Wednesday, March 9, 2011

இந்திய கிறிஸ்தவர் முன்னணி:12 தொகுதிகளில் போட்டி

மதுரை:""தமிழக சட்டசபை தேர்தலில், இந்திய கிறிஸ்தவர் முன்னணி 12 தொகுதிகளில் போட்டியிடும்,'' என, அதன் தலைவர் எம்.எல்.சோமசுந்தரம் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணிகள் இந்திய கிறிஸ்தவர் முன்னணியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தால், அக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திப்போம். தமிழகத்தில் உள்ள முக்கிய அணிகள் எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, எங்களின் கோரிக்கைகளை ஏற்கவேண்டும். இல்லையெனில், மதுரை மேற்கு, திண்டுக்கல், ஆத்தூர், சிவகங்கை, திருவாடானை, திருச்செந்தூர், சாத்தான்குளம், பாளையங்கோட்டை, தென்காசி, ராதாபுரம், திருச்சி, சேலம் தொகுதிகளில் தனித்து போட்டியிடுவோம், என்றார். பொது செயலாளர் லோகநாதன், தென்மண்டல செயலாளர் அய்யாசாமி உடனிருந்தார்.

No comments:

print