Wednesday, March 9, 2011

வாக்காளர்களுக்கு பணம்: மாறு வேடத்தில் அதிகாரிகள்

தூத்துக்குடி: அரசியல்கட்சியினர் வாக்காளர்களுக்கு ஓட்டிற்காக பணம் கொடுப்பதை கண்காணித்து தடுக்க, அதிகாரிகள் மாறுவேடத்தில் சுற்றிவருகின்றனர். தமிழக சட்டசபை இடைத்தேர்தல்களில் கட்சியினர், வாக்காளர்களை "பணமழை'யில் நனைய வைத்தனர். இதே நிலை, பொதுத்தேர்தலில் தொடரக்கூடாது என்பதில் தேர்தல் கமிஷன் கண்ணும் கருத்துமாக உள்ளது. இதற்காக அரசியல்கட்சியினர் வாக்காளர்களுக்கு ஓட்டிற்காக பணம் மற்றும் அன்பளிப்புகள் கொடுப்பதை கண்காணித்து தடுக்க, ஒரு தொகுதிக்கு சராசரியாக ஏழு பேர் கொண்ட அதிகாரிகளை தேர்தல் கமிஷன் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. அவர்கள் சாதாரண உடையிலும், மாறுவேடத்திலும் பொதுமக்களுடன் கலந்து பணவிநியோகம் குறித்து கண்காணித்துவருகின்றனர்.

No comments:

print