Thursday, March 10, 2011
ரேஷன் கார்டு பெறவிண்ணப்பிக்கலாம்
சிவகங்கை:தேர்தல் தடை இருந்த போதும், புது ரேஷன் கார்டு, நலத்திட்ட உதவிகள் கேட்டு விண்ணப்பிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.புது ரேஷன் கார்டு, பெயர் மாற்றம், முகவரி மாற்றம் போன்றவற்றிற்காக ஏராளமானவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைகின்றனர். மாவட்ட முழுவதும் ரேஷன் கார்டு கேட்டு 30 ஆயிரம் பேர் விண்ணப்பித்து காத்து கிடக்கின்றனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், நலத்திட்ட உதவிகள் வழங்க தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. ஆனாலும் ரேஷன் கார்டு, பெயர் மாற்றம், நீக்குதலுக்கு விண்ணப்பிக்கலாம். புதிய கார்டுகள் மே 13ம் தேதிக்கு மேல் வழங்கப்படும். மாவட்ட வழங்கல் அலுவலர் ஆதிமூலம் கூறுகையில், ""தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நலத்திட்ட உதவிகள் வழங்க கூடாது. ரேஷன் கார்டு, பட்டா மாறுதல், நலத்திட்டங்கள் கேட்டு விண்ணப்பிக்கலாம். கார்டில் பெயர் மாறுதல், முகவரி மாறுதல், பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் போன்ற அனைத்தும் பணிகளும் தேர்தல் முடிந்தவுடன் நடக்கும்,'' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment