காரைக்குடி:ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சியினர் பற்றி தகவல் தெரிவிப்பவர் பற்றிய விபரம் பாதுகாக்கப்படும்,'' என, டி.ஆர்.ஓ., வேம்புலிங்கம் பேசினார்.
காரைக்குடி சட்டசபை தொகுதி மண்டல அலுவலர்கள் அறிமுக கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். உதவி தேர்தல் அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.டி.ஆர்.ஓ., பேசியது: காரைக்குடி தொகுதி 26 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள், துணை மண்டல அலுவலர்கள், ஓட்டுச்சாவடி பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமுறைகளை புரிந்து பணியாற்ற வேண்டும். வி.ஏ.ஓ., பங்கு மிக முக்கியமானது. ஓட்டுக்காக பணம், பொருட்கள் வழங்கினால், தேர்தல் அலுவலரிடம் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். இத்தகவல் ரகசியமாக வைக்கப்படும், என்றார்.
உதவி தேர்தல் அதிகாரி செந்தில்நாதன், தாசில்தார் விஜயராணி, உதவியாளர் சிவராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment