Thursday, March 10, 2011
தகவல் கமிஷனர் நியமனத்திற்கு இடைக்கால தடை
சென்னை : மாநில தகவல் கமிஷனர்களாக ராமைய்யா உட்பட 3 பேர் கடந்த 1ம் தேதியன்று நியமிக்கப்பட்டனர். இதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் இவர்கள் நியமிக்கப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனுவை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், தகவல் கமிஷனர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், வரும் 16ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment