புதுடெல்லி: தேமுதிக உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 கட்சிகளுக்கு தனிச்சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக 41 இடங்களில் போட்டியிடுகிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால், தற்போதைய தேர்தலில் இதே சின்னத்தை மீண்டும் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்து விட்டது. இதைத்தொடர்ந்து, ‘முரசு’ சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என தேமுதிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ‘நட்சத்திர சின்னம்’ கோரியும், கொங்குநாடு முன்னேற்ற கழகம் ‘சிலிண்டர்’ சின்னம் கோரியும், மனிதநேய மக்கள் கட்சி ‘மெழுகுவர்த்தி’ சின்னம் கோரியும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அல்தமாஸ் கபீர், சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் ஒரே நேரத்தில் விசாரிக்கப்பட்டது. தேமுதிக சார்பில் வக்கீல் வேணுகோபால் ஆஜராகி, ‘‘கடந்த சட்டமன்ற தேர்தலில் 8.3 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். தேமுதிகவுக்கு ‘முரசு’ சின்னம் என்பது மக்கள் மனதில் பதிந்துவிட்டது. எனவே, அதே சின்னத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும்’’ என்றார்.
தேர்தல் ஆணையம் சார்பில் வக்கீல் அசோக் தேசாய் ஆஜராகி, ‘‘ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்ற தேமுதிகவுக்கு தனிச்சின்னம் ஒதுக்க சட்டவிதிகளில் இடம் இல்லை’’ என்றார். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘ சட்டப்பேரவை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத தேமுதிக உள்ளிட்ட 4 கட்சிகளின் கோரிக்கையை ஏற்க முடியாது. தனிச்சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது. தனி சின்னம் கேட்டு அந்த கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம்தான் முறையிட வேண்டும்’’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

No comments:
Post a Comment