சட்டசபை தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்பிய மனுதாரர்களிடம் கட்சிகள் நடத்திய நேர்காணலில், தேர்தல் செலவு குறித்தே பிரதானமாக கேள்வி கேட்டிருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கட்சி அலுவலகங்களில் நடந்த நேர்காணலில் பங்கேற்பதற்காக, கரைவேட்டிகளுடன் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர். மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, அதில் தொகுதிகளாக வரிசைப்படுத்தி, அந்த தொகுதிகளில் இருந்து தனி நபராகவும், சிறு குழுக்களாகவும் நேர்காணலுக்காக அழைக்கப்பட்டனர்.அவர்களிடம் நேர்காணலை நடத்தும் கட்சியின் தலைவர் உள்ளிட்ட கட்சியின் பொறுப்பாளர்கள், தகுதி குறித்து கேள்வி கேட்பதே வழக்கம். ஆனால், தற்போது நடந்துள்ள நேர்காணலில், தொகுதியில் கட்சியின் செல்வாக்கு, கட்சியின் பலம், குறிப்பிட்ட சமுதாய மக்களின் ஓட்டு வங்கிகள் உள்ளிட்ட விஷயங்களை அனைவரிடமும், "பார்மாலிட்டி'க்காக கேட்டுள்ளனர்
சொல்லி வைத்தது போன்று, அனைத்து கட்சி தலைவர்களும் மறக்காமல் கேட்ட ஒரே கேள்வி, "தேர்தலுக்காக எவ்வளவு செலவு செய்ய தயாராக இருக்கிறீர்கள்?' என்பது தான்!தேர்தல் செலவாக வேட்பாளருக்கு, 15 லட்சம் ரூபாய் தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள நிலையில், அந்த தொகையை செலவு செய்ய முடியுமா எனக் கேட்காமல், "எப்படி இவர்கள் எவ்வளவு செலவு செய்வீர்கள்?' என கேட்கிறார்கள் என்பது தான், தற்போதைய சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வி.
இந்நிலையில், குறைந்தபட்சம், 25 லட்சம் முதல், 10 கோடி ரூபாய் வரை செலவு செய்யத் தயார் என மனுதாரர்கள் பதில் அளித்திருப்பது அடுத்தக்கட்ட அதிர்ச்சி. மனுதாரர் ஒருவர் கட்சிக்காகவும், தொகுதிக்காகவும் கோடி கணக்கில் செலவு செய்யத் தயாராக இருக்கிறார் என்றால், வெற்றி பெற்ற பின், அதை பல மடங்காக சம்பாதித்து விட முடியும் என்ற நம்பிக்கை தானே அடிப்படை காரணம்.
ஏற்கனவே கட்சியில் செல்வாக்கு பெற்றவர்களுக்கும், மாவட்ட செயலர்கள் சிபாரிசு செய்பவர்களுக்கும், கட்சிகளில் சீட்கள் ஒதுக்கப்படுவது உறுதியாகிய நிலையில், இந்த நேர்காணல், மனுதாரர்களுக்கு தொகுதிகளை அளிப்பதற்காக கட்சித் தலைவர்கள் பேரம் பேசும் நிலையாக இருந்தது.தேர்தல் செலவை மூலதனமாக்கி, எதிர்காலங்களில் எந்த வழியில் வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளுங்கள் என்ற கோணத்தில் நடத்தப்படும் இது போன்ற நேர்காணல் முற்றிலும் கோணல்.

No comments:
Post a Comment