Thursday, February 24, 2011

தி.மு.க.,-காங்.,கூட்டணியால்இளங்கோவன் தனிக் கட்சி

மதுரை:""தி.மு.க.,-காங்.,கூட்டணி ஏற்பட்டால் மூப்பனார் போல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தனிக்கட்சி துவக்குவார்,'' என ம.தி.மு.க.,கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார். விலைவாசி உயர்வை கண்டித்து மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:எகிப்தை 30 ஆண்டுகள் ஆட்சி செய்த ஹோசினி முபாரக்கிற்கு எதிராக மக்கள் புரட்சி செய்து, அவரை அகற்றினர். டுனீசியா அதிபர் பென் அலி வெளியேற்றப்பட்டார். லிபியா தலைவர் கடாபிக்கு எதிராக போராடுகின்றனர். இப்படி இஸ்லாமிய நாடுகளில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது. தமிழகத்தில் கருணாநிதியின் குடும்ப ஆட்சியை அகற்ற மக்கள் முடிவு செய்து விட்டனர். ஜாதி அரசியலுக்கு நெய் வார்த்தவர் ராமதாஸ். கலைஞர் "டிவி'யில் சி.பி.ஐ.,சோதனை மேற்கொண்டதை திசை திருப்ப, கருணாநிதி பா.ம.க.,வுடன் தொகுதி உடன்பாடு செய்தார்.தி.மு.க.,விற்கு இனி காங்., என்னென்ன நெருக்கடி தரப்போகிறதோ? தி.மு.க.,- காங்., கூட்டணி வந்தால் மூப்பனார் போல் தனிக்கட்சி துவக்கப்போவதாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகிறார். தமிழகத்தை ஒரு லட்சத்து 543 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் வைத்துள்ளனர். குஜராத்தில் மின்வெட்டு இல்லை. அங்கு முதல்வர் நரேந்திர மோடி ஒரு லட்சம் கோடியை மிச்சப்படுத்தி, வங்கியில் "டிபாசிட்' செய்து சிறப்பாக ஆட்சி செய்கிறார்.ம.தி.மு.க.,விற்கு 40 தொகுதிகள் ஒதுக்குமாறு ஜெ.,விடம் கோரியுள்ளோம், என்றார்.நகர் செயலாளர் பூமிநாதன், அவைத் தலைவர் சின்னசெல்லம், தொழிற்சங்க நிர்வாகி மகபூப்ஜான் பங்கேற்றனர்.

No comments:

print