சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து உ.பி., முதல்வர் மாயாவதி பிரசாரம் செய்ய உள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. தேர்தலில் போட்டியிடும் 51 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலை வெளியிட்டு பேசிய பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயலாளர் சுரேஷ் மானே, கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவரும், உ.பி., முதல்வருமான மாயாவதி பிரசாரம் செய்வார். இதற்கான தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மாநிலத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,விற்கு மாற்றாக பகுஜன் சமாஜ் கட்சி திகழும் என்று கூறினார்.
No comments:
Post a Comment