Thursday, March 10, 2011

புதுவையில் தொகுதி பங்கீடு பேச்சு: தி.மு.க., ஐவர் குழு அமைப்பு

சென்னை: தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் அறிக்கை: சட்டசபை தேர்தலில், புதுச்சேரியில் காங்., மற்றும் தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசி உடன்பாடு செய்து கொள்ள, தி.மு.க., சார்பில், ஐவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், புதுச்சேரி முன்னாள் முதல்வரும் தி.மு.க., அமைப்பாளருமான ஜானகிராமன், காரைக்கால் அமைப்பாளர் நாஜீம், புதுச்சேரி மாநில துணை அமைப்பாளர் சிவகுமார், எம்.எல்.ஏ., சுப்ரமணியம் ஆகியோர், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

No comments:

print