Tuesday, March 15, 2011

காங்., போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் அறிவிப்பு : சென்னை- நெல்லையில் கூடுதல் இடம் கிடைத்தது

சென்னை: தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. வரும் ஏப்ரல் மாதம் நடக்கவிருக்கும் 13 ம் தேதி தமிழக சட்டசபை தேர்தலுக்கான மனுத்தாக்கல் வரும் வரும் 19 ம் தேதி துவங்குகிறது. தமிழக தேர்தலை பொறுத்த மட்டில் தி.மு.க., அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி அடிப்படையில் இருமுனை போட்டிகள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் - தி.மு,.க., கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதில் போட்டியிடும் தொகுதிகள் எவை என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 5 தொகுதிகளும், திருநெல்வேலியில் 4 தொகுதிகளும் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

No comments:

print