Wednesday, March 16, 2011

கொ.மு.க., ‌போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

சென்னை : தி.மு.க., கூட்டணியில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் தி.மு.க., ‌தலைவர் கருணாநிதியும், கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமியும் கையெழுத்திட்டனர். இதன்படி சூலூர், பொள்ளாச்சி,பல்லடம், உடுமலை, பெருந்துறை,கோபி, நாமக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதன் பின்னர் பேசிய பெஸ்ட் ராமசாமி, வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார்.

மூ.மூ. தொகுதி : இதே போல் மூ.மு.க.,விற்கு சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தல் கருணாநிதியும் ஸ்ரீதர் வாண்டையாரும் கையெழுத்திட்டனர்.
பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் பெ.ம.க., தலைவர் என்.ஆர்.தனபாலன் போட்டியிடுகிறார்.

No comments:

print