புதுடில்லி: எம்.பி.,க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி காரணமாக இன்று பார்லி., யில் கடும் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து கூச்சல் , குழப்பம் நிலவியதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்ந்தம் தொடர்பாக நம்பிக்கை ஓட்டெடுப்பு கடந்த 2008 ஜூலை மாதம் நடந்தது.
இந்த ஓட்டெடுப்பின் போது காங்கிரஸ் அரசு காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ராஷ்டிரிய லோக்தள் கட்சி எம்.பி.,க்களுக்கு தலா ரூ. 10 கோடி வீதம் காங்கிரஸ் கட்சி சார்பில் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை விக்கலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இந்த பிரச்னையை பார்லி.,யின் இரு அவைகளிலும் எதிர்கட்சி எம்.பி.,க்கள் எழுப்பினர். இதனை காங்கிரஸ் மறுத்தது. இதன் காரணமாக பெரும் கூச்சல், குழப்பம் நிலவியதால் இரு அவைகளும் 2 முறை ஒத்தி வைக்கப்பட்டன.
ஊழல் மலிந்து விட்டது அத்வானி தாக்கு : ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டதாக தெரிவித்த பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும் என தெரிவித்துள்ளார்.அத்வானி மேலும் பேசுகையில்; காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், எஸ்.பேண்ட் முறைகேடு என ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன்சிங் ராஜினாமா செய்ய வேண்டும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆளும் தகுதியை இழந்து விட்டதாகவும் கூறினார். இடது சாரி கட்சியினரும் கடுமையாக சாடியுள்ளனர்.

No comments:
Post a Comment