ஒரு எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எவ்வளவு ஓட்டு பதிவு செய்யலாம்?
அதிகப்பட்சமாக 3,840 ஓட்டுகளை பதிவு செய்ய முடியும். 1,500 பேருக்கு ஒரு ஓட்டுச்சாவடி மையம் அமைக்கப்படுகிறது. எனவே, இதைவிட அதிகமானவர்கள் வந்தாலும் இங்கு ஓட்டுப்பதிவு செய்ய முடியும்.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் அதிகப்பட்சமாக எவ்வளவு சின்னங்கள் இடம் பெற முடியும்?
ஒரு நேரத்தில், ஒரு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னங்கள் இடம் பெற முடியும். அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் இருந்தால், அடுத்தடுத்து மூன்று இயந்திரங்கள் வரை இணைக்கப்படும். இதன் மூலம், அதிகப்பட்சமாக 64 வேட்பாளர்கள் வரை போட்டியிடலாம்.
ஒரு தொகுதியில் 64க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் இடம் பெற்றிருந்தால் அங்கு எப்படி தேர்தல் நடத்தப்படும்?
இதுபோன்ற சூசூழ்நிலையில் எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. இதற்கு முன் செய்யப்பட்டது போல ஓட்டுச்சீட்டு, ஓட்டுப்பெட்டி முறை தான் அமல்படுத்தப்படும். ஓட்டு இயந்திரத்தில் நம்பிக்கையில்லாத சில கட்சிகள், அத்தகைய முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக, அரசல் புரசலாக பேசப்படுகிறது.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் செயலிழக்கும் போது எப்படி மாற்று ஏற்பாடு செய்யப்படும்?
ஒரு தேர்தல் அதிகாரிக்கு, 10 ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்கும் பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கும். இதற்காக, கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அளிக்கப்பட்டிருக்கும். ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் செயலிழக்கும் போது, மாற்று இயந்திரம் பயன்படுத்தப்படும்.
செயலிழந்த ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், அதற்கு முன்பு வரை பதிவு செய்யப்பட்ட ஓட்டுகளின் எண்ணிக்கை, அதன் கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள நினைவுப் பகுதியில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும். இதனால், மீண்டும் அங்கு முதலில் இருந்து ஓட்டுப்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தால் அப்படி என்ன தான் நன்மை?
பல கோடி ஓட்டுச்சீட்டு அச்சடித்தல் தவிர்க்கப்படுவது மிக முக்கியமான நன்மை. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஒட்டுவதற்கு, ஒரே ஒரு ஓட்டுச்சீட்டு மட்டும் இருந்தால் போதும்.
இதனால் ஏராளமான காகிதம் வாங்குவது, அச்சடிப்பது, போக்குவரத்து செலவு, அவற்றை ஓர் இடத்தில் வைப்பது மற்றும் வினியோகிப்பது போன்ற பணிகள் தவிர்க்கப்பட்டு, பெருமளவு பணம் சேமிக்கப்படுகிறது. ஓட்டு எண்ணுவது மிக எளிதாக இருக்கும். முன்பெல்லாம், முடிவு தெரிவதற்கு இரண்டு, மூன்று நாள் ஆகும். இப்போது, ஓட்டு எண்ணிக்கை துவங்கும் தினத்தின் பகல் 12 மணிக்குள் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பழைய முறையில், செல்லாத ஓட்டுகள் அதிகளவு இருந்தன. பல தொகுதிகளில், இரண்டாவது வந்தவரை விட, வெற்றி பெற்றவர் ஒரு சில ஓட்டுகள் தான் அதிகம் வாங்கி இருப்பார். ஆனால், செல்லாத ஓட்டு அதிகமாக பதிவாகி இருக்கும். அதனால் சர்ச்சை எழும். எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு முறையில், செல்லாத ஓட்டு என்பதே கிடையாது.
ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள பட்டனை மீண்டும் மீண்டும் அழுத்துவதன் மூலம், ஒன்றுக்கும் மேற்பட்ட ஓட்டுகளை பதிவு செய்ய முடியுமா?
முடியாது. ஓட்டுப் பதிவு செய்யும் போது, ஒரு குறிப்பிட்ட பட்டனை அழுத்தினால், அந்த பட்டனுக்கு உரிய வேட்பாளருக்கு ஓட்டு பதிவாகிய பின், அந்த இயந்திரம் தானாகவே பூட்டிக்கொண்டு விடும். அதன்பின் எத்தனை முறை பட்டன்களை அழுத்தினாலும் ஓட்டு பதிவாகாது. ஒருவருக்கு ஒரு ஓட்டு என்பது, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உறுதி செய்யப்படுகிறது. "ஒரு ஓட்டு போட்டால் 100 ஓட்டு போட்ட மாதிரி' என்கிற, "பிசினஸ்' எல்லாம் கிடையாது.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் ஒழுங்காக வேலை செய்கிறதா, ஓட்டு பதிவாகி விட்டதா என்பதை எப்படி உறுதி செய்து கொள்ள முடியும்?
யாருக்கு ஓட்டளிக்க வேண்டுமோ அவரது சின்னம் உள்ள இடத்தின் இடதுபுறம், ஒரு சிறிய பல்ப் இருக்கும். ஓட்டளிப்பவர் நீல நிற பட்டனை அழுத்திய உடன், சிறிய பல்ப் சிவப்பு நிறத்தில் எரியும். அதன் தொடர்ச்சியாக, "பீப்' சத்தம் கேட்கும். பல்ப் எரிவது மற்றும், "பீப்' சத்தம் மூலம், ஓட்டளிப்பவர், தனது ஓட்டுப் பதிவு செய்யப்பட்டதை தெரிந்து கொள்ளலாம்.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் "சீல்' வைக்கப்பட்டு, எண்ணிக்கையின் போது தான், "சீல்' திறக்கப்படுகிறது. அப்புறம், பதிவு செய்யப்பட்ட மொத்த ஓட்டு எவ்வளவு என, ஓட்டுப்பதிவு நடந்த அன்றே எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், "ரிசல்ட் பட்டன்' மட்டும் இல்லாமல் கூடுதலாக, "டோட்டல்' பட்டனும் உள்ளது. அந்த பட்டனை அழுத்தினால், பதிவு செய்யப்பட்ட மொத்த ஓட்டு குறித்து அப்போதே அறிந்து கொள்ளலாம்.
ஒரு தொகுதியில் 10 வேட்பாளர்கள் மட்டுமே நின்றால், ஓட்டுப் போடும் இயந்திரத்தில் 11 முதல் 16 வரை உள்ள பட்டன்களை ஓட்டளிப்பவர் அழுத்தினால், அவரது ஓட்டு வீணாக வாய்ப்பு உள்ளதா?
இல்லை. போட்டியிடும் வேட்பாளர் எண்ணிக்கை தவிர்த்து, மற்ற இடங்களில் மின் இணைப்பு இல்லாமல் விடப்பட்டிருக்கும். அந்த பட்டன்களை அழுத்தி ஓட்டுப் போட முடியாதபடி, முன்னதாகவே மூடப்பட்டிருக்கும். அதையும் மீறி அந்த பட்டன்களை அழுத்தினாலும் ஓட்டுப் பதிவாகாது.
ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும் போது, ஓட்டுச் சீட்டு கேட்டால் கொடுக்க ஏதாவது முன்னேற்பாடு வசதி செய்யப்பட்டுள்ளதா?
ஓட்டுச் சீட்டு கேட்கப்பட்டால் கொடுக்கும் வசதி உள்ளது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் தான் அதை ஓட்டளிப்பவர் பயன்படுத்த முடியும். ஓட்டுச்சீட்டுடன், அம்புக்குறி வைக்க தேவைப்படும், ரப்பர் ஸ்டாம்பும் கொடுக்கப்படும்.
