Wednesday, March 9, 2011
காங்.,போட்டியிடும் தொகுதிகள் நாளை தெரியும்:தங்கபாலு
சென்னை : தமிழக முதல்வர் கருணாநிதியை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் தங்கபாலு இன்று அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் நாளை இறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த சந்திப்பின் போது தொகுதி உடன்பாடு ஒப்பந்தத்தில் கருணாநிதி மற்றும் தங்கபாலு ஆகியோர் கையெழுத்திட்டனர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment