கூட்டணி கட்சிகளுக்கு முழுமையாக தொகுதிகள் ஒதுக்காத நிலையில், அவசர அவசரமாக அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதால், கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதில் ஜெயலலிதாவுக்கு விருப்பம் இல்லை என்றும், சசிகலா குடும்பத்தினரின் விருப்பத்துக்கு ஏற்ப வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க, தி.மு.க.,வை விட, காங்கிரஸ் அச்சப்படும் வகையில், அ.தி.மு.க., - தே.மு.தி.க., இரு கம்யூ., - ம.தி.மு.க., கிருஷ்ணசாமி, சரத்குமார், தனியரசு, சேதுராமன் என கூட்டணி அமைந்தது. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், அவசர அவசரமாக, அ.தி.மு.க., போட்டியிடும், 160 தொகுதிகளுக்கான பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதில், பெரும்பாலான தொகுதிகள், வேட்பாளர் கேட்ட தொகுதியை தவிர்த்து, வேறு தொகுதியும், யாருக்கு செல்வாக்கு எந்த தொகுதியில் உள்ளதோ அதை விடுத்து, வேறு தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதையும் மீறி, கம்யூனிஸ்ட் கட்சிகளின், "சிட்டிங்' எம்.எல்.ஏ., தொகுதிகளான, நாகை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம், திண்டுக்கல் ஆகிய தொகுதிகளும், கம்யூனிஸ்ட்கள் விரும்பிக் கேட்ட இத்தொகுதிகளுடன், ஸ்ரீவில்லிபுத்தூர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம் போன்ற தொகுதிகளுக்கும், அ.தி.மு.க., தன் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. தே.மு.தி.க., கேட்ட பல தொகுதிகளுக்கும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்தமாக அ.தி.மு.க., பட்டியலை கவனித்தவர்கள், ஏதோ குளறுபடி நடந்துள்ளது என்று மட்டும் அறிந்து கொண்டனர்.
இது பற்றி விசாரித்த போது, கூட்டணி கட்சி தொகுதி தவிர, மற்ற இடங்களுக்கான பட்டியலை ஜெயலலிதா தயாரித்தார்; பல தொகுதி, வேட்பாளர் பெயர்களை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிவும் செய்துவிட்டார்; விருப்ப மனு தாக்கல், புகார்கள் அடிப்படையில் சில தொகுதிகளில் வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டாலும், இறுதிப் பட்டியலை ஜெயலலிதா தயாரித்து, திருப்தி அடைந்தார் என, தெரிந்தது. ஆனால், நேற்று முன்தினம் மாலை இப்பட்டியலை ஜெயலலிதா வெளியிடவில்லை; அவரது தோழி சசிகலா வெளியிட்டார். அப்பட்டியலில், சசிகலாவுக்கு வேண்டியவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
வெளியிடப்பட்ட 160 பேர் பட்டியலில், 70 முதல் 75 தொகுதிகள், சசிகலாவுக்கு சாதகமானவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. இதை நேற்று முன்தினம் மாலை, பட்டியல் அறிவிக்கப்படும் முன், கவனித்த ஜெ., பலரது பெயர், தொகுதி மாறியிருப்பது குறித்து அதிர்ச்சி அடைந்தார். மிகக் கோபமாக இது பற்றி ஜெ., கேட்டபோது, ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் தெரிவித்து, பட்டியலை மாற்ற இயலாதபடி, சசிகலா மற்றும் அவருடன் இருந்தவர்கள் பிடிவாதம் பிடித்தனர். ஒரு கட்டத்தில், "எப்படியும் செய்யுங்கள்' என, பட்டியலை தூக்கி வீசிவிட்டு ஜெயலலிதா தன் அறைக்கு சென்றுவிட்டார். அதைத் தொடர்ந்து, தன் உதவியாளர் தவிர அவர், யாரையும் சந்திக்கவில்லை. கூட்டணி கட்சியினரின் அழைப்பு வந்த போது கூட, "இப்போதைக்கு பேச வாய்ப்பில்லை' எனக் கூறி ஜெயலலிதா தவிர்த்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள பட்டியல், சசிகலாவின் குழுமத்தினரை பலப்படுத்தும் வகையிலும், அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தும் வகையிலும் இருப்பதாக, அ.தி.மு.க.,வினரே கருதுகின்றனர். பட்டியலும், தொகுதியும் மாற்றப்பட வேண்டுமென எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, கூட்டணி கட்சியினரிடையே ஏற்பட்ட அதிருப்தியும், நேற்று மதியம் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதனால், கூட்டணியை திருப்திபடுத்தும் விதத்தில், தொகுதிப் பங்கீடு பற்றி ஜெயலலிதா விரைவில் முடிவு அறிவிப்பார் என, அ.தி.மு.க., பிரமுகர்கள் தெரிவித்தனர்.
அ.தி.மு.க.,வை ஆட்டி வைக்கும் "நவக்கிரகம்': அ.தி.மு.க.,வில், நவக்கிரகம் என அழைக்கப்படும் ஒன்பது பேர் நினைத்தால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கின்றனர் அ.தி.மு.க.,வினர்.
அவர்கள் கூறியதாவது: நேற்று முன்தினம் வெளியான அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியலில், இந்த நவக்கிரக மூர்த்திகளின் திருவிளையாடல் தான் உச்சகட்டமாக பேசப்படுகிறது. அதாவது, அ.தி.மு.க., பொதுச் செயலர் முடிவு செய்த வேட்பாளர்களில், 70 பேர் வரை நவக்கிரக மூர்த்திகளால் மாற்றப்பட்டுள்ளனர். நவக்கிரக மூர்த்திகள், தங்களுக்கு வேண்டியவர்கள், பணம் கொடுத்தவர்கள் என, பலரை பட்டியலில் இடம் பெற செய்துள்ளனர். அவர்கள் இருக்கும் வரை, உண்மையான தொண்டனுக்கு சீட் கிடைப்பது அரிது தான். அவர்களின் அவசர முடிவால் தான், கூட்டணியில் உச்சகட்ட குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். தற்போது கூட்டணி குழப்பதால், அ.தி.மு.க., வேட்பாளர்கள் பலரும் கலக்கமடைந்துள்ளனர். அவர்கள் கூறியதாவது: சாதுர்யமாக அ.தி.மு.க., அமைத்த கூட்டணி, ஆட்சியை கைப்பற்றும் வகையில் அமைந்தது.ஆனால், இடையில் ஏதோ நடந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்ற ஒரே நோக்கத்துடன் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்றே திட்டமிட்டு, அ.தி.மு.க.,வில் சம்பவங்கள் நடக்கின்றன. கூட்டணி கட்சிகளுடன் பேச பெயரளவில் தான் குழு நியமிக்கப்பட்டது. உண்மையில் வேறு சிலர் தான், கூட்டணி கட்சிகளுடன் பேசினர். அவர்களும், கூட்டணி கட்சிகளிடம் ஒரு தகவலும், அ.தி.மு.க., மேலிடத்தில் ஒரு தகவலும் சொல்லி குழப்பியுள்ளனர். இது தொடர்ந்தால், அ.தி.மு.க., அணியில் எந்த கட்சியும் இருக்காது. 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். தி.மு.க., அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடக்கும் இந்த சதியை, அ.தி.மு.க., தலைமை புரிந்து கொள்ள வேண்டும், என்றனர்.
ஜெ., தேர்தல் பிரசாரம் திடீர் ஒத்திவைப்பு: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து அ.தி.மு.க., தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அ.தி. மு.க., கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் முடிவடையவில்லை. இதனால், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, இன்று துவங்குவதாக இருந்த தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள் ளது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment