சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (19&ம் தேதி) துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. வேட்பாளர்கள் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்ய போலீசார் தடை விதித்துள்ளனர். தமிழக சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வருவதையடுத்து ஏப்ரல் 13&ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அறிவிப்பை கடந்த 2&ம் தேதி தேர்தல் கமிஷன் வெளியிட்டது. தமிழகம் மட்டுமில்லாமல் கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கும் இதே தேதியில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆரம்பத்தில் இருந்த விதிமுறைகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு, பல கோடி ரூபாய் மற்றும் நகைகள், சேலைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சுவர் விளம்பரம் எழுதவும், கட்சிக் கொடிகள், பேனர்கள் கட்டவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிமாநில ஐபிஎஸ் அதிகாரிகள் 5 பேர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் விதிமீறல், வன்முறை சம்பவங்களை கண்காணித்து அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (19&ம் தேதி) துவங்குகிறது. மாநிலத்தின் அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களுக்கு வழங்குவதற்குரிய படிவங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்ய வருவோருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ‘எக்காரணம் கொண்டும் ஊர்வலமாக வரக்கூடாது. மனு தாக்கல் அறையில் வேட்பாளருடன் ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். சுயேச்சை வேட்பாளருக்கு மட்டும் முன்மொழிய 10 பேர் அனுமதிக்கப்படுவர்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை மனு தாக்கல் நடக்கும். சம்பந்தப்பட்ட தொகுதிக்கான தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக மனு தாக்கல் செய்ய வேண்டும். மனு தாக்கலின்போது சொத்து விவரம், கல்வித்தகுதி, நிலுவை வழக்குகள் குறித்த ஆவணங்களையும் வேட்பாளர்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஞாயிறுக்கிழமை விடுமுறை.
234 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. மனு தாக்கலுக்கு 26&ம் தேதி கடைசி நாள். மனுக்கள் மீதான பரிசீலனை 28&ம் தேதி நடக்கிறது. அன்றே சின்னங்கள் ஒதுக்கப்படும். மனு வாபஸ் பெற 30&ம் தேதி இறுதிநாள். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 13&ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஒரு மாதம் கழித்து மே 13&ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. சட்டமன்ற தேர்தலை கண்காணிக்க பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் இன்று தமிழகம் வருகின்றனர். மனு தாக்கல் துவங்கும் நாளில் இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனர்.
தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தயார் நிலையில் உள்ளன. திமுக, தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மூவேந்தர் முன்னேற்ற கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு முடிந்து, தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் பட்டியலை முதல்வர் கருணாநிதி இன்று மாலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக தலைமையில் தேமுதிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. 160 தொகுதிகளுக்கு அதிமுக தன்னிச்சையாக தொகுதிகளை ஒதுக்கியதால் ஏற்பட்ட அதிருப்தியில், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தேமுதிக, இடதுசாரிகள் மாற்று நடவடிக்கை குறித்து ஆலேசித்து வருகின்றன. தனித்து போட்டியிடும் பா.ஜ வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவே அறிவித்துள்ளது. கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், இந்திய ஜனநாயக கட்சி ஆகியவையும் தனித்து போட்டியிடுகின்றன.

No comments:
Post a Comment