அடிக்கிறதெல்லாம் ஒரு மேட்டரே இல்லை!-சோ

சென்னை: தனது வேட்பாளரை விஜயகாந்த் அடித்ததில் எந்தத் தவறும் இல்லை. மக்களைப் பொறுத்தவரை இது ஒரு மேட்டரே இல்லை, என்று கூறியுள்ளார் அரசியல் விமர்சகரும் பத்திரிகையாளருமான சோ.


தர்மபுரி தொகுதி தேமுதிக வேட்பாளர் பாஸ்கரனை, மக்கள் முன்னிலையில் சரமாரியாக விஜயகாந்த் அடித்த விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக விஜயகாந்துக்கெதிரான கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளனர் பல கட்சித் தலைவர்களும். ஆனால் விஜயகாந்தோ, என் ஆளைத்தானே அடிச்சேன். உங்களுக்கென்ன வந்தது... என்கிட்ட அடிவாங்கினவன் மகாராஜனாய் வருவான், என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகையாளர் சோவிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜயகாந்தை போயஸ் தோட்டம் பக்கம் கொண்டு போய் சேர்த்ததில் முக்கிய பங்கு இவருக்கு உண்டு என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுவதால், சோ கருத்தையும் கேட்க ஆவலாக இருந்தனர் பத்திரிகையாளர்கள்.

இதுகுறித்து அவர் கருத்து கூறுகையில், "எனக்கென்னமோ இது ஒரு பெரிய விஷயமாவே படல. வேட்பாளரை அடிப்பதையெல்லாம் சீரியஸா எடுத்துக்க முடியுமா... அவரு ஏதோ வேகத்துல அடிச்சிருப்பார். அவங்க கட்சி ஆள்தானே... இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல. ஜனங்க இதை சீரியஸாகவும் எடுத்துக்க மாட்டாங்க", என்றார்.

Wednesday, March 30, 2011


பணம் பறிமுதல் வழக்கு : தேர்தல் கமிஷன் ஏப்.5-ல் விளக்கம் அளிக்க உத்தரவு





 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
சென்னை: பணம் பறிமுதல் செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் கமிஷன் ஏப்ரல் 5&ம் தேதி விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13&ம் தேதி நடப்பதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் கமிஷன் உத்தரவின் பேரில் பல இடங்களிலும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. அதிகளவில் கொண்டு செல்லப்படும் பணம், நகை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதால் பணம் பறிமுதல் தொடர்பான தேர்தல் விதிமுறையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐகோர்ட் வக்கீல் பட்டிஜெகநாதன் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் இன்று விசாரித்தனர். மனுதாரர் சார்பாக வக்கீல் என்.ஜோதி ஆஜராகி, ‘பணம் பறிமுதல் விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை. சட்டப்படி மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற்ற பிறகே வாகன சோதனை நடத்தி பணம் பறிமுதல் செய்ய வேண்டும்.

தேர்தல் கமிஷன் உள்நோக்கத்துடன் திமுகவுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. சர்வாதிகாரி போல் செயல்படுகிறது. பணம் பறிமுதல் செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்றார். தேர்தல் கமிஷன் சார்பாக மூத்த வக்கீல் ராஜகோபால் ஆஜராகி, ‘இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். வழக்கு தாக்கல் செய்த பட்டிஜெகநாதன் வருமான வரித்துறை வக்கீலாக இருக்கிறார். வாகன சோதனையின் போது வருமானவரிதுறை அதிகாரிகளும் உடன் இருக்கிறார்கள். எனவே இந்த வழக்கை ஆரம்ப நிலையிலேயே தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். வக்கீல் ஜோதி குறுக்கிட்டு, ‘ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவருக்கு ராஜகோபால் ஆஜராகி வருகிறார். இப்படிப்பட்டவர் இந்த வழக்கில் எப்படி நியாயமாக செயல்பட முடியும்’ என்றார். 1993&ம் ஆண்டு முதல் தேர்தல் கமிஷன் வக்கீலாக தான் ஆஜராகி வருவதாக ராஜகோபால் கூறினார். இதைக்கேட்ட நீதிபதிகள், ‘வக்கீல்கள் மோதிக்கொள்ள வேண்டாம். தேர்தல் கமிஷன் ஏப்ரல் 5&ம் தேதி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

தலைமை தேர்தல் அதிகாரியிடம் விஜயகாந்த் மீது பாமக புகார்

சென்னை: சென்னை கோட்டையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை இன்று காலை பாமக கட்சியினர் சந்தித்தனர். அப்போது ஒரு மனு கொடுத்தனர். பின்னர் வெளியே வந்த பாமக சட்ட பாதுகாப்பு குழு தலைவர் வக்கீல் கே.பாலு, நிருபர்களிடம் கூறியது: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் செய்துவரும் தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த், எங்கள் கட்சியின் நிறுவன தலைவர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ஆகியோரை பற்றி தரக் குறைவாகவும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசி வருகிறார். பாமக&விடுதலை சிறுத்தைகள் கூட்டணி அமைத்ததை விமர்சனம் செய்து, இரு சமூகத்தினர் இடையில் வன்முறையை தூண்டும் வகையில் நிதானம் இழந்து பேசி வருகிறார். அரசியல் உள்நோக்கத்தோடு பாமக தொண்டர்களுக்கும், அவரது கட்சியினருக்கும் இடையே வன்முறையை தூண்டும் வகையில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசி வருகிறார். தேர்தல் பிரசாரத்தின்போது சாலையை மறித்துக் கொண்டு பிரசாரம் செய்கிறார். இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது. எனவே பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வரும் விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரியை கேட்டுக் கொண்டோம். இவ்வாறு வக்கீல் பாலு கூறினார்.

பணத்தால் ஜெயிக்க அதிமுக திட்டம் : முதல்வர் கருணாநிதி பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: தேர்தல் தோல்வி பயத்தில் ஜெயலலிதா இருக்கிறார்; குவித்து வைத்துள்ள நிதியைக் கொண்டு,  பணத்தால் அடித்து வெற்றி பெற நினைக்கிறார்  என்று முதல்வர் கருணாநிதி பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார். வாக்குகளை விலை பேசுவோரை கையும் களவுமாக காவலர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டிய கடமை உணர்வும் நமக்குள்ளது என்றும் தி.மு.க.வினருக்கு வேண்டுகோளும் விடுத்துள்ளார் முதல்வர்.  முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை: தோல்வி பயமும் வெற்றி கை கூடாதோ என்ற சந்தேகமும் அ.தி.மு.க.வுக்கு  ஏற்பட்டு, எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்று பணத்தை மூட்டை கட்டிக்கொண்டு காரிலும், வண்டிகளிலும், வேன்களிலும் ஆட்கள் மூலமாகவும் அனுப்பப்படுவதாக நம்பகமான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.எப்படியும் இந்த தேர்தலில் என்னையும், பேராசிரியரையும், ஸ்டாலினையும் மற்றும் சில முக்கிய தளபதிகளையும் தோற்கடித்தே தீர வேண்டுமென்று ஜெயலலிதா கங்கணம் கட்டிக்கொண்டு, சேகரித்த பணத்தையெல்லாம் செலவிட துணிந்து விட்டாராம்.

நாட்டில் அரசியல் அமைப்பிலும், மற்ற சகல அமைப்புகளிலும் பறிபோய்விட்ட பதவி அதிகாரத்தை மீண்டும் பற்றிக்கொள்ள வேண்டுமென்பதற்காக, ஒரு தொகுதிக்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பத்து கோடி ரூபாய் வரையில் செலவு செய்ய தயார் என்று அவர்  சவால் விட்டு பணம் ஊர்வலம் நடத்த தயாராகி விட்டார்.
பதுங்கிப் பதுங்கியோ, பலத்த காவலுடனோ தேர்தல் களத்தில் குதித்து ஜனநாயகத்தை விலை பேசிக்கொண்டே பண நாயகத்துக்குப் பகைவர்போல் பாசாங்கு செய்யும் அ.தி.மு.க.வினரை  அடையாளம் காணத் தவறாதீர்கள். அவ்வாறு கார்களிலும், வேன்களிலும் பணத்தைக் குவித்து வைத்துக் கொண்டு வாக்குகளை விலை பேசுவோரை கையும் களவுமாக காவலர்களிடம் பிடித்துக் கொடுக்க வேண்டிய கடமை உணர்வும் நமக்குள்ளது.

வண்டி வாகனங்களில் வருவார்கள், ஒண்டிக்கட்டை போல் திரிவார்கள், ஏழைகளை விலைக்கு வாங்கி ஜனநாயகத்தை ஏலம் போட துணிவார்கள். உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒருக்கணமும் உறங்காமல் காவல் காத்திட வேண்டும். இல்லாவிட்டால் எதிரிகள் ஏமாற்றி விடுவார்கள். மாதக் கணக்கில் விவசாயி உழைத்து, வியர்வையைச் சிந்தி வளர்த்த பயிரின் மொத்த விளைச்சலை இரவோடு இரவாக களவாடிச் சென்றிட எத்தர்கள் முயலுவார்கள். ஏமாந்த காலத்தில் ஏற்றம் கொண்டோர் புலி வேடம் போடுகிறார், அவர்களின் பொய் வேடத்தைக் கலைத்திட முயலுவதுதான் நம் பணியாக இருக்க வேண்டும். திருவிழா கூட்டத்தில் பணத்தை திருடிக்கொண்டு செல்பவன், துரத்திச் செல்பவர்களோடு தானும் சேர்ந்து ஓடிக் கொண்டே ‘திருடன், திருடன்’ என்று குரல் கொடுப்பதைப் போல நல்லவர்கள் போல மக்களிடம் மீண்டும் நடிக்கப் புறப்பட்டு விட்டார்கள்.

