Wednesday, March 16, 2011

தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் முடிவு : சுதீஸ்

சென்னை : அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தே.மு.தி.க.,வுக்கு எந்தந்த தொகுதிகள் ஒதுக்குவது குறித்து அ.தி.மு.க., அலுவலகத்தில் ‌இரு கட்சியினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் அ.தி.மு.க, தரப்பில் செங்கோட்டையன், பன்னீர் செல்வம், பொள்ளாச்சி ஜெயராமனும், தே.மு.தி.க., சார்பில் எல்.கே.சுதிஸ் உள்ளிட்ட 2 பேர் குழுவும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் பேசிய தே‌.மு.தி.க.,வின் எல் கே சுதீஸ், தே.மு.தி.க., போட்டியிடும் தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டன. அ.தி.மு.க., இறுதி செய்த தொகுதிகளை விரைவில் கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார் என கூறினார்.

No comments:

print