சென்னை: நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சட்டப்பேரவை தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதற்கான விருப்ப மனு தாக்கல் கடந்த சில நாட்கள் நடைபெற்றது. முதல் கட்டமாக 14 தொகுதிகளுக்கு வேட்பாளர் இன்று அறிவிக்கப்ட்டுள்ளது.எங்கள் கட்சி நிர்வாகி ஒருவரை அதிமுகவில் இருந்து இளமதி என்ற பெயரில் ஒருவர் தொடர்புகொண்டு Ôநாங்கள் ஆட்சிக்கு வந்தால் உங்களை நசுக்கி விடுவோம்Õ என மிரட்டி வருகிறார். இந்த மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களால் காந¢தியாகவும் இருக்க முடியும். சந்திரபோஸ் போல¢ பொங்கி எழவும் முடியும்.பிரசாரத்தின்போது, Ôதயவு செய்து அதிமுகவுக்கு ஓட்டு போடாதீர்கள்Õ என மக்களிடம் கேட்டுக்கொள்வேன். ஜெயலலிதா மீது எனக்கு மதிப்பு உண்டு. ஆனால் அவருடன் இருக்கும் நபர்கள் சரியில்லை. போயஸ் கார்டனுக்கு நான் ஒரு பெயர் வைத்து உள்ளேன். அதன் பெயர் அயர்ன் கர்ட்டன் (இரும்புத் திரை). எங்கள் கட்சி தொண்டர்கள், நம் கட்சியினர் நிற்காத தொகுதியில் யாரை ஆதரிப்பது என கேட்கிறார்கள்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஓரிரு நாளில் அறிவிப்பேன். ஆனால் நிச்சயமாக அதிமுகவுக்கு எங்கள் ஆதரவு கிடையாது.தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளுடன் சிறு குளறுபடிகள் இருந்தாலும் அனைத்து கட்சிகளையும் மதித்து அவர்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்தார் கருணாநிதி. இந்த விஷயத்தில் கருணாநிதியை மதிக்க வேண்டும். இவ்வாறு கார்த்திக் கூறினார். நாடாளும் மக்கள் கட்சி போட்டியிடும் 14 தொகுதிகள், வேட்பாளர்கள் விவரம்: சங்கரன்கோவில்- சுப்புலட்சுமி. திருப்பரங்குன்றம் - சாந்திபூஷன். நாங்குநேரி- சண்முகசுந்தரம். ராதாபுரம்- மரகதவல்லி. அம்பாசமுத்திரம்-குவைத் எம்.குமார். ஸ்ரீவைகுண்டம்- எம்.எஸ்.ராஜா. கடையநல்லூர்- பாலசுப்பிரமணியன். தென்காசி- பரமசிவம். வாசுதேவநல்லூர்- பிச்சைக்கனி. ஒட்டபிடாரம்- சங்கர். சாத்தூர்- வைரமுத்து. ராஜபாளையம்- சூரிய மகராசா. விருதுநகர்- செந்தாமரை பாண்டியன். ஸ்ரீவில்லிபுத்தூர்- சுப்பிரமணியன்.
No comments:
Post a Comment