மக்களின் ஞாபக மறதியை மூலதனமாக வைத்துக் கொண்டு யாரோ எழுதிக் கொடுத்ததை பக்கம் பக்கமாக படித்து விட்டு, பதவியேற்பு எப்போது என்று துடியாய்த் துடிக்கிறார்கள். அவர்களை நம்பிக் கெட்டோர் நாட்டிலே கண்ணெதிரே இருக்கும்போதே, உண்மை சொரூபத்தைப் புரியாமல் இன்னும் சிலர் உடன் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஐந்தாண்டு காலமாக நாம் சாதனைகளைச் செய்து விட்டுத்தான் தற்போது மக்கள் முன்னால் நிற்கிறோம். ஆனால், அவர்கள் ஆண்ட ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் எந்த தரப்பினரையாவது நிம்மதியாக வாழ விட்டார்களா? அரசு ஊழியர்கள் பட்டபாடு எத்தனை? எஸ்மா, டெஸ்மா சட்டங்களின் மூலமாக அரசு அலுவலர்கள் இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட கொடுமைகளையெல்லாம் மக்கள் மறந்து விட்டார்களா? சாட்டையால் அடித்து அரசு அதிகாரிகளிடம் வேலை வாங்குகிறேன் என்று சட்டமன்றத்திலே அவர்  முழங்கியதுதான் மறக்கக்கூடிய வார்த்தைகளா? ஒன்றிரண்டு பேர் மறந்துவிட்டோ, மீண்டும் தப்பித்தவறி அவர்கள் வந்துவிட்டால் நாம் முந்திக் கொள்ளலாம் என்ற நினைவோடோ பாதை தவறி நடக்க முயற்சிக்கலாம்.  

அவர்கள் வழியில் அவர்கள் செல்லட்டும். நாம் நம் வழியிலே செல்வோம். நாளைய தினம் (30ம் தேதி) என்னுடைய இரண்டாவது கட்ட சுற்றுப்பயணத்தை கோவையில் தொடங்குகிறேன். என்னுடைய சுற்றுப்பயணத்தையும், எதிர்க்கட்சித் தலைவரின் சுற்றுப்பயணத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஒரு ஆங்கில நாளிதழ், நான் சாதனைகளைச் சொல்லி வாக்குகளைக் கேட்பதாகவும், ஆனால் ஜெயலலிதா,  என்னையும், என் குடும்பத்தினரையும் வேகமாக தாக்கிப் பேசுவதாகவும் எழுதியுள்ளது. அவர்களுக்கு நம்மை தாக்கிப் பேசுவதைவிட வேறு செய்திகள் பேசுவதற்கு இல்லை என்கிறபோது என்ன செய்வார்கள்? அவர்கள் தாக்கிப் பேசிட, பேசிட அவர்களைப் பற்றி மக்களே நன்கு உணர்ந்து கொள்வார்கள். அவர்கள் எப்படியும் வெற்றி பெற முடியாத நிலையில்தானே, குவித்து வைத்துள்ள நிதியைக் கொண்டு பணத்தை அடித்து வெற்றி பெற நினைக்கிறார்கள். அந்த நினைப்புக்கு இடம் கொடுக்காமல் ஜாக்கிரதையாக பணியாற்ற வேண்டியது முக்கியம். நாம் நம் வழி ஜனநாயக வழியில் நடப்போம். அவர்கள், அவர்களுக்கு மட்டுமே தெரிந்த பணநாயக வழியில் நடக்கட்டும். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மீண்டும் கருணாநிதி முதல்வரானால் தமிழகம் ஒளிமயமான நாடாகும் : தங்கபாலு

சென்னை: ‘‘மீண்டும் கருணாநிதி முதல்வராக பதவி ஏற்கும்போது தமிழ்நாடு ஒளிமயமான நாடாகத் திகழும்’’ என்று காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறினார். தான் போட்டியிடும் மயிலாப்பூர் தொகுதியில் தங்கபாலு இன்று வீதிவீதியாக பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியை இன்று சந்தித்து தங்கபாலு வாழ்த்து பெற்றார். பின்னர், 115வது வட்டம் எல்டாம்ஸ் ரோடு  தேனாம்பேட்டை சிக்னல் அருகே பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் அவரது மனைவி ஜெயந்தி தங்கபாலுவும் ஆதரவு திரட்டினார். மாசிலாமணி தெரு, வெங்கட்ராமன் தெரு, திருவள்ளுவர் சாலை, அருந்ததி நகர் ஆகிய இடங்களில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். தங்கபாலுவுக்கு அப்பகுதி மக்கள் சால்வைகள் அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். முதல்வர் கருணாநிதியை சந்தித்த பின்பு தங்கபாலு நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றேன். அவர் 6வது முறையாக முதல்வராக வருவார். அவர் பதவி ஏற்கும் போது தமிழ்நாடு ஒளிமயமான நாடாக மாறும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள்’’ என்றார்.

தொடர்கிறது தேர்தல் கமிஷன் அதிரடி நடவடிக்கைகள்: பொதுமக்கள் பாராட்டு

தமிழகத்தில், சட்டசபை தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு, தேர்தல் கமிஷன் எடுக்கும் நடவடிக்கைகள், அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. இதுவரை நடந்துள்ள தேர்தல்களில் இல்லாத வகையில், பிரசார சுவடே தெரியாத அளவுக்கு, அரசியல்வாதிகளை கதிகலங்க செய்திருக்கும் கெடுபிடிகளை பார்த்து, பொதுமக்கள், மனதார பாராட்டுகின்றனர். பல இடங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவித்து, முறைகேடுகளை தவிர்ப்பதிலும் அக்கறை செலுத்த துவங்கியுள்ளனர்.

தமிழகத்தில், வரும் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஏப்., 11ம் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிகிறது. தேர்தல் பிரசார கடைசி நாளுக்கும், தேர்தல் நடக்கும் நாளுக்கும் இடைப்பட்ட ஒரு நாள், தேர்தல் முடிவை மாற்றும் அளவுக்கு, கடந்த லோக்சபா தேர்தலில், அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம், அன்பளிப்புகளை வாரி வழங்கி வெற்றி வாய்ப்பை தங்களுக்கு சாதகமாக மாற்றினர்.இது குறித்து, எதிர்க்கட்சிகள் கடுமையாக புகார் தெரிவித்தன. இதே பாணியில், வரும் சட்டசபை தேர்தலில் பணம் புகுந்து விளையாடும் என கருத்துக்கள் எழுந்தன.தேர்தல் அறிவிப்பு வந்ததிலிருந்து, தேர்தல் கமிஷன் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தத் துவங்கியது.

கட்சிகளின் பிரசாரம் எப்படி இருக்க வேண்டும், பிரசார நேரம், பிரசாரத்திற்கு எந்தெந்த வாகனங்களை பயன்படுத்த வேண்டும், போஸ்டர் ஒட்டக்கூடாது, சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது என, பல விதங்களிலும் பிரசாரத்திற்கு கெடுவிதித்தது.பிரசாரத்திற்கு செல்லும் வேட்பாளருடன், எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது வரை, பல வித உத்தரவுகளை பிறப்பித்தது. மேலும், அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகளை, இடமாற்றம் செய்தது. தேர்தல் பணிக்கு வரும் ஊழியர்கள் விஷயத்திலும் கெடுபிடி தொடர்கிறது.

இது போக, ஒவ்வொரு தொகுதியிலும் உள்ளே வரும் வாகனங்களையும், வெளியே செல்லும் வாகனங்களையும் பரிசோதனை செய்வது, பணம் பொருட்களை கைப்பற்றுவது, வீடு புகுந்து சோதனை நடத்துவது, கட்சிகளின் தேர்தல் அலுவலகங்களில் சோதனை நடத்துவது என, தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டே போகிறது.இதை பார்த்து, அரசியல் கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. முதல்வர் கருணாநிதியே தேர்தல் கமிஷனின் நடவடிக்கை குறித்தும், அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது பற்றியும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

தமிழகத்தில் பல இடங்களில் கட்சிகள் பணப் பட்டுவாடா செய்வதாக செய்தி கிடைத்ததும், சமீப நாட்களாக தேர்தல் அதிகாரிகள் நேரம் காலம் பார்க்காமல், தகவல் வந்த இடத்திற்கு சென்று சோதனையில் இறங்கியுள்ளனர்.இதை பார்த்து, ஓட்டுக்கு பணம் கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த மக்களே, எங்கேயாவது பணப் பட்டுவாடா நடந்தால், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை போய் கொண்டு இருக்கிறது. அந்த அளவுக்கு, தேர்தல் கமிஷன் நடவடிக்கை மக்களை கவர்ந்துள்ளதோடு, தேர்தல் கமிஷன் நடவடிக்கைக்கு நாமும் உதவலாமே என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டு இருப்பது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், மதுரை வடக்கு தொகுதியில், மேலமடை பகுதியில் ஆளுங்கட்சி சார்பில் பணப் பட்டுவாடா செய்யும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர். இது பற்றி சிலர், தேர்தல் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக அந்த பகுதிக்கு அதிகாரிகள் வந்து எச்சரித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.

நாமக்கல் - மோகனூர் சாலையில், தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் பங்கேற்ற கட்சியினருக்கு தங்க நகையுடன் சாப்பாடு பொட்டலம் வழங்குவதாக, தேர்தல் தணிக்கை குழுவினருக்கு புகார் வந்துள்ளது. தணிக்கைக்குழு தலைவர் சுரேஷ் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கேன்டீனுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, முட்டையுடன், 500 தக்காளி சாதம் பொட்டலம் தயார் நிலையில் இருந்தது. அவற்றை ஒவ்வொன்றாக பிரித்து, கிளறி பார்த்தனர். முட்டைகளையும் உடைத்து சோதனை செய்தனர். சாதப்பொட்டலத்தில் தங்கம் இல்லை என்பதை உறுதிசெய்தப்பின் அவற்றை மக்களுக்கு வினியோகம் செய்ய அனுமதி அளித்தனர்."இந்த செலவு, வேட்பாளரின் கணக்கில் சேர்க்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அடுத்த வீ.கூட்ரோடு - வேப்பூர் சாலையில் நேற்று காலை 9 மணிக்கு சிதம்பரத்திலிருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி பயணிகளிடம் சோதனை செய்தனர். இதில், சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த சுப்ரமணி(35) என்பவர், 4,300 கிலோ வெள்ளி கட்டியை உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்றது தெரிந்தது.ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள வெள்ளி கட்டியை பறிமுதல் செய்த அதிகாரிகள், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

தஞ்சை கும்பகோணம் ரோட்டில் உள்ள கோடியம்மன் கோவில் அருகே, தேர்தல் சிறப்புப் படையினர், ஒரு டாடா மினிலாரியில், 58 பெரிய பெட்டிகளில், 180 பிரீத்தி மிக்சி, அதற்கான ஜாருடன் கும்பகோணம் நோக்கி எடுத்துச் சென்றதை கைப்பற்றி, வருவாய்த்துறையினர், ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.இப்படி தேர்தல் கமிஷனின் அதிரடி நடவடிக்கைகள், தமிழகம் முழுவதும் தொடர்கிறது. இதற்கு, பொதுமக்கள் மத்தியில் பாராட்டும் கிடைத்து வருகிறது.

இலவசங்களை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு : இலவச அறிவிப்புகள் குறித்து குறைகள் இருந்தால், தேர்தல் கமிஷன் உள்ளிட்ட அமைப்புகளை அணுகலாம் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஐகோர்ட்டில், "டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க முடியாது. அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியிருப்பதாக கூறியுள்ளார். அவருக்கு குறைகள் இருந்தால், தேர்தல் கமிஷன் மற்றும் மத்திய, மாநில அரசுகள் உள்ளிட்ட அமைப்புகளை அணுகலாம். அப்போது, இப்பிரச்னையை சட்டப்படி ஆராய்வர். இம்மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

ஐகோர்ட்டில், "டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு:கிரைண்டர், லேப் - டாப் என, இலவசப் பொருட்களை வழங்குவதாக, தேர்தல் அறிக்கைகளில் அரசியல் கட்சிகள் கூறியுள்ளன. இந்த கட்சிகளுக்கு ஓட்டு அளித்தால், இலவசமாக இதையெல்லாம் தருவேன் என்பது, வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போலாகும், பொதுமக்கள் பணத்தில் தான் இதை வழங்குகின்றனர்.நம் நாட்டின் வளர்ச்சிக்கான நல்ல திட்டங்களை அறிவிக்காமல், வாக்காளர்களை கவருவதற்காக இலவசங்களை அறிவித்துள்ளனர். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது. அரசியல் கட்சிகள் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து கிரைண்டர், "டிவி'க்களை வாங்கித் தரவில்லை. இதெல்லாம், பொதுமக்களின் பணம்.நதி நீர் பிரச்னை, கல்வி வளர்ச்சி, மருத்துவ வசதிகள் இவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இலவசங்களை விட இதற்கு தான் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இலவசங்கள் குறித்து தேர்தல் கமிஷன், தி.மு.க., தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோருக்கு மனு அனுப்பினேன். அரசியல் கட்சிகளின் இந்த இலவச அறிவிப்புகளை கட்டுப்படுத்த, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். மனு மீதான விசாரணை முடியும் வரை, தேர்தல் முடிவை வெளியிட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தே.மு.தி.க.,வுக்கு ஆதரவாக களமிறங்கும் நடிகர் சிங்கமுத்து

தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்துவரும் வேளையில் தே.மு.தி.க.,வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகர் சிங்கமுத்து களமிறங்குகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் வேளையில் கட்சிகளின் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது. பிரசாரத்திற்கு கட்சி தொண்டர்களில் இருந்து நடிகர், நடிகையர் வரை பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். தி.மு.க.,வுக்கு ஆதரவாக நடிகர் வடிவேலு பிரசாரம் செய்து போல தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை வசைபாடி வருகிறார். இந்நிலையில் வடிவேலுவுக்கு போட்டியாக தே.மு.தி.க.,விலும் ஒரு நடிகரை களமிறக்க அந்தகட்சி திட்டமிட்டது. அதன்படி யாரை பிரச்சாரம் செய்ய வைக்கலாம் என்று எண்ணிய போது நடிகர் சிங்கமுத்துவை வைத்து பிரசாரம் செய்யலாம் என்று கட்சியினர் தெரிவிக்க அவரை அழைத்துள்ளது. அவரும் பிரச்சாரத்திற்கு வருவதாக கூறியிருக்கிறார்.இன்னும் ஓரிரு நாளில் தே.மு.தி.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய களமிறங்குகிறார். ஏற்கனவே வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கு பிரச்சனை இருப்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் துணை முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்

திருநெல்வேலி: தி.மு.க., வேட்பா‌ளர்களை ஆதரித்து துணை முதல்வர் ஸ்டாலின் இன்று நெல்லையில் பிரசாரம் செய்கிறார். நெல்லை மாவட்டம் சங்கர் நகரில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின் தொடர்ந்து கச்சநல்லூர், பாளையங்கோட்டை, மேலப்பாளையம், கள்ளிடைக்குறிச்சி உள்ளிட்ட பல இடங்களில் பிரசாரம் செய்கிறார்.

புதிய தமிழகம் கட்சிக்கு டி.வி. சின்னம் ஒதுக்கீடு

தூத்துக்குடி: அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம்(தனி) தொகுதியில் கிருஷ்ணசாமி ‌போட்டியிடுகிறார். தேர்தலில் அவருக்கு டி.வி., பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. பதிவு பெற்ற கட்சியின் அடிப்படையில் டி.வி. பெட்டி சின்னத்தை ‌ஒதுக்கியதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கிருஷ்ணசாமி கூறியதாவது, தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்றும், தங்களது கட்சியின் தேர்தல் அறிக்கை வருகிற ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்படும் என்று கூறினார். இதனி‌டையே நிலக்கோட்டை ‌தொகுதியில் போட்டியிடும் இவரது கட்சியின் மற்றொரு ‌வேட்பாளருக்கு இன்னும் தேர்தல் சின்னம் அறிவிக்கப்படவில்லை. அங்கும் இவர்கள் ‌டி.வி. சின்னத்தை கேட்டுள்ளனர். ஆனால் அதேதொகுதியில் வேறொருவர் இந்த சின்னத்தை கேட்டு வருவதால் இன்னம் இறுதி‌ செய்யப்படவில்லை.

Monday, March 28, 2011

விருத்தாசலத்தை மறக்கவில்லை: பிரேமலதா

விருத்தாசலத்தில் நடைபெற்ற தேமுதிக பிரசாரக் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரித்தார் பிரேமலதா விஜயகாந்த்.

அப்போது அவர் பேசுகையில்,
விருத்தாசலத்தில் ஏன் விஜயகாந்த் போட்டியிடவில்லை? என பரவலாக கேட்கின்றனர். விருத்தாசலத்தில் செய்த சாதனைகள், நலத்திட்டங்கள் போல அனைத்துத் தொகுதிகளிலும் செய்வதற்காக தற்போது ரிஷிவந்தியத்தில் போட்டியிடுகிறார்.

முரசுக்கு இடைக்கால தடை கோரி வழக்கு

மதுரையை சேர்ந்தவர் முரளிமோகன். இவர் தாக்கல் செய்த ரிட் மனுவில், ’’திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்துகிறேன். முரசு படம் பொறித்த பனியன்களை உற்பத்தி செய்து, விற்பனைக்கு அனுப்புகிறேன். முரசு படத்தை பயன்படுத்த காப்புரிமை சட்டத்தில் பதிவு செய்துள்ளேன்.சட்டசபை தேர்தலுக்காக தேர்தல் கமிஷன் பல நிபந்தனைகளை விதித்துள்ளது.

முரசு படம் பொறித்த பனியனை வெளியூர்களுக்கு கொண்டு செல்லும்போது, ஏதாவது அரசியல் கட்சிகளுக்கு எடுத்து செல்லப்படலாம்என போலீசார் பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது. முரசை எந்த கட்சிக்கும் சின்னமாக ஒதுக்க கூடாது. இவ்வாறு ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு ஐகோர்ட்டில் நிலுவையில் இருக்கும் நிலையில், தேர்தல் கமிஷன் தே.மு.தி.க., வுக்கு அச்சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து இன்று மதுரை ஐகோர்ட் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்த முரளி மோகன்,

முரசு சின்னத்தை தே.மு.தி.க.,வுக்கு தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளதற்கு இடைக்கால தடை வேண்டும் என்றும், தே.மு.தி.க.,வையும் வழக்கில் ஒரு தரப்பாக இணைக்க வேண்டும்’’ என்றும் கூறியுள்ளார்.

பிரச்சாரம்: தமிழகம் வருகிறார்கள் அத்வானி, மோடி

பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, நரேந்திர மோடி, நிதின் கட்கரி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்துக்காக விரைவில் தமிழகம் வரவுள்ளனர்.இத்தகவலை அக்கட்சியின் அகில இந்தியச் செயலர் முரளிதர ராவ், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

’’மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில், கோவை மற்றும் திருப்பூரில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். வெங்கையா நாயுடு ஏப்ரல் 6, 7 தேதிகளிலும், பாஜக தலைவர் நிதின் கட்கரி ஏப்ரல் 7, 8 ஆகிய தேதிகளிலும் தமிழகத்தில் பிரசாரம் செய்கின்றனர்.

குஜராத் முதல்வர் மோடி ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வர திட்டமிட்டுள்ளார். அத்வானி வருகைக்கான தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படும்’’என்று கூறினார்.

கலைஞர் போட்டியிடும் தொகுதியில் ஜெ. பிரச்சாரம்

திமுக தலைவர் கருணாநிதி தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.    இவரை எதிர்த்து அதிமுக சார்பில்  குடவாசல் ராஜேந்திரன் போட்டியிடுகிறார்.

குடவாசல் ராஜேந்திரனுக்கு ஆதரவாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை பிரச்சாரம் செய்கிறார்.  நாளை பிற்பகல் ஜெயலலிதா குடவாசல் ராஜேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் ஜெயலலிதா நாளை பிரச்சாரம் செய்வதால் தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய காவிரி திட்டம் : ஜெயலலிதா பேச்சு

கரூர்: குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய காவிரி நீர் திட்டம் கொண்டுவருவோம் என  ஜெயலலிதா தெரிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கரூர் வந்தார். அங்கிருந்து பிரசார வாகனம்

மூலம் கரூர் திருவள்ளுவர் மைதானத்திற்கு வந்தார். பிரசார வாகனத்தில் இருந்தபடி அதிமுக வேட்பாளர்கள்  கரூர் தொகுதி செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி செந்தில்நாதன், கிருஷ்ணராயபுரம் (தனி) காமராஜ் ஆகியோருக்கு வாக்கு கேட்டு

ஜெயலலிதா பேசியதாவது:  கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். குறிப்பாக விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். இதை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னை

வெற்றிபெற செய்தால்  விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுப்பேன். பெட்ரோல் விலை மட்டும் கடந்த ஓராண்டில் ரூ.15 அதிகரிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளை காரணமாக சாதாரண மக்கள் வீடு கட்டுவது கனவாக உள்ளது. மின் மிகை

மாநிலமாக இருந்த தமிழகம்  மின் வெட்டு மாநிலமாக மாறிவிட்டது. இதனால் தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஸ்பெக்ட்ரம் மூலம் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது.
காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்னைகளை தீர்க்க முடியவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கமுடியவில்லை. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், தலித்கள், அரசு ஊழியர்கள் தாக்கப்படுகின்றனர். அரசு

ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது.

சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காணப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். எனவே உங்கள் பேராதரவை அதிமுகவுக்கே அளியுங்கள். பின்னர் திருச்சி மாவட்டம் முசிறிக்கு சென்றார்.
பெரம்பலூர்: பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் தமிழ்ச்செல்வன் (பெரம்பலூர்), துரை.காமராஜ் (குன்னம்), துரை மணிவேல் (அரியலூர்), இளவழகன் (ஜெயங்கொண்டம்) ஆகியோருக்கு ஆதரவாக பிரசாரம்

செய்ய ஜெயலலிதா முசிறியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாலை 4க்கு பெரம்பலூர் வந்தார்.  பெரம்பலூர் பாலக்கரை அருகே ஜெயலலிதா பேசுகையில்,‘ அதிமுக ஆட்சிக்கு வந்தால் அரியலூர் தனி மாவட்டமாகவே செயல்படும். அரசு

ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும்‘ என்றார்.

அமராவதி ஆற்றில் புதிய பாலம் : கரூரில் ஜெயலலிதா வாக்குறுதி

கரூர்: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று மதியம் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள்  கரூர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி செந்தில்நாதன், கிருஷ்ணராயபுரம் (தனி) எஸ்.காமராஜ் ஆகியோருக்கு வாக்கு கேட்டு பேசினார். அவர் பேசியதாவது: கடும் மின் வெட்டால்  விவசாயம் வீழ்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் நலிவடைந்து விட்டது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை தடுக்கமுடியவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தால் சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்க புதிய காவிரி குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். பசுபதிபாளையம் பழைய அமராவதி பாலத்தின் அருகே புதிய பாலம் கட்டப்படும். மக்களின் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

நாளை திருவாரூர் கடந்த 24ம் தேதி முதல் திருச்சியில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வரும் ஜெயலலிதா,  திருச்சி, கரூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் பிரசாரத்தை முடித்துள்ளார். இன்று மதியம் அவர் திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம்  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை செல்கிறார். அங்கு புதுக்கோட்டை மாவட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து  பிரசாரம் செய்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு குடந்தை  ஆடவர் கல்லூரியில் வந்து இறங்குகிறார். பின்னர் குடந்தை காந்தி பார்க்கில் நடைபெறும் கூட்டத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். பின்னர் தஞ்சை வந்து திலகர் திடலில் நடைபெறும்  கூட்டத்தில் பேசுகிறார்.  இரவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் தங்கும் ஜெயலலிதா நாளை பிற்பகல் ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் செல்கிறார். அங்கு தெற்கு வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்களை அறிமுகம் செய்து பேசுகிறார். பின்னர் கடலூர் மாவட்டம் செல்கிறார்.

காங்.வேட்பாளர் மாயமான விவகாரம் : தேர்தல் ஆணையத்தில் தங்கபாலு மீது ‘திடுக்’ புகார்

சென்னை: ‘கிருஷ¢ணகிரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மக்பூல் ஜான் வேட்பு மனு தாக்கல் செய்யாததற்கு தங்கபாலுதான் காரணம்’ என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தொகுதிக்கு காங்கிரஸ் வேட்பாளராக முதலில், சென்னையை சேர்ந்த ஹசீனா சையத் அறிவிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக வேட்பு

மனுதாக்கலும் செய்தார். இதற்கு, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, ஹசீனா சையத் அதிரடியாக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மக்பூல் ஜான் அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அவருக்கும் காங்கிரஸ்  சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி வரை மக்பூல்ஜான் மனு தாக்கல் செய்யவில்லை. அவர் ‘திடீரென’ மாயமானார். அவர் எங்கே போனார்;

எதற்காக வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை என்ற விவரம்   தெரியவில்லை.

இந்நிலையில், கோட்டையில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரை, மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் சாந்தி நேற்று சந்தித்து புகார் மனு கொடுத்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சி சார்பில் முதலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹசீனா சையத்திடம், தங்கபாலு ரூ.50 லட்சம் வாங்கி உள்ளார். அதில், ரூ.10 லட்சத்தை காங்கிரஸ் கட்சியால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மக்பூல் ஜானுக்கு கொடுத்து,

வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து விட்டார்.

எனவே, லஞ்ச பணம் கொடுத்ததாக தங்கபாலுவை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளோம். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இப்படி பணம்

வாங்கி கொண்டு ஜனநாயகத்தை கேலி குத்தாக்கிய தங்கபாலுவை, உடனடியாக கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

15 தொகுதிகளில் வெற்றி பெற முயற்சி : இல.கணேசன் பேட்டி!

தென்காசி: பாரதிய ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குற்றாலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பீகார், குஜராத்தில் தொழில் துறை நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது. அங்கெல்லாம் பாரதிய ஜனதா  மற்றும் கூட்டணி ஆட்சிதான் நடக்கிறது. தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் போதாது. தமிழக சட்டசபை தேர்தலை பாஜ, ஐக்கிய ஜனதாதளம், ஜனதா கட்சியுடன் இணைந்து சந்திக்கிறது. 15 தொகுதிகளில் வெற்றி பெற முயற்சி செய்கிறோம். வரும் காலத்தில் தாமரை ஆட்சி மலரும்.

16 சீட் தருவதாக கூறி அதிமுக அணிக்கு அழைப்பு : திருமாவளவன் பரபரப்பு தகவல்

சென்னை: சோழிங்கநல்லூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் எஸ்.எஸ்.பாலாஜி அறிமுக கூட்டமும், ஜனநாயக முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டமும், நீலாங்கரையில் நடந்தது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

2006 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம். உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் கேட்ட இடங்களை அவர்கள் ஒதுக்கவில்லை.  அப்போது கருணாநிதி அழைத்து நாங்கள் கேட்ட இடங்களை கொடுத்தார். இந்த  தேர்தலில் அதிமுக

தரப்பில் முக்கிய பிரமுகர்கள் என்னை தொடர்புகொண்டு 16 சீட் தருகிறோம் என்று சொல்லி அழைப்பு விடுத்தனர். அதை நான் ஏற்கவில்லை. திமுக கூட்டணியில் நாங்கள் கேட்ட தொகுதிகளை முதல்வர்  கொடுத்துள்ளார். எங்கள் கூட்டணி அமோக

வெற்றி பெறும். கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆவார். பாமக, விடுதலை சிறுத்தைகள் பாம்பும் கீரியுமாக இருப்பதாக சொல்வது தவறு. தமிழர் பாதுகாப்பு இயக்கமாக நாங்கள் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறோம். கருணாநிதி

இல்லையென்றால் பாமக, விடுதலை சிறுத் தைகள் அரசியல் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கும். இருவரையும் கருணாநிதி அழைத்துப் பேசி, கேட்ட தொகுதிகளை கொடுத்துள்ளார். நாங்கள் 6வது தடவையாக கருணாநிதியை அரியணையில் ஏற்றுவோம்.

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏப்.3ல் தபால் ஓட்டு போடலாம்

நெல்லை: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏப்ரல் 3ல் தபால் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 13ல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் முடிந்து விட்டது. இன்று  வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. குறுகிய கால அவகாசமே உள்ளதால் தேர்தல் பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன. இப்பணியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த முதுகலை ஆசிரியர்களுக்கும் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை 10 தொகுதிகளிலும் 11 ஆயிரத்து 500 அரசு ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் ஈடுபட தேவையான முதல் கட்ட பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. 2வது கட்ட பயிற்சி வரும் ஏப்ரல் 3ல் அளிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 12ம் தேதி மதியம் முதல் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பொறுப்பேற்க வேண்டியுள்ளதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வசதிக்காக ஏப்ரல் 3ம் தேதி பயிற்சி நாளன்றே தபால் ஓட்டுகளை போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் பதற்றமானவையாக கண்டறியப்பட்ட 450 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் வகையில் லேப்டாப்கள் தேர்தல் பிரிவு மூலம் வழங்கப்படுகிறது. இது சம்பந்தமான சோதனை பணிகள் கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது. வாக்குப்பதிவுக்கு முன்னதாக அந்தந்த ஓட்டுப்பதிவு மையங்களில் லேப்டாப்களை பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சனீஸ்வர பகவான் கோவிலில் முதல்வர் மனைவி பரிகார பூஜை

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில், தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, பரிகார பூஜைகள் செய்து வழிபட்டார்.காரைக்கால் திருநள்ளாரில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கு தனி சன்னிதி உள்ளது. இக்கோவிலில் சனிப் பெயர்ச்சி காலத்தில் லட்சக்கணக்கிலும், சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி ராஜாத்தி, திருநள்ளார் சனி பகவானை தரிசனம் செய்ய நேற்று முன்தினம் காரைக்கால் வந்தார். மதியம் 12.10 மணிக்கு கோவிலுக்கு வந்த ராஜாத்தி, முதலில் சொர்ணகணபதி, சுப்பிரமணியர், திருமால், தர்பாரண்யேஸ்வரர், பிரணாம்பிகை அம்பாளை வழிபட்டு, இறுதியாக சனீஸ்வர பகவானை தரிசிக்க வந்தார்.ராஜாத்தி சார்பில், சனி பகவானுக்கு தயிலாபிஷேகம் நடத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன. பின், எள்தீபம் ஏற்றப்பட்டு, காக்கைக்கு சாதம் அளிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் ராஜாத்திக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சாமிதரிசனம் முடிந்து, மதியம் 1.10 மணிக்கு, ராஜாத்தி காரில் புறப்பட்டு சென்றார்.

காங். அதிருப்தி வேட்பாளர்கள் வாபஸ் பெற வேண்டும்-ஜி.கே.வாசன் கோரிக்கை

சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் பிரசாரத்தைத் தொடங்கவில்லை. இளங்கோவன் எங்கே போனார் என்பது தெரியவில்லை. ப.சிதம்பரத்தைக் காணவில்லை. கார்த்தி சிதம்பரத்தைக் காணவில்லை. ஜி.கே.வாசனையும் காணவில்லை. தங்கபாலுவுக்கு ஏகப்பட்ட சிக்கல். எப்போது மீண்டு வருவார் என்று தெரியவில்லை.

இந்த நிலையில் நேற்றுதான் வாசன் கோஷ்டியினர் தூக்கம் கலைந்து விழித்து, தஙக்ளது பிரசாரப் பாடல்கள் அடங்கிய வெற்றிகீதம் என்ற ஆடியோவை ரிலீஸ் செய்தனர்.

இதைத் தொடர்ந்து இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசினார் வாசன். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,

மத்திய, மாநில அரசுகள் செய்துள்ள நலத்திட்ட உதவிகளால் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். இரண்டு பாராளுமன்ற தேர்தல், கடந்த சட்டமன்ற தேர்தல்களில் திமுக கூட்டணி வெற்றி, நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.

திமுக தேர்தல் அறிக்கை மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ஏனென்றால் கடந்த தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது நிறைவேற்றப்பட்டுள்ளது.

எதிர்கட்சிகளின் தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள். தேர்தல் பிரச்சாரத்தை வரும் 30ஆம் தேதி தொடங்குகிறேன்.

திமுக கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ள போட்டி வேட்பாளர்கள் குறிப்பாக காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் அதிலிருந்து விலகிக் கொண்டு கூட்டணியின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்றார் வாசன்.

புரட்சியோடு புரட்சி இணைந்துள்ள மெகா வெற்றிக் கூட்டணி-பிரேமலதா விஜயகாந்த்

பேராவூரணி: புரட்சியோடு புரட்சி இணைந்துள்ளது. எனவே இந்த மெகா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்திற்கு நல்லாட்சியைத் தரும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


பேராவூரணி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளரும், நடிகருமான அருண் பாண்டியனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், புரட்சியோடு புரட்சி இணைந்துள்ளது. இது மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் மெகா கூட்டணியாகும்.

இந்தக் கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு நல்லதொரு ஆட்சியைத் தரும் என்றார் பிரேமலதா.

தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தனது பிரசாரத்தின்போது விஜயகாந்த்தைப் போலவே இவரும் கருணாநிதியை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: சீமானிடம் உவரி மக்கள் உறுதிமொழி

உவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர்.


நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடும் 63 தொகுதிகளிலும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் அவர் தனது முதல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

காங்கிரஸ் மட்டும்தான் அவர் இலக்கு. 'திமுக, பாமக, அதிமுக யாருக்கு வேண்டுமானாலும் உங்கள் ஓட்டு போகட்டும். ஆனால் நமது இன விரோதி காங்கிரஸுக்கு மட்டும் ஓட்டளிக்காதீர்கள்' என்று அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று உவரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். உவரி பகுதியில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட சீமான், பின்னர் அப்பகுதி மக்களிடம் பேசினார்.

மீனவர்களின் இன்றைய பாதுகாப்பற்ற நிலைக்குக் காரணம் காங்கிரஸ் கட்சியே என்றும், இந்தக் கட்சி வேட்பாளர்களை ஜெயிக்க விட்டால், இப்போதுள்ள மோசமான நிலைதான் தொடரும் என்றும் அவர் கூறினார்.

உடனே அப்பகுதி மக்கள், "நீங்கள் தேர்தலில் நில்லுங்கள். மீனவர்களின் ஒட்டுமொத்த வாக்கையும் உங்களுக்கே அளிக்கிறோம்," என்றனர் ஒருமித்த குரலில்.

அதற்கு பதிலளித்த சீமான், "இந்தத் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அடுத்த தேர்தல் வரை பொறுத்திருங்கள். இப்போது உங்கள் வாக்கை காங்கிரஸுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தி வீழ்த்துங்கள். அது போதும்," என்றார்.

மீனவ சமுதாயத்துக்கு காங்கிரஸ் அரசால் நேர்ந்த கொடுமைகளை விளக்கினார். ஈழத்திலும் தமிழக கடலோர மாவட்டங்களிலும் தமிழர் கொல்லப்பட்டதற்கு காரணம் காங்கிரஸ்தான் என்பதை அவர் சொன்னபோது, உவரி மக்கள் உரத்த குரலில் காங்கிரஸுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றனர்.

சீமான் கிளம்புவதற்கு முன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனைவரும் விரும்பினர். அவர்களை தனித் தனி குழுவாகப் பிரித்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுத்துக் கொண்டார் சீமான்.

எக்காரணம் கொண்டும் காங்கிரஸுக்கு ஓட்டுப் போடவே மாட்டோம் என சீமான் முன்னிலையில் உவரி மக்கள் அனைவரும் சத்தியமடித்து கூறிச்சென்றனர்.

அதிமுக கூட்டணி தேர்தலில் வெல்லும்-144 சீட் கிடைக்கும்-கருத்துக் கணிப்பு

டெல்லி: லென்ஸ்ஆன்நியூஸ் என்ற இணையதளம் நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


லென்ஸ்ஆன்நியூஸ் இணையதளம் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஒன்றாகும். இது தமிழகம், புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள மாநிலங்களில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

12 தொகுதிகளைத் தேர்வு செய்து அதில் 3000 பேரிடம் கருத்துக் கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது இந்த இணையதளம்.

இந்த கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளதாவது...

160இடங்களில் போட்டியிடும் அதிமுகவுக்கு 100 இடங்கள் வரை வெற்றி கிடைக்கலாம். அதிமுக கூட்டணிக்கு 144 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

திமுக கூட்டணிக்கு 88 இடங்கள் வரை கிடைக்கலாம். மற்றவர்களுக்கு 2 இடங்கள் வரை கிடைக்கலாம்.

தனிப்பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை. எனவே அதிமுகவால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது. கூட்டணிக் கட்சிகளின் பலத்தில்தான் அது ஆட்சி அமைக்க முடியும். எனவே அதிமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடித்தாலும் அது, ஜெயலலிதா வார்த்தைகளின்படி மைனாரிட்டி அரசாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக கூட்டணிக்கு 47 சதவீத வாக்குகள் கிடைக்கும். அதேசமயம், திமுக கூட்டணிக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும். மிக மிக குறுகிய இடைவெளியில் வாக்கு சதவீதம் இருந்தாலும் அதிமுகவுக்கு அதிக இடங்கள் கிடைக்க முக்கியக் காரணம், விஜயகாந்த்தின் தேமுதிக இக்கூட்டணியில் இணைந்திருப்பதால்தான்.

அதேசமயம், திமுக கூட்டணியில் பல தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாச அளவில்தான் தோல்வி இருக்கும். இதற்கு கூட்டணிக் கட்சியினரிடையே காணப்படும் ஒத்துழையாமை உள்ளிட்டவை காரணமாக இருக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் ஊழலால் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் பலன் அடைந்துள்ளனர் என்று 48 சதவீதம் பேரும், இல்லை என்று 21 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

திமுக அரசின் இலவச கலர் டிவியைப் பெற்றுள்ளீர்களா என்ற கேள்விக்கு 92 சதவீதம் பேர் ஆம் என்று கூறியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழகமும் திமுக வழங்கிய இலவச டிவியைப் பெற்று பயன் அடைந்துள்ளது.

எந்தக் கட்சியால் சிறந்த ஆட்சியைத் தர முடியும் என்ற கேள்விக்கு திமுக என்று 46 சதவீதம் பேர் பதிலளித்துள்ளனர். அதிமுகவுக்குக் கிடைத்துள்ள ஆதரவு 42 சதவீதம் பேர் மட்டுமே.

தமிழக வாக்காளர்கள் மத்தியில் பிரபலமான தலைவராக கருணாநிதி விளங்குகிறார். முதல்வர் பதவிக்கு அவர்தான் பொருத்தமானவர் என்று 43 சதவீதம் பேரும், ஜெயலலிதா என்று 42 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று 61 சதவீத வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

காங். கருத்துக் கணிப்பில் 77 இடங்கள்

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்பட்ட ரகசிய கருத்துக் கணிப்பில் திமுக-காங் கூட்டணிக்கு 77 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிய வந்துள்ளதாம்.

அதிமுக கூட்டணிக்கு 152 இடங்கள் கிடைக்கும் என்றும் இதில் தெரிய வந்துள்ளதாம். இடதுசாரிகளுக்கு 4 இடங்களும், பாஜகவுக்கு ஒரு சீட்டும் கிடைக்கும் என இந்தக் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளதாம்.

புதுச்சேரியில் 11 இடங்கள்

புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் காங்கிரஸ் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு 19 இடங்கள் கிடைக்குமாம்.

Case filed against actor Vadivelu



Tiruvarur town police have registered a case against film actor Vadivelu for his "denigrating speech" against founder of Desiya Murpokku Dravida Kazhagam (DMDK) Vijayakant here on March 23.
P. Moorthy, Superintendent of Police, said that the case was registered by Selvam, Inspector of Tiruvarur Town Police station, on Saturday night.
Cases have been registered against Mr. Vadivelu under sections 153 (A) for spreading hatred among groups, 171(G) giving false propaganda and section 505 part two for making denigratory speech.
The cases have been registered following a complaint lodged with the Chief Electoral Officer of Tamil Nadu by Dileep Kumar, High power committee member of DMDK, Chennai. In his complaint Mr. Kumar said that Mr. Vadivelu had made a denigrating speech against Mr. Vijayakant which is not permitted under law at the public meeting held at Tiruvarur on March 23 for launching the campaign for the Democratic Progressive Alliance led by DMK. Moreover the speech was telecast by a couple of TV channels repeatedly.
Mr. Kumar appealed to the Chief Electoral Officer to issue orders to stop the telecast and take action against Mr. Vadivelu by registering cases. Mr. Vadivelu should be barred from making such derogatory speeches against Vijayakant in future, he said in the complaint.
The Chief Electoral Officer forwarded the complaint to Tiruvarur Collector K. Baskaran who in turn asked the Superintendent of police to take action.

Actor Kushboo booked for violating Code of Conduct

Well known actor and DMK star speaker Kushboo has been booked under in two cases for allegedly violating the Model Code of Conduct in the district, police said today.
In the first case, the actor allegedly interrupted road traffic while campaigning for her party at Palanichetti area in the district, they said.
The second case was booked when eight cars were found to be following the vehicle of the actor at two places in the district without prior permission, authorities said, adding that all the eight vehicles have been seized.

DMK fears losing power, says Jayalalithaa

Fear of losing power has forced the DMK leader M. Karunanidhi to seek mandate by projecting the Tamil race as reeling on the throes of crisis, AIADMK leader Jayalalithaa said on Monday.
Mr. Karunanidhi was well-versed “not only in corruption” but also in deceiving people. People should dislodge him before he wreaks havoc on the entire State. “Will you all do it?” she asked the huge crowd of supporters and evoked a roaring response.
Ms. Jayalalithaa at the outset likened the turnout of people disliking family rule in the State to the uprising by Egyptians to abolish dictatorship.
She charged Mr. Karunanidhi with betraying Tamils by enabling Sri Lanka to retain Katchatheevu on a platter, ignoring the sufferings of lakhs of Tamils in the island nation, and “shamelessly” letting people of Tamil Nadu down on the Cauvery river water issue with Karnataka despite being a part of the Central Government.
The AIADMK leader felt that Mr. Karunanidhi was not sincere about getting the State's share since his family's business interest in Karnataka would be affected.
The DMK, she said, has caused disgrace to Tamil Nadu on the 2G spectrum issue, destroyed the Indian economy and undermined its security.
The former Chief Minister sought to know the cause for the mysterious death of the contractor of the Veeranam project Satyanarayana Reddy when the DMK was in power from 1971 to 1976. Also confounding were the deaths of DGP Durai when the DMK was in power from 1989 to 91, contractor Ramesh in connection with the corruption in over bridges construction when the DMK held power from 1996 to 2001, and the recent death of Sadiq Batcha, aide of former Minister A. Raja. Ordinary people end up getting victimised due to corruption indulged in by the DMK, she said.
Ms. Jayalalithaa exhorted people to safeguard democracy in Tamil Nadu by coming out and voting in large numbers. For the voters in Gandarvakottai constituency, she promised to include the region in the scheme to divert water from the Coleroon, and a new bus stand if voted to power. A cashew processing centre, a government college and a government polytechnic were among her other promises.
Similarly the local requirements in the other constituencies in Pudukottai district will also be fulfilled, she said.
Ms. Jayalalithaa also listed the promises in the AIADMK manifesto, soliciting votes for her party contestants from Gandharvakottai, Alangudi, Viralimalai, Aranthangi and Tirumayam constituencies and the CPI candidate contesting from the Pudukottai Assembly segment.

Seven nominations rejected

Seven nominations were rejected during the scrutiny of nomination papers held at the district election office in Painavu on Monday. The nominations rejected were those of dummy candidates. The nominations of all main contestants were found valid. There were 51 nominations filed from the five Assembly constituencies in the district.

லஞ்சம் கொடுத்து சீட் பெற்ற இ., கம்யூ., வேட்பாளர்;தா.பாண்டியன் பணம் பெற்றதாக தொண்டர்கள் புகார்

ஓசூர்: ஓட்டுக்குத்தான் காசு கொடுப்பார்கள், வேலை வாங்க காசு கொடுப்பார்கள், இங்கே வேட்பாளரே ஒருவர் கட்சி நிர்வாகிக்கு ரூ.50 லட்சம் லஞ்சமாக கொடுத்து தேர்தலில் நிற்க சீட் வாங்கியிருக்கிறார் இந்திய கம்யூ., கட்சி எம்.எல்.ஏ., இதனால் அதிருப்பதியுற்ற இக்கட்சி பிரமுகர்கள் பலர் கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட தளி சட்டசபை தொகுதியில் 50 லட்சம் கொடுத்து "சீட்' வாங்கி வந்த "சிட்டிங்' எம்.எல்.ஏ., ராமச்சந்திரனை தோற்கடிக்க தி.மு.க., வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாகராஜ் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.

நாகராஜ் ரெட்டி கோஷ்டியினரும், தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் கோஷ்டியினரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வந்தனர். கட்சி தலைமை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டதால் நாகராஜ்ரெட்டி கோஷ்டியினர் கட்சி நடவடிக்கையில் இருந்து ஒரங்கட்டப்பட்டனர். நாகராஜ் ரெட்டி மற்றும் அவரது ஆதரவார்கள் ஆலோசனை கூட்டம் ஓசூரில் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் நாகராஜ் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நான் தளியில் போட்டியிட்டேன். சி.பி.எம்., கட்சியில் இருந்த ராமச்சந்திரன் "சீட்' கிடைக்காத அதிருப்தியில் என்னை எதிர்த்து கூட்டணி தர்மத்தை மீறி போட்டியிட்டார். அதனால், நான் வெறும் 2,500 ஓட்டுகள் வித்யாசத்தில் தோல்வியடைந்தேன். கூட்டணி தர்மத்தை மீறிய குற்றத்திற்காக ராமச்சந்திரனை சி.பி.எம்., கட்சியை விட்டு வெளியேற்றியது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு துரோகம் செய்த ராமச்சந்திரனையும், அவரது மாமனார் லகுமையாவையும் எந்த பரிசீலனையும் செய்யாமல் மாநில செயலாளர் தா.பாண்டியனும், துணை செயலாளர் மகேந்திரனும் தன்னிச்சியாக முடிவு செய்து கட்சியில் சேர்த்தனர். இது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

பத்து "சீட்'களையும் விற்று விட்டனர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை முத்து, கூடுமியான உள்ளிட்ட தியாக தலைவர்கள் ரத்தம் சிந்தி ஏராளமான இளைஞர்களை கட்சியில் சேர்த்து கட்சியை வளர்த்தனர். தற்போது இந்த கட்சியை பண பலத்தை பயன்படுத்தி ராமச்சந்திரனும், லகுமையாவும் ஆக்கிரமித்து விட்டனர். இதனால், உண்மையான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பழைய நிர்வாகிகள், தொண்டர்கள் மதிக்கப்படவில்லை. நல்லக்கண்ணு செயலாளராக இருந்தவரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயகம் இருந்தது. தா.பாண்டியனும், மகேந்திரனும் தங்களுடைய சுயநலத்திற்காக அ.தி.மு.க., கூட்டணியில் கிடைத்த பத்து "சீட்'களையும் விற்று விட்டனர்.

ராமச்சந்திரனை தோற்கடிக்க பிரசாரம்: தளி தொகுதியில் ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவிக்க கட்சி நிர்வாகிகளிடம் கருத்து கேட்பு நடத்தவில்லை. தா.பாண்டியனும், மகேந்திரனும் 50 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு ராமச்சந்திரனை வேட்பாளராக அறிவித்து விட்டனர். அதனால், இந்த தேர்தலில் ராமச்சந்திரனை தோற்கடிக்க அவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் பிரகாஷை ஆதிரிக்க முடிவு செய்துள்ளோம். அவரை ஆதரித்து தொகுதி முழுவதும் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளோம். மேலும், கம்யூனிஸ்ட் கொள்கை இல்லாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் நீடிப்பதை விரும்பவில்லை. மாவட்டம் முழுவதும் உள்ள 23 மாவட்ட குழு உறுப்பினர்கள் உள்பட 300 கிளைகளை கலைத்து கட்சியில் விலகி உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜெயந்தி தங்கபாலு மனு தள்ளுபடி

சென்னை : மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜெயந்தி தங்கபாலுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவருக்கு பதிலாக மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலுவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜெயந்தி தங்கபாலுவை வேட்பாளராக அறிவித்ததற்கு கடும் கண்டனம் எழுந்தது. தங்கபாலு வீட்டை முற்றுகையிட்ட தொண்டர்கள் சிலர் தீக்குளிக்க முயன்றனர்.

மனைவி- சொத்து காரணமாக சில வேட்பாளருக்கு சிக்கல் வந்தது

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு இன்று பரிசீலனை நடந்தது. இதில் பெருவாரியான சுயேச்சை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சிற்சில புகார்கள் மற்றும் ஆவண விடுப்பு ஏற்பட்டாலும் கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கப்பட்டு முக்கிய கட்சிகள் மனுக்கள் ஏற்கப்பட்டன.
தமிழகத்தில் 234 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் கடந்த 19 ம் தேதி துவங்கியது. மொத்தம் 4 ஆயிரத்து 289 மனுக்கள் தாக்கலாகின. கடைசி நாளான 26ம் தேதி மட்டும் ஆயிரத்து 879 மனுக்கள் பதிவாகின. இதில் திருப்பூர் ஒரு தொகுதியில் மட்டும் 152 பேர் போட்டியிடுவதாக மனுத்தாக்கல் செய்தனர். இவர்களில் 100 க்கும் மேற்பட்டவர்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர்.
வேட்பு மனு இன்று அந்தந்த தேர்தல் அலுவலகங்களில் பரிசீலனை நடந்தது. தமிழகத்தில் போட்டியிடும் அரசியல் கட்சி தலைவர்கள் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., , தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மற்றும் அமைச்சர்கள் மனுக்கள் ஏற்கபட்டு விட்டன. அதே நேரத்தில் காங்., தலைவர் தங்கபாலு மனøவி ஜெயந்தியின் மனு நிராகரிக்கப்பட்டது.
திருவாரூரில் 12 பேர் போட்டி: முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் மொத்தம் 18 மனுக்ள் தாக்கல் ஆனது. இதில் 6 மனுக்கள் தள்ளுபடியானது. முதல்வர் கருணாநிதி உள்பட மொத்தம் 12 பேர் களத்தில் உள்ளனர்.
ஸ்ரீரங்கத்தில் 21 பேர் போட்டி: திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ., மனு ஏற்கப்பட்டது. இந்த ‌தொகுதியில் மொத்தம் 23 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இதில் 2 மனுக்ள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதிகளில் மொத்தம் 41 மனுக்கள் பதிவாகின. 12 மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது 29 பேர்களத்தில் உள்ளனர். மதுரை மேற்கு தொகுதியில் மொத்தம் 13 மனுக்கள் தாக்கலானது . இதில் ஒரு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 3 பேர் வாபஸ் பெற்றனர். தற்போது களத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ., மற்றும் சுயேச்சை உள்பட 9 பேர் களத்தில் உள்ளனர். மதுரை தெற்கு தொகுதியில் மொத்தம் தாக்கலான 12 மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 188 மனுக்கள் தாக்கலானது. இந்த மனுக்களில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிடும் காங்., வேட்பாளர் வேல்துரை மீது சுயேச்சை வேட்பாளர் ஒருவர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நான்குனேரி தொகுதியில் போட்டியிடும் யாதவமகா சபை தலைவர் தேவநாதன் மனுவும் தள்ளுபடியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. சர்ச்சையில் சிக்கியுள்ள வேட்பாளர்களுக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் அவகாசம் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 109 பேர் போட்டி: திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகளில் இதுவரை 138 மனுக்கள் பதிவாகின. இதில் 25 மனுக்கள் தள்ளுபடியானது. 4 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 109 மனுக்கள் ஏற்ககப்பட்டன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஞானசேகரனுக்கு சிக்கல்: 4 முறை வேட்பாளராக இருந்தவரும், தற்போதைய எம்.எல்.ஏ., வுமான ஞானசேகரன் காங்., சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இத் தொகுதியில் காங்கிரசை சேர்ந்த வாலாஜா அசேன் மனு தாக்கல் செய்திருந்தார். ஞானசேகரன் மனு தாக்கலின் போது கொடுத்த சொத்து கணக்கில் முழுமையான தகவல்களை அளிக்கவில்லை என கடிதம் வாலாஜா உசேன் , கொடுத்தார். திருமுல்லைவாயிலில் அவர் பெயரிலும், மனைவி பெயரிலும் வாங்கிய நிலம் பற்றிய தகவலை மறைத்துள்ளதாகவும், நிலம் வாங்கப்பட்டதற்கான ஆதாரத்தையும் ஒப்படைத்தார்.
அவற்றைப் பெற்றுக் கொண்ட தேர்தல் அதிகாரி கீதா, ஞானசேகரன் 3 மணிக்குள் சொத்துக்கள் குறித்த முறையான ஆவணங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். ஞானசேகரனின் ஆவணங்கள் தள்ளுபடியாகக்கூடிய சூழல் நிலவியது. ஆனால் உரிய ஆவணங்கள் ஒப்படைத்த பின்னர் மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது .
அமைச்சர் நேருவுக்கு நெருக்கடி: திருச்சியில் போட்டியிடும் அமைச்சர் நேருவுக்கு வக்கீல் மலர்விழி என்பவர் ஆட்சேபனை தெரிவித்திருந்தார். இதில் உரிய ஆதாரம் இல்லாததால் மனு ஏற்கபட்டது.
அவினாசியில் .அ.தி.மு.க., வேட்பாளருக்கு சிக்கல்: திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் கருப்பசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவரது மனுவில் தனது மனைவி விவரம் தொடர்பாக பொய் கூறியிருக்கிறார் என அ.தி.மு.க.,வில் உள்ள அதிருப்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் மனு மீதான விசாரணையில் இழுபறி நீடிக்கிறது.
சேலம் மாவட்டம் கெங்கைவல்லியில் மொத்தம் பதிவான 14 ல் 4 தள்ளுபடி செய்யப்பட்டது. ஆத்தூர் தொகுதியில் 16 ல் 3 தள்ளுபடி செய்யப்பட்டன.

வேதாரண்யம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் மனு தள்ளுபடி

நாகை: வேதாரண்யம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் சதாசிவம் மனு பரிசீலனையில் தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது சொத்துவிவரங்கள் முறையாக தாக்கல் செய்யப்படாததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மாற்று வேட்பாளரான சின்னதுரை மனு ஏற்கப்பட்டதால் அவர் பா.ம.க., வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகிறார்.

கூட்டணியை பிரிக்க சதி: விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: ""கூட்டணியை பிரிக்க சிலர் சதி செய்து வருகின்றனர். அதற்கு இடம் கொடுக்காமல், கூட்டணி கட்சி தொண்டர்கள் ஒன்று சேர்ந்து, வெற்றிக்கு பாடுபட வேண்டும்,'' என, திருத்தணியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறினார். திருத்தணி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் தே.மு.தி.க., வேட்பாளர் அருண் சுப்பிரமணியத்தை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், நான் அ.தி.மு.க., கூட்டணியில் சேரக்கூடாது என, பலர் எதிர்க்கட்சிகளிடம் 100 கோடி, 200 கோடி, 500 கோடி ரூபாய் பணம் வாங்கிவிட்டதாக வதந்தி பரப்பினர். மக்களிடம் கூட்டணி வைத்துள்ளேன். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. தமிழக மக்களுக்காக தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டு சேர்ந்தேன். இது எம்.ஜி.ஆர்., ஆரம்பித்த கட்சி என்பதால் தான் கூட்டணி வைக்க சம்மதித்தேன். கூட்டணி வைத்துள்ளதால் ஆட்சியில் பங்கோ, துணை முதல்வர் பதவியோ கேட்க மாட்டேன். ஏழைகளுக்கு தி.மு.க., ஆட்சியில் எந்தவித நன்மையும் செய்யவில்லை. விவசாயிகள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டும். தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று பேசினார்.

Sunday, March 27, 2011

தமிழக காங்கிரஸ் தேர்தல் பிரசாரம்-சோனியா, ராகுல் புறக்கணிப்பு

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய கட்சித் தலைவர் சோனியா காந்தியும், பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் வர மாட்டார்கள் என்று தெரிகிறது. வேட்பாளர் தேர்வின்போது தலைவிரித்தாடி கோஷ்டிப் பூசலால் இருவரும் மனம் ஒடிந்து போய் விட்டதால் இந்த முடிவாம்.


நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல தமிழக காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசலை மகாத்மா காந்தியே மறு பிறவி எடுத்து வந்தாலும் தீர்க்க முடியாது. அந்த அளவுக்கு கோஷ்டிப் பூசலில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளது காங்கிரஸ்.

இந்த கோஷ்டிப் பூசலைத் தீர்த்துக் காட்டுகிறேன் என்று சவால் விடுவது போல தமிழக காங்கிரஸ் விவகாரத்தை சமீப காலமாக பார்த்து வந்த ராகுல் காந்தியே வெறுத்துப் போகும் அளவுக்கு சமீபத்திய வேட்பாளர் தேர்வின்போது கோஷ்டி மோதல் உச்சத்தை எட்டி விட்டதாம்.

தங்கபாலு செய்த பெரும் குழப்பம் மற்றும் உள்ளடி வேலைகள், ஒவ்வொரு கோஷ்டியினரும் கொடுத்த நெருக்கடிகளால் ராகுல் காந்தியும், சோனியாவும் வெறுத்துப் போய் விட்டனராம்.

இதனால் வருகிற தேர்தலுக்கான பிரசாரத்திற்கு இருவரும் வர மாட்டார்கள் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பினரே.

திமுகவிடமிருந்து அதிக தொகுதிகளைப் பெறுவதில் அத்தனை கோஷ்டியினரும் காட்டிய ஒற்றுமையால் காங்கிரஸ் மேலிடம் உள்ளூர மகிழ்ச்சியுற்றது. அதனால்தான் திமுகவிடமிருந்து அதிக இடங்களைப் பெறுவதில் மேலிடமும் தீவிரம் காட்டியது. ஆனால் 63 சீட்களை வாங்கிய அடுத்த விநாடியே ஒவ்வொரு கோஷ்டியினரும் தனித் தனியாக பிரிந்து தத்தமது ஆதரவாளர்களுக்கு சீட் பிடிக்க காட்டிய மோதலும், உள்ளடி வேலைகளும் மேலிடத்தை அதிர வைத்து விட்டதாம்.

இதன் காரணமாகவே சோனியாவும், ராகுலும் இந்த முறை வர மாட்டார்கள் என்று தெரிகிறது. மேலும், திமுகவுடன் கடும் மோதலில் ஈடுபட்டு விட்ட நிலையில் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கு சோனியா காந்தி தயங்குகிறாராம். அதேபோல ராகுல் காந்தி தமிழகத்திற்கு வந்தபோதெல்லாம் முதல்வர் கருணாநிதியை சந்திக்கவில்லை. மரியாதை நிமித்தமாக கூட அவர் சந்திக்கவில்லை.

இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்காக மட்டும் பிரசாரம் செய்ய வந்தால் அது மிகப் பெரிய சந்தர்ப்பவாத செயலாக எதிர்க்கட்சிகளால் பிரசாரம் செய்யப்படும் என்பதால் அவரும் வர மாட்டார் என்கிறார்கள்.

அதை விட முக்கியமாக தன்னுடைய எதிர்பார்ப்புகளை தமிழக காங்கிரஸார் தவிடுபொடியாக்கி விட்டதும் ராகுலை வெறுப்படைய வைத்து விட்டதாம்.

எனவே திமுகவினரின் தயவை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்க வேண்டிய பெரும் இக்கட்டான நிலைக்கு தமிழக காங்கிரஸார் தள்ளப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா சொத்து விவரம்-கோடநாடு எஸ்டேட்டில் ரூ. 1 கோடி முதலீடு

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் சொத்து விவரம் தெரிய வந்துள்ளது. அவர் அடிக்கடி சென்று ஓய்வெடுக்கும் கோடநாடு எஸ்ட்டேடில் ரூ. 1 கோடி முதலீடு செய்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதாவின் சொத்து குறித்த முழு விவரம்:

- ரொக்கக் கையிருப்பு - ரூ. 25,000.

- பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டெபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டெபாசிட் மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பில்.

இவை அனைத்தும் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.

- பாண்டுகள், நிறுவனங்களில் பங்கு முதலீடு ரூ. 50,000. இவையும் கோர்ட் பொறுப்பில் உள்ளன.

- சொந்தமாக வைத்துள்ள வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 8.35 லட்சம்

- நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் விவரம்:

1. ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ் - ரூ. 8.5 கோடி.
2. சசி எண்டர்பிரைஸஸ் - ரூ. 75 லட்சம்.
3. கோட நாடு எஸ்டேட் - ரூ. 1 கோடி.
4. ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட் - ரூ. 65 லட்சம்.

நிறுவனங்களில் செய்துள்ள மொத்த முதலீட்டின் அளவு ரூ. 10.9 கோடி.

ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979.

அசையாச் சொத்துக்கள் விவரம்

வேளாண் நிலம்:

ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.168. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.

- செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.

- 79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கிய போது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.

- 8-3-1099 மற்றும் 8-3-1099ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கி தேதி: 11.02.1967. வாங்கி போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.

- ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கிய போது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.

- எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.

குடியிருப்பு கட்டடங்கள்:

- 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கிய போது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய். அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.

ஜெயலலிதாவிடம் கடன் நிலுவை எதுவும் இல்லை.

நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை.

மொத்தமாக, ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 51,40 ,67,979 ஆகும்.

print