Wednesday, March 9, 2011

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு : மாலைக்குள் முடிவு

சென்னை : அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்த தொகுதி பங்கீடு முடிவு இன்று மாலைக்குள் தெரியும் என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்டின் மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய தா.பாண்டியன் இத்தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் முடிவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இல்லை எனவும், தேர்தலில் அதிமுக கூட்டணியில் வெற்றிக்கு இந்திய கம்யூனிஸ்ட்டும் உழைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

print