Tuesday, March 15, 2011

ம.தி.மு.க.,வுக்கு 23 தொகுதிகள் : நாஞ்சில் சம்பத் நம்பிக்கை

கரூர் : ""அ.தி.மு.க., கூட்டணியை விட்டு வெளியேறும் திட்டமில்லை,'' என்று, ம.தி.மு.க., கொள்கை விளக்க அணி செயலர் நாஞ்சில் சம்பத் கூறினார்.கரூர் மாவட்ட ம.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த தேர்தல் நிதியளிப்பு நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கை விளக்க அணி செயலர் நாஞ்சில் சம்பத் பங்கேற்றார்.அப்போது, நாஞ்சில் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அரசியல் நிலைமை ம.தி.மு.க.,வுக்கு சாதகமாக உள்ளது. தேர்தலில் போட்டியிட தொகுதி பிரச்னை சுமுகமாக முடியும். அ.தி.மு.க., கூட்டணியில் நீடிப்பது உறுதி; கூட்டணியை விட்டு வெளியேறும் திட்டமில்லை; மூன்றாவது அணியும் ஏற்படாது. ம.தி.மு.க.,வுக்கு குறைந்தபட்சம், 23 தொகுதியாவது ஒதுக்க அ.தி.மு.க., தலைமையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தராவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.தேர்தல் கமிஷன் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை. தி.மு.க., தரப்பில் மூன்று கட்டமாக தொகுதியில் நிதியளிக்கப்பட்டுள்ளது. இது தடுக்கப்படவில்லை. அதே சமயம், என்னுடைய கார் மட்டும் இதுவரை ஐந்து முறை சோதனை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு நாஞ்சில் சம்பத் கூறினார்.

No comments:

print