மானாமதுரை:சட்டசபை தேர்தலுக்காக, இருப்பிட வரைபடம் (மேப்) தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.தொகுதி வாரியாக வரைபடங்கள் தயாரிக்கும் பணி, தாலுகா அலுவலகங்களில் மும்முரமாக நடக்கிறது. இதில் நில அளவை துறையினர் ஈடுபட்டுள்ளனர். கிராம மாதிரி வரைபடங்களை, இவர்கள் தயாரிக்கின்றனர். ஓட்டுச்சாவடிகள், அதற்கு செல்லும் வழி, அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன், மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், பதட்டமான மையங்கள், ஓட்டு இயந்திரங்கள் கொண்டு வரும் வழி, ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு செல்லும் வழி பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படம் 20 நகல்கள் தயாரிக்கப்பட்டு, கலெக்டர், எஸ்.பி., தேர்தல் பார்வையாளர், பறக்கும் படை அலுவலர், சிறப்பு தாசில்தாருக்கு வழங்கப்படும்.அலுவலர்கள் கூறுகையில், ""முக்கிய இடங்கள் வண்ண அடையாளங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளன. தேர்தல் பணி அலுவலர்களின் தொடர்பு எண்களும் இதில் இருக்கும். இப்பணியில் தலைமை சர்வேயர், தலைமையில் ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.
No comments:
Post a Comment