Thursday, March 10, 2011

பரவிக்கிடக்கும் ஆரத்தி கலாச்சாரம்தேர்தல் கமிஷன் கவனத்திற்கு

சிவகங்கை:ஆரத்தி எடுப்பதன் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கட்சியினருக்கு கடும் விதிகளை அமல்படுத்தி, சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என, கமிஷன் கவனமாக உள்ளது. இருந்த போதும் பல உத்திகளை கையாண்டு பணம் கொடுக்க, கட்சியினர் தயாராக உள்ளனர்.சுப நிகழ்ச்சிகளில் மட்டுமே பெண்கள் ஆரத்தி எடுக்கும் வழக்கம் மாறி, தற்போது தேர்தலில் பணம் கறக்கும் உத்தியாக பயன்படுகிறது. வேட்பாளர்களுக்கு ஆரத்தி எடுத்தால், அதில் ரூபாய் நோட்டை போடும் கலாச்சாரம் எங்கும் பரவிக்கிடக்கிறது. தேர்தல் நெருங்கி விட்டால் கிராமங்களில் ஆராத்தி எடுக்க பெண்கள் போட்டி போடுகின்றனர்.பிரசாரம் செய்ய பயன்படுத்தும் சைக்கிள் முதல் கார்கள் வரை, கண்காணிக்கும் அதிகாரிகள், ஆரத்தி கலாச்சாரத்தில் கோட்டை விடுகின்றனர்.தேர்தல் நன்னடத்தை விதிப்படி, ஆரத்தி எடுப்பது, ஓட்டுக்கு பணம் என்றே அர்த்தம். நேர்மையான தேர்தலை நடத்த, ஆரத்தி கலாச்சாரத்திற்கு கமிஷன் முடிவு கட்ட வேண்டும்.

No comments:

print