ஓட்டுச்சீட்டில் முத்திரை குத்திய உடன் அதை வைப்பதற்கு ஒரு, "சிறப்பு கவர்' அளிக்கப்படும். அதில், முத்திரை குத்தப்பட்ட ஓட்டுச்சீட்டை வைத்து அதிகாரியின் முன்னிலையில் அந்த சிறப்பு கவர் "சீல்' வைக்கப்படும்.
ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் எந்த ஓட்டும் பதிவு செய்யப்படவில்லை என, பூத் ஏஜன்டுகளுக்கு எப்படி தெரியும்?
ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன், தேர்தல் அதிகாரி, எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஏற்கனவே எந்த ஓட்டும் பதிவாகவில்லை என்பதை, பூத் ஏஜன்டுகள் முன்னிலையில், "ரிசல்ட்' பட்டனை அழுத்தி காண்பிப்பார்.
பின்பு, "போலீங்' ஏஜன்டுகள் முன்னிலையில், போலி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு, ஓட்டுகள் பதிவு செய்து, அந்த ஓட்டுகளை எண்ணி, முடிவுகளை பார்த்து "போலீங்' ஏஜன்டுகள் திருப்தி அடைந்த பின், அதிகாரி, "கிளியரிங்' பட்டனை அழுத்தி, போலி தேர்தல் முடிவை அழித்து விடுவார். பிறகே, உண்மையான தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கும்.
ஓட்டுப்பதிவு முடிந்த பின்பும், ஓட்டு எண்ணிக்கை துவங்குவதற்கு முன்பும் உள்ள காலத்தில், விதியை மீறி ஓட்டுப் பதிவு செய்ய வாய்ப்பு உள்ளதா?
கடைசி நபர் ஓட்டளித்த பின், அங்கு பொறுப்பில் உள்ள அதிகாரி, ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் கட்டுப்பாட்டு பிரிவில் உள்ள, "குளோஸ்' பட்டனை அழுத்துவார். அதன்பின், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஓட்டளிக்க அனுமதிக்கப்படாது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள கட்டுப்பாட்டு பிரிவில் இருந்து, ஓட்டுப்பதிவு பிரிவின் தொடர்பு நீக்கப்பட்டு, தனியாக வைக்கப்படும். ஓட்டுப்பதிவு பிரிவில் உள்ள ஓட்டுகள் எல்லாம் பதிவு செய்யப்படும். எவ்வளவு ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன என்ற விவரம், "போலிங்' ஏஜன்டுகளுக்கு, "பிரிசிடிங்' அதிகாரி தெரிவிப்பார். அந்த எண்ணிக்கையிலும், ஓட்டு எண்ணும் போது மொத்த ஓட்டுகளின் எண்ணிக்கையிலும் ஏதாவது வேறுபாடுகள் உள்ளதா என்று, "போலிங்' ஏஜன்டுகள் ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம்.
எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், "புரோகிராம்' செய்வதன் மூலம், யாருக்கு ஓட்டு போட்டாலும், குறிப்பிட்ட கட்சிக்கே மொத்த ஓட்டும் விழும்படியாக மாற்ற முடியும் என புகார் எழுந்ததே?
ஓட்டுப்பதிவு இயந்திரம், வரும்போதே, "சீல்' வைக்கப்பட்டு கொண்டு வரப்படும். இதனால் ஓட்டுப்பதிவு இயந்திரத்தை திறந்து பார்க்கவோ, அதில், "புரோகிராம்' மாற்றி எழுதவோ இயலாது. இதில், குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாகவோ அல்லது குறிப்பிட்ட கட்சிக்கு பாதகமாகவோ, "புரோகிராம்' எழுதுவதற்கு முற்றிலும் வாய்ப்பு இல்லை. அகர வரிசைப்படி வேட்பாளர்கள் பெயர் இருக்கும் என்பதால், தொகுதிக்கு தொகுதி, கட்சியின் வரிசை மாறுபடும். எந்த இயந்திரம் எந்த தொகுதிக்கு அனுப்பப்படும் என்பது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். எனவே, ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக, "புரோகிராம்' செய்வதெல்லாம் ஆகாத காரியம்.

No comments:
Post a Comment