புதுச்சேரி : அகில இந்திய என்.ஆர்.காங்., கட்சிக்கு தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கி உள்ளது. புதுச்சேரி முன்னாள் முதல்வர் ரங்கசாமி, அகில இந்திய என்.ஆர்.காங்., என்ற புதிய கட்சியைத் துவக்கி உள்ளார். புதிய கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்காக, தேர்தல் கமிஷனிடம் கடந்த மாதம் 2ம் தேதி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
புதிய கட்சியைப் பதிவு செய்வது தொடர்பான அனைத்து நடைமுறைகளும் பூர்த்தி செய்யப்பட்டதால், அகில இந்திய என்.ஆர்.காங்., கட்சிக்கு முறைப்படியான அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் வழங்கியது. இதற்கான சான்றிதழை கட்சியின் பொதுச் செயலர் பாலன், தேர்தல் கமிஷனிடம் இருந்து நேற்று மாலை பெற்றுக் கொண்டார். இத்துடன், கட்சிக்கு பிரத்தியேகமான சின்னம் ஒதுக்கி தருவது தொடர்பான விண்ணப்பத்தையும் தேர்தல் கமிஷனிடம் அளித்தார்.
No comments:
Post a Comment