Saturday, March 26, 2011

திமுக தேர்தல் அறிக்கை சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் : குஷ்பு!

மதுரை: திமுக தேர்தல் அறிக்கை சூப்பர், டூப்பர் ஹிட்டாகும் என மதுரையில் நடந்த பிரசார கூட்டத்தில் நடிகை குஷ்பு தெரிவித்தார். மதுரை மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் தளபதியை ஆதரித்து, நடிகை குஷ்பு நேற்று சுப்ரமணியபுரம், ஜீவா நகர், சோலை அழகபுரம் மெயின் ரோடு, பழங்காநத்தம், பைகாரா பகுதிகளில் வேனில் இருந்தவாறே பிரசாரம் செய்தார்.
அப்போது குஷ்பு பேசியதாவது: நான் சினிமாவில் மட்டும் கதாநாயகி. உண்மையான கதாநாயகி திமுகவின் தேர்தல் அறிக்கைதான். 2006ல் தோல்வியடைந்த ஜெயலலிதா, கொடநாட்டில் ஓய்வெடுக்க சென்று விட்டார். மக்களை பற்றி அவருக்கு கவலையில்லை. இன்ஸ்டன்ட் காபி, டீ போல அவ்வப்போது ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வந்தார்.

திமுகவின் தேர்தல் அறிக்கையை அப்படியே காப்பியடித்து விட்டார். சுயபுத்தி இல்லாமல் ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையை மக்கள் நம்ப மாட்டார்கள். மதுரைகாரர்களுக்கு பாசம் அதிகம். அதைவிட தில்லு அதிகம். யார் தப்பு செய்தாலும் குற்றம், குற்றமே என நெற்றிக்கண்ணை திறந்து காட்டி விடுவார்கள். எனது அரசியல் பிரவேசத்தில், முதல் கன்னி பேச்சை இங்கிருந்து தொடங்குகிறேன். உதயசூரியன் 6 கோடி மக்களின் இதய சின்னம். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் திமுக தந்த நல்ல திட்டங்களையும் பறித்து விடுவார். நீங்க நல்லாயிருக்கனும்னா திமுகவுக்கு ஓட்டளியுங்கள். மதுரை மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் திமுக அமோக வெற்றி பெறும். திமுக தேர்தல் அறிக்கை சூப்பர் டூப்பர் ஹிட்டாகும். திமுக தான் பெரிய கூட்டணி. அதிமுக வெறும் சீட்டணி தான். இவ்வாறு குஷ்பு பேசினார். மாணவிகளுக்கு பிளையிங் கிஸ்: பழங்காநத்தம் பகுதியில் குஷ்பு பிரசாரம் செய்த போது, அவ்வழியாக சென்ற பள்ளி மாணவிகளை பார்த்து பிளையிங் கிஸ் கொடுத்தார்.

No comments:

print