Thursday, March 17, 2011

திருவாரூரில் கருணாநிதி போட்டி: தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இன்று வெளியிட்டார். இதன்படி, முதல்வர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். துணை முதல்வர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், வில்லிவாக்கம் தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன், எழும்பூர் பரிதி இளம்வழுதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

பல்லாவரம்: அன்பரசன்
காட்பாடி: துரைமுருகன்
ராணிபேட்டை: காந்தி
திருப்பத்தூர்: ராஜேந்திரன்
விழுப்புரம்: பொன்முடி
திருக்கோவிலூர்: தங்கம்
குறிஞ்சிப்பாடி: பன்னீர்செல்வம்
அருப்புக்கோட்டை: கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன்
தென்காசி: கருப்பசாமி
ஆலங்குளம்: பூங்கோதை
திருச்சுழி: தங்கம் தென்னரசு
பாளையங்கோட்டை: மைதீன்கான்
திருச்செந்தூர்: அனிதா ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி: சுரேஷ் ராஜன்

தஞ்சாவூர்: உயதுல்லா
விராலிமலை: ரகுபதி
கோவை தெற்கு: பொங்கலூர் பழனிச்சாமி
மதுரை மத்தி: கவுஸ் பாட்சா
ஒட்டன்சத்திரம்: சக்ரபாணி
மானாமதுரை: தமிழரசி
அம்பாசமுத்திரம்: ஆவுடையப்பன்

கிணத்துக்கடவு: கண்ணப்பன்
அந்தியூர்: என்.கே.கே.பி. ராஜா
பெரியகுளம்: பி. அன்பழகன்
கம்பம்: ராமகிருஷ்ணன்
தூத்துக்குடி: கீதா ஜீவன்

வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் பட்டதாரிகள் 70 பேரும், முதுகலை பட்டதாரிகள் 27 பேரும், வக்கீல்கள் 24 பேரும், டாக்டர்கள் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர். வேட்பாளர்கள் பட்டியலில் 11 பேர் பெண்களாவர். அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை எதிர்த்து தி.மு.க., சார்பில் ஆனந்த் என்பவர் போட்டியிடுகிறார்.

No comments:

print