Friday, March 11, 2011
தேர்தல் வரைபடங்கள்தயாரிக்கும் பணி மும்முரம்
சென்னை:""தேர்தலின் போது கலவரம் செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளார்.தேர்தலை ஒட்டி, தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்களில் வெளியில் உள்ளவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.இதில், சென்னையில் மட்டும், 500க்கும் மேற்பட்டவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.இது குறித்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறும் போது, "சென்னையில் ரவுடிகள், சமூக விரோதிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.தேர்தலை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், தேர்தலின் போது இவர்கள் யாராவது கலவரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment