சென்னை: "மக்களிடம் ஓட்டு மட்டுமின்றி தேர்தல் செலவிற்கு பணத்தையும் சேர்த்து வாங்க வேண்டும்'' என பா.ஜ., தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ள பா.ஜ., சார்பில் இதுவரை 130 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர்களுக்கான அறிமுக கூட்டம் மற்றும் தேர்தல் கமிஷன் விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான அறிவுரை கூட்டம் அக்கட்சி சார்பில் சென்னை விருகம்பாக்கத்தில் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்று தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பா.ஜ.,விடம் பணம் இல்லையே எப்படி தனித்து போட்டியிடுவீர்கள் என்ற பலரும் கேட்கின்றனர். எங்களிடமும் பணம் இருக்கிறது என்றால், கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருக்கிறதா என்று கிண்டல் அடிக்கின்றனர். எங்களுக்கான பணம் மக்களிடத்தில் இருக்கிறது. கடந்த 44 ஆண்டுகளாக உள்ள இருண்ட ஆட்சிகளில் இருந்து தமிழகத்தை காக்கவேண்டிய சூழ்நிலை மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், பா.ஜ.,விற்கான செலவை மக்களே ஏற்றுக்கொள்வார்கள். பா.ஜ., வேட்பாளர் ஒருவர், 2,500 வாக்காளர்களை சந்தித்து ஒவ்வொருவரிடமும் ஒரு ரூபாய் வசூல் செய்து இன்று 2,500 ரூபாயை கட்சி தலைமையிடம் தேர்தல் நிதியாக கொடுத்து இருக்கிறார். அதேபோல பா.ஜ., வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய செல்லும்போது, ஓட்டு மட்டுமின்றி தேர்தல் செலவிற்கு பணத்தையும் சேர்த்து வாங்க வேண்டும். தி.மு.க.,வினர் இப்போதே இரண்டாம் ரவுண்டு பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை போல இங்கும் தேர்தல் நடக்க தேர்தல் கமிஷன் அனுமதித்துவிடக்கூடாது. தற்போது 130 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு அல்லது மூன்று நாட்களில் மீதமுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர். இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.
பா.ஜ., தமிழக தேர்தல் பொறுப்பாளர் பங்காரு லட்சுமணன் பேசியதாவது: மத்திய அரசும், தி.மு.க., அரசும் ஆட்சி செய்வதில் பெரும் தோல்வியை சந்தித்துள்ளன. கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நாள்தோறும் ஒரு ஊழல் பிரச்னை வெடிக்கிறது. பண பலத்தை வைத்துக்கொண்டு வெற்றிப்பெறலாம் என தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி நினைக்கிறது. பண வீக்கம், விலைவாசி உயர்வு மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் மக்களிடம் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. பணம் கொடுக்காததாலும், இருண்ட ஆட்சிகளை ஒழிப்பதற்காக மக்கள் சபதம் எடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment