Thursday, March 17, 2011

விஜயகாந்த் ஆபீசுக்கு இடதுசாரி தலைவர்கள் படையெடுப்பு

சென்‌னை : இன்று காலையில் மார்க்., கம்யூ., இந்திய கம்யூ., கட்சியின் மாநிலக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க.,வின் ஆணவப்போக்கிற்கு பாடம் கற்பிக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அ.தி.மு.,க கூட்டணியில் இடம்பெற்றிருக்கும், இந்திய கம்யூ., மாநில செயலர் தா.பாண்டியன், மார்க்., கம்யூ., ‌ஜி.ராமகிருஷ்ணன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணச்சாமி , மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் சேதுராமன், பார்வர்டுபிளாக் கட்சி தலைவர் கதிரவன் ஆகியோர் கூடி பேசினர். பின்னர் அனைத்து நிர்வாகிகளும் விஜயகாந்தை சந்திக்க புறப்பட்டு சென்றனர். இந்த தலைவர்கள் இணைந்து புதிய அணி துவக்குவது என்றும் இந்த அணிக்கு விஜயகாந்தை தலைமையேற்க செய்வதும் என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

No comments:

print