Thursday, March 10, 2011
441 பேருக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு
சிவகங்கை:பெண் போலீசாருக்கு பணியில் சேர்ந்த 19 ஆண்டுகளுக்குள் சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி, அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், 1990 -91ல் நேரடியாக 441 பெண்கள் முதல்நிலை போலீசாக ஸ்டேஷன்களில் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் 2003 ல், ஏட்டுகளாக பதவி உயர்வு பெற்றனர். ஏட்டுகளாக 10 ஆண்டுகள் பணியாற்றினால், சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க வேண்டும். அதன்படி, 2013 ல், தான் இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.சலுகை: ஆனால், பெண்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில், இக்கால கட்டத்தில் பணியில் சேர்ந்த பெண் போலீசார் 441 பேருக்கு, சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கி, கடந்த 25 ம் தேதி, உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. ஜன., 2009 முதல், இப்பதவி உயர்வுக்கான பண பயனை பெறலாம் என, தெரிவித்துள்ளது. பணியில் சேர்ந்த 19- 20 ஆண்டுகளிலேயே சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு கிடைத்ததால், பெண் போலீசார் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரம் அவர்களுக்கு முன் பணியில் சேர்ந்து, 25 ஆண்டு நிறைவடைந்த ஆண் ஏட்டுக்கள், பதவி உயர்வு கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment