Thursday, March 10, 2011
தமிழகத்தில் மின் தடை அதிகரிக்கும்: மின் வாரியம் தகவல்
சென்னை: "பொள்ளாச்சி அருகே உள்ள காடாம்பாறை மின் உற்பத்தி நிலையத்தில் இயந்திர பழுது காரணமாக, 400 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால், தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்துள்ளது' என, மின்வாரியம் தெரிவித்துள்ளது. தென்னக மின்தொகுப்பு குறைந்த அதிர்வு எண்ணில் இயங்குவதால், "பொள்ளாச்சி, காடாம்பாறை மின்னேற்று உற்பத்தி நிலையத்தில் உள்ள நான்கு 100 மெகாவாட் இயந்திரங்களை பம்ப் நிலையில் இயக்க இயலாததால், பகல் நேரங்களில் 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய இயலவில்லை. இதனால், பகல் தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை என்றும், நிலைமை விரைவில் சீரடையும் என்றும் மின்வாரியம் விளக்கமளித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment