Sunday, March 27, 2011

தமிழகம் முழுவதும் 4,280 பேர் மனு தாக்கல்

சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், நேற்றுடன் முடிந்தது. தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளில் மொத்தம், 4,280 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைக்கு, ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல், கடந்த 19ம் தேதி துவங்கியது. முதல் நாளில், தமிழகத்தில், 51 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளில், 82 பேர், மூன்றாவது நாளில், 62 பேர், நான்காவது நாளில், 262 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

ஐந்தாவது நாளான, 24ம் தேதி, 1,052 பேரும், நேற்று முன்தினம் மட்டும், 892 பேரும் மனு தாக்கல் செய்தனர். 25ம் தேதி பிற்பகல் 3 மணி நிலவரப்படி, 2,401 பேர், மனு தாக்கல் செய்தனர். கடைசி (ஏழாவது) நாளான நேற்று, 1,879 பேர் மனுக்களை தாக்கல் செய்தனர்.குறிப்பாக, காங்கிரசில், "சீட்' கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தவர்கள், காங்., வேட்பாளர்களுக்கு போட்டியாக, பல தொகுதிகளில் சுயேச்சையாக மனுக்களை தாக்கல் செய்தனர்.மாநிலம் முழுவதும், மொத்தம், 4,280 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான பரிசீலனை, நாளை நடக்கிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற, 30ம் தேதி கடைசி நாள். இதன் பின், களத்தில் உள்ள இறுதி வேட்பாளர்கள் குறித்த விவரம் தெரியவரும்.

No comments:

print