திருச்சி : அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனி விமானம் மூலம்  திருச்சி வந்தடைந்தார். சரியாக காலை 9.30 மணிக்கு திருச்சி  விமானநிலையத்தில் வந்திறங்கிய அவரை மாவட்ட மாநகர செயலர் மனோகரன், எம்.பி.,  குமார், அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் மலர் கொத்து  அளித்து வரவேற்பு அளித்தனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வழி நெடுகிலும்  திரண்டிருந்து ஜெயலலிதாவை உற்சாகமாக வரவேற்றனர்.  திருச்சி சங்கம்  ஓட்டலுக்குச் சென்றார். சரியாக காலை 11.15 மணிக்கு திருச்சி கலெக்டர்  அலுவலகத்தில் நில சீர்திருத்த உதவி இயக்குநர் குணசேகரன் முன்னிலையில்  வேட்புமனு தாக்கல் செய்கிறார். பின்னர் பத்திரிகையாளர்களை சந்திக்கிறார்.  அப்போது அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு பிரசாரத்தை துவக்குகிறார்.

 
 
No comments:
Post a Comment