Saturday, March 26, 2011

வேட்பாளர்கள், ஏஜென்ட்கள் செல்போன் பயன்படுத்த தடை

சென்னை: வாக்குச்சாவடி மையங்களில் வேட்பாளர்கள், அவர்களின் ஏஜென்ட்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் பணியில் மாநிலம் முழுவதும் அரசு அலுவலர்கள் சுமார் 3 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு மாவட்ட தலைநகரங்களில் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின்போது வாக¢குச்சாவடியில் அலுவலர்கள் கடைபிடிக¢க வேண்டிய விவரங்கள் அனைத்தையும் தேர்தல் அதிகாரிகள் விளக்கியுள்ளனர். அலுவலர்கள் மற்றும் வாக்குசாவடிகளில் பாதுகாப்புக்காக நியமிக்கப்படும் போலீசார், ரேண்டம் (குலுக்கல்) முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த தொகுதிகளில் நியமிக்கப்பட உள்ளனர். இது குறித்து தேர்தல் உயர்
அதிகாரி ஒருவர் கூறியதாவது:

*வாக்குச்சாவடி பாதுகாப்பு பணியில் போலீசார் ரேண்டம் (குலுக்கல்) முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஈடுபடுத்தப்படுவர். அனைத்து அலுவலர்களும் இந்த முறையிலேயே நியமிக்கப்படுவார்கள்.
*வாக¢குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தற்காலிக கட்சி அலுவலகம் அமைக¢கப்பட்டுள்ளதா, அதில் ஒரு மேஜை, இரண்டு நாற்காலி போடுவதற்கும், மேற்கூரை தற்காலிகமாக *அமைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என அலுவலர்கள் கண்காணிக¢க வேண்டும்.
*வாக¢குப்பதிவு தொடங்கியவுடன் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை பதிவான வாக்குகள் விவரங்களை எஸ்.எம்.எஸ். மூலம் தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக¢க வேண்டும்.
*வாக¢குச்சாவடிக¢குள் செல்போன், வயர்லெஸ் கருவிகளை ஏஜென்ட்கள், வேட்பாளர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

No comments:

print