Wednesday, March 9, 2011

பகுஜன் சமாஜ் எதிர்பார்ப்பு இருபதாவது கிடைக்குமா

திருத்தணி:"வரும் சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., கூட்டணிகளுடன் சேராமல் தனித்து போட்டியிடுவோம். தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் 20 தொகுதியில் வெல்வோம்' என, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலர் மகேந்திர வர்மன் கூறினார்.திருவள்ளூர் மேற்கு மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் செயல் வீரர் கூட்டம் திருத்தணியில் நடந்தது. கட்சியின் மாநில பொதுச்செயலர் மகேந்திர வர்மன் பேசியதாவது:தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தி.மு.க., அ.தி.மு.க., கூட்டணிகளில் சேராமல் தனித்தே போட்டியிடும். மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு வெற்றி பெற பாடுபடுவோம். கட்சித் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் பகுஜன் சமாஜ் கட்சி நிச்சயம் 20 தொகுதிகளிலாவது வெற்றி பெறும்.இவ்வாறு மகேந்திர வர்மன் பேசினார்.

No comments:

print