Tuesday, March 8, 2011

சோனியாவுடன் அழகிரி சந்திப்பு

புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியாவை, மத்திய அமைச்சர் அழகிரி நேற்று இரவு சந்தித்து பேசினார். தி.மு.க.,வுக்கும் காங்கிரசுக்கும் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாட்டால், மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக, முதல்வர் கருணாநிதி தலைமையில், இரண்டு நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்திய அமைச்சர்களும், எம்.பி.,க்களும் காங்கிரஸ் மேலிட தலைவர்கள் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோரை நேற்று சந்தித்து பேசினர். மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி அவர்கள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் அழகிரி உள்ளிட்டோர் சோனியாவை நேற்று இரவு சந்தித்து பேசினர். இருப்பினும், சோனியாவிடம் அவர்கள் என்ன பேசினர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இதையொட்டி, காங்கிரஸ், தி.மு.க., கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று உடன்பாடு ஏற்படும் என தெரிகிறது.

No comments:

print